தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-580

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்: 202

மக்களுக்கு தொழுகை நடத்துவதின் சிறப்பு.

மக்களுக்கு தொழுவிப்பவர் சரியான நேரத்தில் தொழுகை நடத்தினால் அவருக்கும் நன்மையாகும்! மக்களுக்கும் நன்மையாகும்! இதில் எதையேனும் அவர் குறைவைத்தால் அவருக்கே அது தீமையாகும். மக்கள் மீது அது தீமையாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

(அபூதாவூத்: 580)

202 – بَابٌ فِي جُمَّاعِ الْإِمَامَةِ وَفَضْلِهَا

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ أَبِي عَلِيٍّ الْهَمْدَانِيِّ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ فَلَهُ وَلَهُمْ، وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-580.
Abu-Dawood-Alamiah-492.
Abu-Dawood-JawamiulKalim-491.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . ஸுலைமான் பின் தாவூத்

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

4 . யஹ்யா பின் அய்யூப்

5 . அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா

6 . ஸுமாமா பின் ஷுஃபை-அபூஅலீ

7 . உக்பா பின் ஆமிர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48056-யஹ்யா பின் அய்யூப், ராவீ-21663-அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா ஆகியோர் நடுத்தரமானவர்கள் என்பதால் இது ஹஸன் தர அறிவிப்பாளர் தொடராகும். இந்தக் கருத்தில் வேறு சில செய்திகளும் வந்துள்ளதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.

  • 1 . இந்தச் செய்தியை யஹ்யா பின் அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் வஹ்ப், ஸயீத் பின் அபூமர்யம் ஆகியோர், யஹ்யா பின் அய்யூப் —> அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா —> ஸுமாமா பின் ஷுஃபை —> உக்பா பின் ஆமிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
  • அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா அவர்களிடமிருந்து வேறு சிலரும் இவ்வாறே இந்தச் செய்தியை அறிவித்துள்ளனர்.

  • 2 . இந்தச் செய்தியை யஹ்யா பின் அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் கஸீர் அவர்கள் மட்டும், யஹ்யா பின் அய்யூப் —> ஹர்மலா பின் இம்ரான் —> ஸுமாமா பின் ஷுஃபை —> உக்பா பின் ஆமிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். அதாவது யஹ்யா பின் அய்யூப் அவர்களின் ஆசிரியராக ஹர்மலா பின் இம்ரான் அவர்களை கூறியுள்ளார்.

(நூல்: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-2197)


  • தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
    இறப்பு ஹிஜ்ரி 321
    வயது: 83
    இமாம் அவர்கள், ஹதீஸ்கலை அறிஞர்கள் இந்தச் செய்தியில் யஹ்யா பின் அய்யூப் அவர்களின் ஆசிரியராக இடம்பெறுபவர் ஹர்மலா பின் இம்ரான் என்பதே சரி என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காரணம் அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா அவர்கள் ஸுமாமா பின் ஷுஃபை-அபூஅலீ அவர்களிடம் செவியேற்றதாக தகவல் இல்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-2196)


  • என்றாலும் அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா அவர்கள் ஸுமாமா பின் ஷுஃபை-அபூஅலீ அவர்களிடம் செவியேற்ற தகவல் யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்களின் நூலில் இடம்பெற்றுள்ளது.

المعرفة والتاريخ – ت العمري – ط العراق (2/ 501):
حَدَّثَنِي سَعِيدُ بْنُ أبي مريم أخبرنا يحي بن أيوب عن عبد الرحمن ابن حَرْمَلَةَ قَالَ: أَخْبَرَنِي أَبُو عَلِيٍّ الْهَمْدَانِيُّ– سَكَنَ الْإِسْكَنْدَرِيَّةَ- قَالَ: خَرَجْتُ فِي سَفَرٍ وَمَعَنَا عُقْبَةُ بْنُ عَامِرٍ فَقُلْنَا لَهُ: أُمَّنَا. فَقَالَ: لَسْتُ بِفَاعِلٍ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ وَأَتَمَّ الصَّلَاةَ فَلَهُ وَلَهُمْ، ‌وَمَنْ ‌نَقَصَ ‌مِنْ ‌ذَلِكَ ‌شَيْئًا ‌فَعَلَيْهِ ‌وَلَا ‌عَلَيْهِمْ.

(நூல்: அல்மஃரிஃபது வத்தாரீக்-2/501)


  • மேலும், யஹ்யா பின் அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் வஹ்ப், ஸயீத் பின் அபூமர்யம் ஆகியோர் ஸயீத் பின் கஸீர் அவர்களை விட பலமானவர்கள் என்பதால் அவர்களின் அறிவிப்பே முன்னுரிமை பெற்றதாகும்.

1 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஅலீ அல்ஹம்தானீ —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, இப்னு மாஜா-983, அபூதாவூத்-580, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-1513, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-2196, 2197, இப்னு ஹிப்பான்-2221, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


 

 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-694,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.