தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-580

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

பாடம்: 202

மக்களுக்கு தொழுகை நடத்துவதின் சிறப்பு.

580. “மக்களுக்கு தொழுவிப்பவர் சரியான நேரத்தில் தொழுகை நடத்தினால் அவருக்கும் நன்மையாகும்! மக்களுக்கும் நன்மையாகும்! இதில் எதையேனும் அவர் குறைவைத்தால் அவருக்கே அது தீமையாகும். மக்கள் மீது அது தீமையாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்:உக்பா பின் ஆமிர் (ரலி)

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.


202 – بَابٌ فِي جُمَّاعِ الْإِمَامَةِ وَفَضْلِهَا

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ أَبِي عَلِيٍّ الْهَمْدَانِيِّ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ فَلَهُ وَلَهُمْ، وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-580.
Abu-Dawood-Alamiah-492.
Abu-Dawood-JawamiulKalim-491.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . ஸுலைமான் பின் தாவூத்

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

4 . யஹ்யா பின் அய்யூப்

5 . அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா

6 . ஸுமாமா பின் ஷுஃபை-அபூஅலீ

7 . உக்பா பின் ஆமிர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48056-யஹ்யா பின் அய்யூப், ராவீ-21663-அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா ஆகியோர் நடுத்தரமானவர்கள் என்பதால் இது ஹஸன் தர அறிவிப்பாளர் தொடராகும். இந்தக் கருத்தில் வேறு சில செய்திகளும் வந்துள்ளதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.

  • 1 . இந்தச் செய்தியை யஹ்யா பின் அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் வஹ்ப், ஸயீத் பின் அபூமர்யம் ஆகியோர், யஹ்யா பின் அய்யூப் —> அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா —> ஸுமாமா பின் ஷுஃபை —> உக்பா பின் ஆமிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
  • அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா அவர்களிடமிருந்து வேறு சிலரும் இவ்வாறே இந்தச் செய்தியை அறிவித்துள்ளனர்.

  • 2 . இந்தச் செய்தியை யஹ்யா பின் அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் கஸீர் அவர்கள் மட்டும், யஹ்யா பின் அய்யூப் —> ஹர்மலா பின் இம்ரான் —> ஸுமாமா பின் ஷுஃபை —> உக்பா பின் ஆமிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். அதாவது யஹ்யா பின் அய்யூப் அவர்களின் ஆசிரியராக ஹர்மலா பின் இம்ரான் அவர்களை கூறியுள்ளார்.

(நூல்: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-2197)


  • தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
    இறப்பு ஹிஜ்ரி 321
    வயது: 83
    இமாம் அவர்கள், ஹதீஸ்கலை அறிஞர்கள் இந்தச் செய்தியில் யஹ்யா பின் அய்யூப் அவர்களின் ஆசிரியராக இடம்பெறுபவர் ஹர்மலா பின் இம்ரான் என்பதே சரி என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காரணம் அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா அவர்கள் ஸுமாமா பின் ஷுஃபை-அபூஅலீ அவர்களிடம் செவியேற்றதாக தகவல் இல்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-2196)


  • என்றாலும் அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா அவர்கள் ஸுமாமா பின் ஷுஃபை-அபூஅலீ அவர்களிடம் செவியேற்ற தகவல் யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்களின் நூலில் இடம்பெற்றுள்ளது.

المعرفة والتاريخ – ت العمري – ط العراق (2/ 501):
حَدَّثَنِي سَعِيدُ بْنُ أبي مريم أخبرنا يحي بن أيوب عن عبد الرحمن ابن حَرْمَلَةَ قَالَ: أَخْبَرَنِي أَبُو عَلِيٍّ الْهَمْدَانِيُّ– سَكَنَ الْإِسْكَنْدَرِيَّةَ- قَالَ: خَرَجْتُ فِي سَفَرٍ وَمَعَنَا عُقْبَةُ بْنُ عَامِرٍ فَقُلْنَا لَهُ: أُمَّنَا. فَقَالَ: لَسْتُ بِفَاعِلٍ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ وَأَتَمَّ الصَّلَاةَ فَلَهُ وَلَهُمْ، ‌وَمَنْ ‌نَقَصَ ‌مِنْ ‌ذَلِكَ ‌شَيْئًا ‌فَعَلَيْهِ ‌وَلَا ‌عَلَيْهِمْ.

(நூல்: அல்மஃரிஃபது வத்தாரீக்-2/501)


  • மேலும், யஹ்யா பின் அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் வஹ்ப், ஸயீத் பின் அபூமர்யம் ஆகியோர் ஸயீத் பின் கஸீர் அவர்களை விட பலமானவர்கள் என்பதால் அவர்களின் அறிவிப்பே முன்னுரிமை பெற்றதாகும்.

1 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஅலீ அல்ஹம்தானீ —> உக்பா பின் ஆமிர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, இப்னு மாஜா-983, அபூதாவூத்-580, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-1513, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-2196, 2197, இப்னு ஹிப்பான்-2221, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


 

 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-694,

அபூதாவூத் இமாம்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

ஸுலைமான் பின் தாவூத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் வஹ்ப்

عبد الله بن وهب بن مسلم

இறப்பு: ஹிஜ்ரி 197, எகிப்து

தரம்: மிகப் பலமானவர், மனனமிட்டவர், வணக்கசாலி


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் வஹ்ப் பின் முஸ்லிம்

தந்தை பெயர்: வஹ்ப் பின் முஸ்லிம்

வம்சம்: குரைஷீ, பனூ ஃபிஹ்ர் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ முஹம்மத், அல்ஃபகீஹ்

ஊர் பெயர்: எகிப்து

பயணித்த ஊர்கள்: எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 125, எகிப்து

இறப்பு: ஹிஜ்ரி 197, எகிப்து

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் வஹ்ப் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 125 இல் எகிப்தில் பிறந்தார். அவர் மிகப் பலமானவர், மனனமிட்டவர் மற்றும் வணக்கசாலி ஆவார். அவர் ஒரு ஃகீஹ் (சட்ட வல்லுநர்) மற்றும் ஹதீஸ் அறிஞர் ஆவார்.

ஹிஜாஸ் மற்றும் எகிப்து மக்களின் ஹதீஸ்களை சேகரித்து, மனனமிட்டு, தொகுத்தவர் இவர். அவர் ஹிஜ்ரி 197 இல் எகிப்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அம்ர் பின் அல்ஹாரிஸ், ஹுமைத் பின் ஹானி அபூ, ஹுஸைன் பின் அப்துல்லாஹ் அல்முஆஃபிரீ, பக்ர் பின் மத்ர், ஹைவத் பின் ஷுரைஹ், ஸயீத் பின் அபூஅய்யூப், அல்லைஸ் பின் ஸஃத், அப்துல்லாஹ் பின் லஹீஆ, அய்யாத் பின் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் பின் ஷுரைஹ், மாலிக் இமாம், ஸுலைமான் பின் பிலால் அத்தய்மீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஹ்மத் பின் அப்துர்ரஹ்மான், அப்துல்லாஹ் பின் யூசுஃப் அத்துனைஸீ, அஹ்மத் பின் ஸாலிஹ் அல்மஸ்ரீ, யஹ்யா பின் யஹ்யா பின் புகைர், அலீ பின் அல்மதீனீ, ஸயீத் பின் அபூமர்யம், இப்ராஹீம் பின் அல்மன்திர், அஸ்பஃக் பின் அல்ஃபரஜ், அஹ்மத் பின் அம்ர் பின் அஸ்ஸர்ஹ், ஹர்மலா பின் யஹ்யா, குதைபா பின் ஸயீத், ஈஸா பின் ஹம்மாத்

வேறு பெயர்கள்: இப்னு வஹ்ப், பின் வஹ்ப்


ஆதாரம்: muslimscholars.info (20029) · Should verify

யஹ்யா பின் அய்யூப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துர்ரஹ்மான் பின் ஹர்மலா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸுமாமா பின் ஷுஃபை-அபூஅலீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

உக்பா பின் ஆமிர் (ரலி)

عقبة بن عامر الجهني

இறப்பு: ஹிஜ்ரி 58, எகிப்து

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: உக்பா பின் ஆமிர் பின் அப்ஸ் பின் அம்ர் பின் அதீ பின் அம்ர் பின் ரிஃபாஆ பின் மவ்தூஆ பின் அதீ பின் ஃகன்ம் பின் அர்ரப்ஆ

தந்தை பெயர்: ஆமிர் பின் அப்ஸ்

வம்சம்: ஜுஹைனா

புனைப்பெயர்: அபூ அஸ்அத், அபூ அப்ஸ், அபூ ஆமிர், அபூ ஹம்மாத், அபூ ஸஅத், அபூ அம்ர், அபூ அஸ்வத்

ஊர் பெயர்: ஹிஜாஸ்

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், எகிப்து

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 58, எகிப்து

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

உக்பா பின் ஆமிர் ரலி அவர்கள் நபித்தோழர் ஆவார். இவர் எகிப்தை வெற்றி கொண்ட முஸ்லிம் படைகளின் தளபதிகளில் ஒருவராக இருந்தார். முஆவியா ரலி அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டுகள் எகிப்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.

இவர் ஒரு அறிஞர், குர்ஆன் ஓதுபவர், சட்ட வல்லுநர் மற்றும் கவிஞர் ஆவார். ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு எகிப்தில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ உமாமா அல்பாஹிலீ, இப்னு அப்பாஸ், கைஸ் பின் அபூஹாஸிம், ஜுபைர் பின் நுஃபைர் அல்ஹள்ரமீ, பஃஜா பின் அப்துல்லாஹ், தகீன் பின் ஆமிர் அல்ஹஜ்ரீ, ரப்ஈ பின் ஹராஷ், சுமாமா பின் ஷஃபீ, அப்துர்ரஹ்மான் பின் ஷமாஸா, அலீ பின் ரபாஹ், மர்ஸத் பின் அப்துல்லாஹ் அல்யஸனீ, முஷ்ரஹ் பின் ஹாஆன் அல்மஃஆஃபிரீ

வேறு பெயர்கள்: அபூ ஹம்மாத், அபூ ஸஅத், அபூ அம்ர், அபூ அஸ்வத், அபூ அஸ்அத், அபூ அப்ஸ், உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ


ஆதாரம்: muslimscholars.info (189) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.