தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3812

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குதிரைகளின் நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) நன்மையும் போர்ச்செல்வமும் மறுமை நாள்வரை கிடைக்குமே!” என்று விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1 . மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் (உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களின் தந்தை பெயருடன் இணைத்து) உர்வா பின் அல்ஜஃத் (ரலி) என இடம் பெற்றுள்ளது.

2 . மேற்கண்ட ஹதீஸ் உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) பிரதிபலனும் போர்ச்செல்வமும் கிடைக்குமே!” எனும் குறிப்பு இல்லை.

3 . மேலும் இந்த ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் வழியாக வரும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் ஷபீப் பின் ஃகர்கத் (ரஹ்) அவர்கள், உர்வா (ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்டதாகவும், உர்வா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாக கேட்டதாகவும் இடம்பெற்றுள்ளது. 

4 . மேற்கண்ட ஹதீஸ் உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றிலும் “(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) பிரதிபலனும் போர்ச்செல்வமும் கிடைக்குமே!” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 33

(முஸ்லிம்: 3812)

وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، وَابْنُ إِدْرِيسَ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«الْخَيْرُ مَعْقُوصٌ بِنَوَاصِي الْخَيْلِ»، قَالَ: فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللهِ، بِمَ ذَاكَ؟ قَالَ: «الْأَجْرُ وَالْمَغْنَمُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»

– وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ حُصَيْنٍ بِهَذَا الْإِسْنَادِ، غَيْرَ أَنَّهُ قَالَ: عُرْوَةُ بْنُ الْجَعْدِ ،

– حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَخَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، جَمِيعًا عَنْ أَبِي الْأَحْوَصِ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، كِلَاهُمَا عَنْ سُفْيَانَ، جَمِيعًا عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَذْكُرْ: «الْأَجْرَ وَالْمَغْنَمَ»، وَفِي حَدِيثِ سُفْيَانَ: سَمِعَ عُرْوَةَ الْبَارِقِيَّ، سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

– وحَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، ح وحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، كِلَاهُمَا عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْجَعْدِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا وَلَمْ يَذْكُرْ: «الْأَجْرَ وَالْمَغْنَمَ»


Muslim-Tamil-3812.
Muslim-TamilMisc-3481.
Muslim-Shamila-1873.
Muslim-Alamiah-3481.
Muslim-JawamiulKalim-3487.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: புகாரி-2852.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.