பாடம்: 44
நல்லவர் மற்றும் கெட்டவரின் தலைமையின் கீழ் (மறுமைநாள் வரை) அறப்போர் நடந்து கொண்டிருக்கும்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வின் பாதையில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் (அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுவதால் கிடைக்கும்) நற்கூலியும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும்.
அறிவிப்பவர்: உர்வா பின் அபுல்ஜஃத் அல்பாரிகீ (ரலி)
அத்தியாயம்: 56
(புகாரி: 2852)بَابٌ: الجِهَادُ مَاضٍ مَعَ البَرِّ وَالفَاجِرِ
لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الخَيْرُ إِلَى يَوْمِ القِيَامَةِ»
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، حَدَّثَنَا عُرْوَةُ البَارِقِيُّ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
الخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الخَيْرُ إِلَى يَوْمِ القِيَامَةِ: الأَجْرُ وَالمَغْنَمُ
Bukhari-Tamil-2852.
Bukhari-TamilMisc-2852.
Bukhari-Shamila-2852.
Bukhari-Alamiah-2640.
Bukhari-JawamiulKalim-2653.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன்
3 . ஸகரிய்யா பின் காலித்
4 . ஷஅபீ-ஆமிர் பின் ஷராஹீல்
5 . உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி)
1 . இந்தக் கருத்தில் உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
—> உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-2850, 2852, 3119, முஸ்லிம்-3811, 3812, திர்மிதீ-1694, நஸாயீ-3574, 3575, 3576, 3577, …
- ஷபீப் பின் ஃகர்கத் —> உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-3812, இப்னு மாஜா-2786, …
- அபூஇஸ்ஹாக் —> உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, …
- அபூஇஸ்ஹாக் —> அய்ஸார் பின் ஹுரைஸ் —> உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி)
பார்க்க: முஸ்லிம்-3812, …
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-2849.
3 . ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-3810.
4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-2851.
…
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-2305,
தொடர்புடைய கேள்வி:
https://onlinepj.co.in/videos/?id=763397684