தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4321

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்க(ள் அன்சாரிக)ளில் ஒருவருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அதற்கு அவர் “முஹம்மத்” எனப் பெயர் சூட்டினார். அவருடைய குடும்பத்தார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம்” என்று கூறினர்.

ஆகவே, அந்த மனிதர் தம் மகனை முதுகில் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அவனுக்கு நான் “முஹம்மத்” எனப் பெயரிட்டேன். என்னுடைய சமுதாயத்தார் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர் வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம்” என்று கூறினர்” என்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் (இயற்)பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். (ஆனால் “அபுல்காசிம் எனும்) எனது குறிப்புப்பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே பங்கீடு செய்பவன் (காசிம்) ஆவேன். உங்களிடையே நான் பங்கீடு செய்கிறேன்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 38

(முஸ்லிம்: 4321)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ عُثْمَانُ: حَدَّثَنَا، وقَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ

وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلَامٌ فَسَمَّاهُ مُحَمَّدًا، فَقَالَ لَهُ قَوْمُهُ: لَا نَدَعُكَ تُسَمِّي بِاسْمِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقَ بِابْنِهِ حَامِلَهُ عَلَى ظَهْرِهِ فَأَتَى بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، وُلِدَ لِي غُلَامٌ فَسَمَّيْتُهُ مُحَمَّدًا فَقَالَ لِي قَوْمِي: لَا نَدَعُكَ تُسَمِّي بِاسْمِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلَا تَكْتَنُوا بِكُنْيَتِي، فَإِنَّمَا أَنَا قَاسِمٌ أَقْسِمُ بَيْنَكُمْ»


Tamil-4321
Shamila-2133
JawamiulKalim-3983




மேலும் பார்க்க:  புகாரி-3114 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.