பாடம் : 7
அல்லாஹ் கூறுகிறான்:
மேலும், நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்: போரில் உங்களுக்குக் கிடைக்கும் பொருள்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியதாகும். (8:41)
அதாவது, இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப்பாளனும் மட்டுமேயாவேன். அல்லாஹ் தான் கொடுக்கின்றான்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.
எங்களில் – அன்சாரிகளில் – ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு ‘முஹம்மத்’ என்று பெயர் வைக்க அவர் விரும்பினார். அந்த அன்சாரித் தோழர் (அனஸ் இப்னு ஃபுளாலா(ரலி)) என்னிடம் கூறினார்: நான் அக்குழந்தையை என் கழுத்தில் சுமந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்; நபி(ஸல்) அவர்கள், ‘என் பெயரைச் சூட்டி அழையுங்கள். ஆனால், (அபுல் காசிம் என்னும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டி அழைக்காதீர்கள். ஏனெனில், நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே ஆக்கப்பட்டுள்ளேன்.
மற்றோர் அறிவிப்பில் ஜாபிர் (ரலி) கூறினார் என இடம் பெற்றுள்ளதாவது:
அந்த அன்சாரித் தோழர் ‘காசிம்’ என்ற நபி (ஸல்) அவர்களின் பெயரைத் தன் குழந்தைக்குச் சூட்ட விரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்’ என்றார்கள்.
Book : 57
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ} [الأنفال: 41]
يَعْنِي: لِلرَّسُولِ قَسْمَ ذَلِكَ ” قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّمَا أَنَا قَاسِمٌ وَخَازِنٌ وَاللَّهُ يُعْطِي
حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، وَقَتَادَةَ، سَمِعُوا سَالِمَ بْنَ أَبِي الجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
وُلِدَ لِرَجُلٍ مِنَّا مِنَ الأَنْصَارِ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا، – قَالَ شُعْبَةُ فِي حَدِيثِ مَنْصُورٍ: إِنَّ الأَنْصَارِيَّ قَالَ: حَمَلْتُهُ عَلَى عُنُقِي، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي حَدِيثِ سُلَيْمَانَ، وُلِدَ لَهُ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا -، قَالَ: «سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنِّي إِنَّمَا جُعِلْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ»، وَقَالَ حُصَيْنٌ: «بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ»، قَالَ عَمْرٌو: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ سَالِمًا، عَنْ جَابِرٍ، أَرَادَ أَنْ يُسَمِّيَهُ القَاسِمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي»
Bukhari-Tamil-3114.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3114.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . ஸாலிம் —> ஜாபிர் (ரலி)
பார்க்க : அஹ்மத்-14183 , 14249 , 14363 , 14963 , 14964 , 14973 , 15130 , புகாரி-3114 , 3115 , 3538 , 6187 , 6196 , முஸ்லிம்-4321 , 4322 , 4323 , 4324 , 4325 , ஹாகிம்-7735 , 7736 ,
2 . அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)
பார்க்க : அஹ்மத்-14357 , அபூதாவூத்-4966 , திர்மிதீ-2842 , இப்னு ஹிப்பான்-5816 ,
3 . அஃமஷ் —> தல்ஹா —> ஜாபிர் (ரலி)
பார்க்க : அஹ்மத்-14364 , இப்னு மாஜா-3736 ,
4 . இப்னுல் முன்கதிர் —> ஜாபிர் (ரலி)
பார்க்க : அஹ்மத்-14296 , புகாரி-6186 , 6189 , முஸ்லிம்-4325 ,
சமீப விமர்சனங்கள்