அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பல பெயர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். “நான் “முஹம்மத்” (புகழப்பட்டவர்), “அஹ்மத்” (இறைவனை அதிகமாகப் போற்றுபவர்), “முகஃப்பீ” (இறுதியானவர்), “ஹாஷிர்” (ஒன்றுதிரட்டுபவர்), “நபிய்யுத் தவ்பா” (பாவமன்னிப்புடன் வந்த தூதர்), “நபிய்யுர் ரஹ்மத்” (இரக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு போதிக்க வந்த தூதர்) ஆவேன்” என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 43
(முஸ்லிம்: 4698)وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَمِّي لَنَا نَفْسَهُ أَسْمَاءً، فَقَالَ: «أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَالْمُقَفِّي، وَالْحَاشِرُ، وَنَبِيُّ التَّوْبَةِ، وَنَبِيُّ الرَّحْمَةِ»
Muslim-Tamil-4698.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2355.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-4351.
2 . இந்தக் கருத்தில் அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அம்ர் பின் முர்ரா —> அபூஉபைதா —> அபூமூஸா (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, முஸ்லிம்-4698 , முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-4417 , அல்முஃஜமுஸ் ஸகீர்-, ஹாகிம்-4185 ,
- இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> அவ்ஸாஈ —> அம்ர் பின் முர்ரா —> அபூஉபைதா —> அபூமூஸா (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4338 ,
மேலும் பார்க்க: புகாரி-4896 .
சமீப விமர்சனங்கள்