அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
61 . அஸ்ஸஃப் (எனும் 61 வது அத்தியாயம்)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(அல்குர்ஆன்: 61:14) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மன் அன்ஸாரீ இலல்லாஹ்’ (இறைவழியில் எனக்கு உதவி புரிபவர் யார்?) என்பதன் கருத்தாவது:
இறைவழியில் என்னைப் பின்பற்றி நடப்பவர் யார்?
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(அல்குர்ஆன்: 61:4) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மர்ஸூஸ்’ எனும் சொல்லுக்கு ‘ஒன்றோடொன்று (வலுவுடன்) இணைக்கப்பட்டது” என்பது பொருள்.
மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘மர்ஸூஸ்’ என்பதற்கு ‘ஈயத்தால் வார்க்கப்பட்டது’ என்பது பொருள்.
பாடம்: 1
எனக்குப் பிறகு அஹ்மத் எனும் பெயருடைய தூதர் ஒருவர் வருவார் (என ஈஸா அலை கூறினார்) எனும் (அல்குர்ஆன்: 61:6) ஆவது வசனத் தொடர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பல பெயர்கள் உண்டு.
1 . நான் ‘முஹம்மது’ (புகழப்பட்டவர்) ஆவேன்.
2 . இன்னும் நான் ‘அஹ்மத்’ (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன்.
3 . நான் ‘மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன். அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான்.
4 . நான் ‘ஹாஷிர்’ (ஒருங்கிணைப்பவர்) ஆவேன். என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.
5 . நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
அத்தியாயம்: 65
(புகாரி: 4896)سُورَةُ الصَّفِّ
وَقَالَ مُجَاهِدٌ: {مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ} [آل عمران: 52] مَنْ يَتَّبِعُنِي إِلَى اللَّهِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {مَرْصُوصٌ} [الصف: 4]: «مُلْصَقٌ بَعْضُهُ بِبَعْضٍ» وَقَالَ يَحْيَى: «بِالرَّصَاصِ»
بَابُ قَوْلِهِ تَعَالَى: {مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ} [الصف: 6]
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«إِنَّ لِي أَسْمَاءً، أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ»
Bukhari-Tamil-4896.
Bukhari-TamilMisc-4896.
Bukhari-Shamila-4896.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
….
நபி (ஸல்) அவர்களின் பண்புகளைக் குறிக்கும் சில பெயர்கள் குர்ஆனில் உள்ளன. இவ்வாறே சில ஹதீஸ்களிலும் உள்ளன.
இந்தப் பெயர்களின் எண்ணிக்கை 5 என்று சில ஹதீஸ்களிலும், வேறு சில ஹதீஸ்களில் 5 என்ற எண்ணிக்கை கூறப்படாமலும் வந்துள்ளது.
இதற்கு இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர், இந்தப் பெயர்களில் 5 பெயர்கள் பிரபலமானவை என்பதால் அல்லது இவை முன்னுள்ள வேதங்களில் கூறப்பட்டுள்ளது என்பதால் சில ஹதீஸ்களில் 5 பெயர் என்று உள்ளது என்பது போன்ற விளக்கங்களை கூறியுள்ளனர். (பத்ஹுல்பாரீ-6/556)
நபியின் சில பெயரை நாங்கள் மனனமிட்டோம். சிலதை நாங்கள் மனனமிடவில்லை என்று அபூமூஸா (ரலி) அவர்களின் அறிவிப்பில் உள்ளது…
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 416)
3313- وسئل عن حديث محمد بن جبير بن مطعم، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم، قال: إن لي خمسة أسماء: محمد، وأحمد، والماحي، والحاشر، والعاقب.
فَقَالَ: يَرْوِيهِ الزُّهْرِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ يُونُسُ بن يزيد، وشعيب بن أبي حمزة، ومعمر، والزبيدي، وابن عيينة، وَسُفْيَانُ بْنُ حُسَيْنٍ، وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أبيه.
واختلف عن مالك؛
فرواه معن بن عيسى، وعبد الله بن نافع الصائغ، ومحمد بن المبارك الصوري، ومحمد بن عبد الرحيم بن شروس، وَإِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أبيه.
وخالفهم جويرية بن أسماء، والقعنبي، وابن وهب، والوليد بن مسلم، رووه عن مالك، عن الزهري، عن محمد بن جبير مرسلا.
وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ المثنى بن زرعة، أبو راشد، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ
عَنْ عثمان بن أبي سليمان، عن جبير بن مطعم.
وخالفه علي بن مسهر، رواه عن ابن إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عن أبيه، وهوالصواب.
ஸுஹ்ரீ இமாம் வழியாக வரும் பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவற்றில், ஸுஹ்ரீ —> முஹம்மத் பின் ஜுபைர் —> ஜுபைர் பின் முத்இம் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானது என்று கூறியுள்ளார். (சுருக்கம்)
(நூல்: அல்இலலுல் வாரிதா-3313)
1 . இந்தக் கருத்தில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மஃமர், இப்னு உயைனா, ஷுஐப், யூனுஸ் —> ஸுஹ்ரீ —> முஹம்மத் பின் ஜுபைர் —> ஜுபைர் பின் முத்இம் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸ்னத் ஹுமைதீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-4896 , முஸ்லிம்-, திர்மிதீ-, இப்னு ஹிப்பான்-, …
- மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் —> ஸுஹ்ரீ —> முஹம்மத் பின் ஜுபைர் —> ஜுபைர் பின் முத்இம் (ரலி)
பார்க்க: புகாரி-3532 , குப்ரா நஸாயீ-, …
2 . அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-4698 .
3 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்