தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5344

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான். இவ்வாறே நான் கருதுகிறேன்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூரவ்ஹ் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள், “இவ்வாறே நான் கருதுகிறேன் எனும் ஐயப்பாட்டைத் தெரிவித்த அறிவிப்பாளர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை” என்று கூறுகிறார்கள்.

அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற (அவர்களுடைய புதல்வரான) அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், “இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தா உம்முடைய தந்தை அறிவித்துள்ளார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “ஆம்” என்றேன்.

Book : 49

(முஸ்லிம்: 5344)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا شَدَّادٌ أَبُو طَلْحَةَ الرَّاسِبِيُّ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ نَاسٌ مِنَ الْمُسْلِمِينَ بِذُنُوبٍ أَمْثَالِ الْجِبَالِ، فَيَغْفِرُهَا اللهُ لَهُمْ وَيَضَعُهَا عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى» فِيمَا أَحْسِبُ أَنَا.

قَالَ أَبُو رَوْحٍ: لَا أَدْرِي مِمَّنِ الشَّكُّ، قَالَ أَبُو بُرْدَةَ: فَحَدَّثْتُ بِهِ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فَقَالَ: أَبُوكَ حَدَّثَكَ هَذَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: نَعَمْ


Muslim-Tamil-5344.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2767.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-4976.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19079-ஷத்தாத் பின் ஸயீத் பின் மாலிக்-அபூதல்ஹா என்பவரை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    பஸ்ஸார் ஆகியோர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் அப்துஸ்ஸமத் பின் அப்துல்வாரிஸ், ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    ஆகியோர் இவர்
    பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (இவர் சில செய்திகளை பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார். இதன் காரணம் நினைவாற்றலில் ஏற்பட்ட கோளாறு என்பதாலே இவ்வாறு கூறியுள்ளனர்)

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/155)

1 . இந்த செய்தியில் “அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான்” என்ற கருத்தை ராவீ ஷத்தாத் பின் ஸயீத்-அபூதல்ஹா மட்டுமே தனித்து அறிவிக்கிறார்.

2 . இவர் நினைவாற்றலில் தவறிழைப்பவர் என்ற விமர்சனம் உள்ளது.

3 . இந்த செய்தி “இவ்வாறே நான் கருதுகிறேன்” என்று சந்தேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 . இது ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (திருக்குர்ஆன் 6:164) என்ற வசனத்திற்கு மாற்றமாகவும் உள்ளது.

  • எனவே தான் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை
    ஷாத் என்று சொல்வதை விட முன்கர் என்று சொல்வதே பொருத்தமானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-1316, 5399)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5344 , ஹாகிம்-193 , 7644 , 7645 , 8794 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5342 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.