அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, “இவன்தான் உனக்கு பதிலாக நரகில் இருப்பான்” என்று சொல்வான்…
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
அத்தியாயம் : 49
(முஸ்லிம்: 5342)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ، دَفَعَ اللهُ عَزَّ وَجَلَّ إِلَى كُلِّ مُسْلِمٍ، يَهُودِيًّا، أَوْ نَصْرَانِيًّا، فَيَقُولُ: هَذَا فِكَاكُكَ مِنَ النَّارِ
Muslim-Tamil-5342.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2767.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-4974.
- இந்த செய்தியின் கருத்து ஒவ்வொரு மனிதருக்கும் நரகத்திலும் இடம் உள்ளது. சொர்க்கத்திலும் இடம் உள்ளது. ஒருவர் நரகம் சென்றால் சொர்க்கத்தில் உள்ள அவரின் இடத்திற்கு சொர்க்கவாசிகள் செல்வார்கள். இதுபோன்றே ஒருவர் சொர்க்கம் சென்றால் நரகத்தில் உள்ள அவரின் இடத்திற்கு நரகவாசிகள் செல்வார்கள். அதுபற்றி தான் இங்கு ஒரு யூதரையை அல்லது கிருத்துவரை அல்லாஹ் முஸ்லிமின் நரகத்தில் உள்ள இடத்திற்கு அனுப்புவான் என்று கூறப்படுகிறது.
(பார்க்க: இப்னு மாஜா-4341 )
இந்த செய்தியை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம், பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்றோர் விமர்சித்திருந்தாலும் இதன் கருத்துபற்றி பல அறிஞர்கள் மேற்கண்ட விளக்கத்தைக் கூறியுள்ளனர்…
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-501 , அஹ்மத்-19600 , 19658 , 19670 , 19675 , 19654 , 19650 , 19485 , 19486 , 19560 , முஸ்லிம்-5342 , 5343 , 5344 , முஸ்னத் அபீ யஃலா-7281 , இப்னு ஹிப்பான்-630 , அல்முஃஜமுல் அவ்ஸத்- 01 , 620 , 2359 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-4341 , அபூதாவூத்-4278 ,
Ithuu quranirku muran.oruvar odiye sumai mattavar sumaikaa maatan
அஸ்ஸலாமு அலைக்கும்.
இதன் கருத்து பற்றி, இதனுடன் தொடர்புடைய செய்தியை பார்க்கவும். நீங்கள் குறிப்பிடும் செய்தி முஸ்லிம்-5344 .