பாடம் : 10 பெரு நாள் தொழுகைக்கு காலையிலேயே (நேரத்தோடு) செல்வது.
உபரித் தொழுகை (அனுமதிக்கப்படும்) நேரத்தில் எல்லாம் நாங்கள் (பெரு நாள் தொழுகையைத் தொழுது) முடித்து விடுவோம் என அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
ஹஜ்ஜுப் பெருநாளில் நபி(ஸல்) எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்தது, தம் குடும்பத்திற்காக. அவசரப்பட்டுவிட்டார்; அது குர்பானியில் சேராது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டை விடச் சிறந்த ஆறுமாதக் குட்டி ஒன்று உள்ளது (அதை அறுக்கலாமா?)’ என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்து கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது’ என்று விடையளித்தார்.
Book : 13
بَابُ التَّبْكِيرِ إِلَى العِيدِ
وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ: «إِنْ كُنَّا فَرَغْنَا فِي هَذِهِ السَّاعَةِ وَذَلِكَ حِينَ التَّسْبِيحِ»
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ البَرَاءِ، قَالَ
خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، قَالَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَإِنَّمَا هُوَ لَحْمٌ عَجَّلَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ»، فَقَامَ خَالِي أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا ذَبَحْتُ قَبْلَ أَنْ أُصَلِّيَ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ قَالَ: ” اجْعَلْهَا مَكَانَهَا – أَوْ قَالَ: اذْبَحْهَا – وَلَنْ تَجْزِيَ جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ
சமீப விமர்சனங்கள்