பாடம்: 8
ஒரு வயதுடைய வெள்ளாட்டைக் குர்பானி கொடுப்பீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது எனும் நபிமொழி.
பராஉ இப்னு ஆஸிப் (ரலி) கூறினார்:
அபூபுர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், ‘உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)’ என்று கூறினார்கள். அபூபுர்தா (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)’ என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது’ என்று சொல்லிவிட்டு, ‘தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர், தமக்காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்துவிட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்’ என்று கூறினார்கள்.
இதே ஹதீஸ் இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பாளர் ஆமிர் (ஷஅபீ-ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் சிறிது வார்த்தை வித்தியாசத்துடன் இதை அறிவித்துள்ளனர்.
அறிவிப்பாளர் ஷஅபீ (ரஹ்) கூறினார்:
‘என்னிடம் ஒரு வயதுடைய பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி உள்ளது’ என அபூபுர்தா (ரலி) கூறினார்.
அத்தியாயம்: 73
(புகாரி: 5556)بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بُرْدَةَ: «ضَحِّ بِالْجَذَعِ مِنَ المَعَزِ، وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ»
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُطَرِّفٌ، عَنْ عَامِرٍ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
ضَحَّى خَالٌ لِي، يُقَالُ لَهُ أَبُو بُرْدَةَ، قَبْلَ الصَّلاَةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شَاتُكَ شَاةُ لَحْمٍ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ عِنْدِي دَاجِنًا جَذَعَةً مِنَ المَعَزِ، قَالَ: «اذْبَحْهَا، وَلَنْ تَصْلُحَ لِغَيْرِكَ» ثُمَّ قَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا يَذْبَحُ لِنَفْسِهِ، وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ وَأَصَابَ سُنَّةَ المُسْلِمِينَ»
تَابَعَهُ عُبَيْدَةُ، عَنِ الشَّعْبِيِّ، وَإِبْرَاهِيمَ، وَتَابَعَهُ وَكِيعٌ، عَنْ حُرَيْثٍ، عَنِ الشَّعْبِيِّ،
وَقَالَ عَاصِمٌ، وَدَاوُدُ، عَنِ الشَّعْبِيِّ: «عِنْدِي عَنَاقُ لَبَنٍ» وَقَالَ زُبَيْدٌ، وَفِرَاسٌ، عَنِ الشَّعْبِيِّ: «عِنْدِي جَذَعَةٌ» وَقَالَ أَبُو الأَحْوَصِ: حَدَّثَنَا مَنْصُورٌ: «عَنَاقٌ جَذَعَةٌ» وَقَالَ ابْنُ عَوْنٍ: «عَنَاقٌ جَذَعٌ، عَنَاقُ لَبَنٍ»
Bukhari-Tamil-5556.
Bukhari-TamilMisc-5556.
Bukhari-Shamila-5556.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஆமிர்-ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
(ரஹ்) —> பராஉ பின் ஆஸிப் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-951 , 955 , 965 , 968 , 976 , 983 , 5545 , 5556 , 5560 , 5563 , 6673 , முஸ்லிம்-, அபூதாவூத்-, திர்மிதீ-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …
2 . ஜுன்தப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-985 .
3 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: நஸாயீ-4381 .
4 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-954 .
5 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: நஸாயீ-4382 ,
சமீப விமர்சனங்கள்