தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1008

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 3

பஞ்சம் நிலவும் போது மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது. 

 அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“இவர் வெண்ணிறம் கொண்டவர்;
இவர் முகம்தனை முன்வைத்தே;
முகில்மழை கேட்கப்படும்;
அநாதைகளின் புகலிடம்;
விதைவைகளின் காவலர்”

என்று அபூதாலிப் அவர்கள் பாடிய கவிதையை இப்னு உமர் (ரலி) அவர்கள் (சிலநேரம்) எடுத்தாள்வதை நான் செவியேற்றுள்ளேன்.

அத்தியாயம்: 15

(புகாரி: 1008)

بَابُ سُؤَالِ النَّاسِ الإِمَامَ الِاسْتِسْقَاءَ إِذَا قَحَطُوا

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، قَالَ

سَمِعْتُ ابْنَ عُمَرَ يَتَمَثَّلُ بِشِعْرِ أَبِي طَالِبٍ:

«وَأَبْيَضَ يُسْتَسْقَى الغَمَامُ بِوَجْهِهِ … ثِمَالُ اليَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ»


Bukhari-Tamil-1008.
Bukhari-TamilMisc-1008.
Bukhari-Shamila-1008.
Bukhari-Alamiah-953.
Bukhari-JawamiulKalim-958.




குறிப்பு:

“இவர் முகம்தனை முன்வைத்தே;
முகில்மழை கேட்கப்படும்”

இந்தக் கவிதையின் பொருள், “மழைக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு நபி (ஸல்) அவர்களிடம் கூறப்படும்” என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ்

3 . அபூகுதைபா

4 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார்

5 . அப்துல்லாஹ் பின் தீனார்

6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21934-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

இவரைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த சிலர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்…

 

(நூல்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார் பைனத் தவ்ஸீகி வத்தள்ஈஃப்)


…(நூல்: ஃபத்ஹுல் பாரீ-2/497 )


أطراف الغرائب والأفراد (3/ 387):
3002 – حَدِيث: سَمِعت ابْن عمر ‌يتَمَثَّل ‌بِشعر ‌أبي ‌طَالب:
(وابيض يَسْتَسْقِي الْغَمَام بِوَجْهِهِ … ) .
غَرِيب صَحِيح من حَدِيث عبد الله بن دِينَار عَنهُ.
تفرد بِهِ عَنهُ ابْنه وَتفرد بِهِ عَنهُ أَبُو قُتَيْبَة

இந்தச் செய்தியை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ள ஃகரீபான-அரிதான செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்: அத்ராஃபுல் ஃகராஇபி வல்அஃப்ராத்-3002)


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூகுதைபா —> அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார் —> அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: புகாரி-1008 , குப்ரா பைஹகீ-6425 ,

  • உமர் பின் ஹம்ஸா பின் அப்துல்லாஹ் பின் உமர் —> ஸாலிம் பின் அப்துல்லாஹ் பின் உமர் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-5673 , புகாரி-1009 , இப்னு மாஜா-1272 , குப்ரா பைஹகீ-6426 ,


2 . அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26067 .


3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அத்துஆ-தப்ரானீ-2180.

الدعاء للطبراني (ص: 597)
2180 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الرَّازِيُّ، ثنا أَحْمَدُ بْنُ رَشَدِ بْنِ خُثَيْمٍ الْهِلَالِيُّ، ثنا عَمِّي سَعِيدُ بْنُ خُثَيْمٍ ثنا مُسْلِمٌ الْمُلَائِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: جَاءَ أَعْرَابِيُّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ لَقَدْ أَتَيْنَاكَ وَمَا لَنَا بَعِيرٌ يَئِطُّ وَلَا صَبِيُّ يَصْطَبِحُ وَأَنْشَدَهُ:
[البحر الطويل]
أَتَيْنَاكَ وَالْعَذْرَاءُ تَدْمَى لِبَانُهَا … وَقَدْ شُغِلَتْ أُمُّ الصَّبِيِّ عَنِ الطِّفْلِ
وَأَلْقَى بِكَفَّيْهِ الشُّجَاعُ اسْتِكانَةً … مِنَ الْجُوعِ ضَعْفًا مَا يَمُرُّ وَمَا يُحَلِي
وَلَا شَيْءَ مِمَّا يَأْكُلُ النَّاسُ عِنْدَنَا … سِوَى الْحَنْظَلِ الْعَامِيِّ وَالْعِلْهِزِ الْفَشْلِ
وَلَيْسَ لَنَا إِلَّا إِلَيْكَ فِرَارُنَا … وَأَيْنَ فِرَارُ النَّاسِ إِلَّا إِلَى الرُّسْلِ

فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى صَعِدَ الْمِنْبَرَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ إِلَى السَّمَاءِ فَقَالَ: «اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيًّا مَرِيعًا غَدَقًا طَبَقًا عَاجِلًا غَيْرَ رَايِثٍ نَافِعًا غَيْرَ ضَارٍّ تَمْلَأُ بِهِ الضَّرْعَ وَتُنْبِتُ بِهِ الزَّرْعَ وَتُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا» فَوَاللَّهِ مَا رَدَّ يَدَيْهِ إِلَى نَحْرِهِ حَتَّى أَلْقَتِ السَّمَاءُ بَأَوْرَاقِهَا وَجَاءَ أَهْلُ الْبِطَاحِ يَعُجُّونَ: يَا رَسُولَ اللَّهِ الْغَرَقَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا» فَانْجَابَ السَّحَابُ عَنِ السَّمَاءِ حَتَّى أَحْدَقَ بِالْمَدِينَةِ كَالْإِكْلِيلِ، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَالَ: «لِلَّهِ أَبُو طَالِبٍ لَوْ كَانَ حَيًّا قَرَّتْ عَيْنَاهُ، مَنْ يُنْشِدُنَا قَوْلَهُ؟»

فَقَامَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كَأَنَّكَ أَرَدْتَ قَوْلَهُ:

وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ … ثِمَالِ الْيَتَامَى عِصْمَةٍ لِلْأَرَامِلِ
يَلُوذُ بِهِ الْهُلَّاكُ مِنْ آلِ هَاشِمٍ … فَهُمْ عِنْدَهُ فِي نِعْمَةٍ وَفَوَاضِلِ
كَذَبْتُمْ وَبَيْتِ اللَّهِ يُبْزَى مُحَمَّدٌ … وَلَمَّا نُقَاتِلْ دُونَهُ وَنُنَاضِلِ
وَنُسْلِمُهُ حَتَّى نُصَرَّعَ حَوْلَهُ … وَنَذْهَلَ عَنْ أَبْنَائِنَا وَالْحَلَائِلِ

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجَلْ» فَقَامَ رَجُلٌ مِنْ كِنَانَةَ فَقَالَ:

لَكَ الْحَمْدُ وَالْحَمْدُ مِمَّنْ شَكَرْ … سُقِينَا بِوَجْهِ النَّبِيِّ الْمَطَرْ
دَعَا اللَّهَ خَالِقَهُ دَعْوَةً … أُجِيبَتْ وَأَشْخَصَ مِنْهُ الْبَصَرْ
وَلَمْ يَكُ إِلَّا كَقَلْبِ الرِّدَاءِ … وَأَسْرَعَ حَتَّى رَأَيْنَا الْمَطَرْ
دُفَاقَ الْعَزَالِي وَجَمَّ الْبُعَاقِ … أَغَاثَ بِهِ اللَّهُ عُلْيَا مُضَرْ
وَكَانَ كَمَا قَالَهُ عَمُّهُ … أَبُو طَالِبٍ ذُو رِدَاءٍ وَغُرَرْ
وَيَسْقِي بِكَ اللَّهُ صَوْبَ الْغَمَامِ … وَهَذَا الْعَيَانُ لِذَاكَ الْخَبَرْ
فَمَنْ يَشْكُرِ اللَّهَ يَلْقَى الْمَزِيدَ … وَمَنْ يَكْفُرِ اللَّهَ يَلْقَ الْغِيَرْ

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ يَكُ شَاعِرٌ قَدْ أَحْسَنَ فَقَدْ أَحْسَنْتَ»


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.