தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-291

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் தூர் மலைப்பகுதிக்கு வந்தேன். கஹ்புல் அஹ்பார் அவர்களைச் சந்தித்தேன். அவருடன் அமர்ந்திருந்த சமயம், அவர் எனக்கு தவ்ராத் வேதம் பற்றிக் கூறினார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி அவருக்கு நான் கூறினேன்.

சூரியன் உதயமாகும் நாளிலேயே சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் பூமியில் இறக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்களின் பாவம் பன்னிக்கப்பட்டது. அன்று தான் இறந்தார்கள். அன்று தான் கியாமத் நாளும் ஏற்படும். ஜும்ஆ நாளன்று சுப்ஹு முதல் சூரியன் உதயமாகும் வரை மனித, ஜின் இனத்தைத் தவிர மற்ற பிராணிகள் அனைத்தும் கியாமத் நாளை அஞ்சியதாக சப்தமிட்டபடி இருக்கும். அன்று ஒரு நேரம் உண்டு. (அந்நேரத்தில்) அல்லாஹ்விடம் ஏதேனும் கேட்டவனாக தொழுது கொண்டிருக்கும் ஒரு முஸ்லிமுக்கு அவன் கேட்டதைக் கொடுத்த நிலையில் தான் அந்த நேரத்தை அவன் அடைந்து கொள்வான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நான் கூறியதும் அவரிடம் நான் பேசியபற்றில் ஒன்றாக இருந்தது.

அது ஒவ்வொரு வருடத்திலும் உள்ள ஏதேனும் ஒரு ஜும்ஆ நாளில் தான் என கஹ்பு கூறினார். ‘இல்லை ஒவ்வொரு ஜும்ஆ விலும் தான்’ என்று நான் கூறினேன். உடனே கஹ்பு அவர்கள் தவ்ராத்தை எடுத்துப் படித்து விட்டு, நபி(ஸல்) அவர்கள் உண்மையைக் கூறியுள்ளார்கள் என்று கூறினார்.

அடுத்து பஸரா இப்னு அபீ பஸ்ரா அல்கிபாரி அவர்களைச் சந்தித்தேன். எங்கிருந்து வருகிறீர்? எனக் கேட்டார். தூர் பகுதியில் இருந்த வருவதாகக் கூறினேன். நீர் அங்கே செல்லும் முன் உன்னை நான் பார்த்திருந்தால் நீர் அங்கே போயிருக்க மாட்டாய். காரணம், “கஃபா, எனது இந்த பள்ளிவாசல் (மதீனத்துந் நபவி), ஜெருஸலம் எனும் பைத்துல் முகத்தஸ் ஆகிய மூன்று பள்ளிகளுக்கே தவிர, பயணத்திற்கு தயார் ஆகக் கூடாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று பஸரா கூறினார்கள்.

பின்பு அப்துல்லா இப்னு ஸலாம் அவர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் கஹ்புல் அஹ்பார் அவர்களிடம் ஜும்ஆ பற்றி பேசியதை எடுத்துக் கூறினேன். “அது ஒவ்வொரு வருடத்தில் உள்ள ஒரு நாளில் தான்” என்று கஹ்பு கூறியதாகக் கூறினேன். கஹ்பு பொய் கூறியுள்ளார் என்று அப்துல்லா இப்னு ஸலாம் கூறியதும், கஹ்பு அவர்கள் தவ்ராத்தைப் படித்து விட்டு ஒவ்வொரு ஜும்ஆ விலும் தான் என்று கூறி விட்டார் என்று கூறினேன். கஹ்பு உண்மையே கூறினார் என அப்துல்லா இப்னு ஸலாம் கூறினார்கள்.

அந்த நேரம் எது என அறிவீரா? என அப்துல்லா இப்னு ஸலாம் அவர்கள் கேட்டதும், ‘அந்த நேரத்தைக் கூறுங்கள், சுருக்கி விட வேண்டாம்’ என்று கூறினேன். அது ஜும்ஆ நாளின் கடைசி நேரம் தான் என்று அப்துல்லா இப்னு ஸலாம் கூறினார்கள். ‘தொழுதவனாக ஒரு முஸ்லிம் அந்த நேரத்தை அடைய மாட்டான்’ என்றல்லவா நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த நேரத்தில் தொழ முடியாதே! (அப்படியிருக்க) ஜும்ஆ நாளின் கடைசி நேரமாக அது எப்படி இருக்க முடியும்? என்று நான் கேட்டேன்.

மறு தொழுகையை எதிர்பார்த்து ஒருவர் ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பதே அவன் மறு தொழுகை தொழும் வரை தொழுகையில் இருப்பவன் போல் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லையா? என அப்துல்லா இப்னு ஸலாம் அவர்கள் கேட்டார்கள். நான் ஆம் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதும் அடிப்பப்பட்டது தான் என்று அப்துல்லா இப்னு ஸலாம் கூறினார்கள் என்று (இந்த நீண்ட சம்பவத்தை) அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 291)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ

خَرَجْتُ إِلَى الطُّورِ فَلَقِيتُ كَعْبَ الْأَحْبَارِ فَجَلَسْتُ مَعَهُ، فَحَدَّثَنِي عَنِ التَّوْرَاةِ، وَحَدَّثْتُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ فِيمَا حَدَّثْتُهُ، أَنْ قُلْتُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ، يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُهْبِطَ مِنَ الْجَنَّةِ، وَفِيهِ تِيبَ عَلَيْهِ، وَفِيهِ مَاتَ. وَفِيهِ تَقُومُ السَّاعَةُ. وَمَا مِنْ دَابَّةٍ إِلَّا وَهِيَ مُصِيخَةٌ يَوْمَ الْجُمُعَةِ، مِنْ حِينِ تُصْبِحُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ  شَفَقًا مِنَ السَّاعَةِ. إِلَّا الْجِنَّ وَالْإِنْسَ. وَفِيهِ سَاعَةٌ لَا يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي، يَسْأَلُ اللَّهَ شَيْئًا، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» قَالَ كَعْبٌ ذَلِكَ فِي كُلِّ سَنَةٍ يَوْمٌ فَقُلْتُ بَلْ فِي كُلِّ جُمُعَةٍ فَقَرَأَ كَعْبٌ التَّوْرَاةَ فَقَالَ صَدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ أَبُو هُرَيْرَةَ فَلَقِيتُ بَصْرَةَ بْنَ أَبِي بَصْرَةَ الْغِفَارِيَّ فَقَالَ: مِنْ أَيْنَ أَقْبَلْتَ؟ فَقُلْتُ: مِنَ الطُّورِ فَقَالَ: لَوْ أَدْرَكْتُكَ قَبْلَ أَنْ تَخْرُجَ إِلَيْهِ، مَا خَرَجْتَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لَا تُعْمَلُ الْمَطِيُّ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: إِلَى الْمَسْجِدِ الْحَرَامِ، وَإِلَى مَسْجِدِي هَذَا، وَإِلَى مَسْجِدِ إِيلِيَاءَ أَوْ بَيْتِ الْمَقْدِسِ ” يَشُكُّ

قَالَ أَبُو هُرَيْرَةَ: ثُمَّ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ، فَحَدَّثْتُهُ بِمَجْلِسِي مَعَ كَعْبِ الْأَحْبَارِ، وَمَا حَدَّثْتُهُ بِهِ فِي يَوْمِ الْجُمُعَةِ، فَقُلْتُ: قَالَ كَعْبٌ ذَلِكَ فِي كُلِّ سَنَةٍ يَوْمٌ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ: كَذَبَ كَعْبٌ. فَقُلْتُ: ثُمَّ قَرَأَ كَعْبٌ التَّوْرَاةَ، فَقَالَ: بَلْ هِيَ فِي كُلِّ جُمُعَةٍ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ: صَدَقَ كَعْبٌ، ثُمَّ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ قَدْ عَلِمْتُ أَيَّةَ سَاعَةٍ هِيَ. قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُلْتَ لَهُ أَخْبِرْنِي بِهَا وَلَا تَضَنَّ عَلَيَّ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ: «هِيَ آخِرُ سَاعَةٍ فِي يَوْمِ الْجُمُعَةِ»
قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُلْتُ وَكَيْفَ تَكُونُ آخِرَ سَاعَةٍ فِي يَوْمِ الْجُمُعَةِ؟ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي وَتِلْكَ السَّاعَةُ سَاعَةٌ لَا يُصَلَّى فِيهَا»
فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ أَلَمْ يَقُلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جَلَسَ مَجْلِسًا يَنْتَظِرُ الصَّلَاةَ فَهُوَ فِي صَلَاةٍ حَتَّى يُصَلِّيَ؟» قَالَ أَبُو هُرَيْرَةَ فَقُلْتُ: بَلَى، قَالَ: فَهُوَ ذَلِكَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-291.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-935 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.