பாடம் : 37 ஜுமுஆ நாளில் உள்ள சிறப்பான நேரம்.
அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு’ என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.
Book : 11
بَابُ السَّاعَةِ الَّتِي فِي يَوْمِ الجُمُعَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: «فِيهِ سَاعَةٌ، لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا
Bukhari-Tamil-.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-935.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-290 , 291 , அஹ்மத்-, …,தாரிமீ-, புகாரி-935 , 5294 , 6400 , முஸ்லிம்-1543 , 1544 , 1545 , 1547 , 1548 , நஸாயீ-1373 , 1430 , 1431 , 1432 ,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
1 . இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரம் என வந்துள்ள செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1546 .
2 . அஸருக்குக் பின் உள்ள நேரம் என வந்துள்ள செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1048 .
Adhu enda neram.vilakkavum
அஸ்ஸலாமு அலைக்கும்.
முஸ்லிம்-1546 எண்ணை பார்க்கவும்.