தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1048

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 208

வெள்ளிக்கிழமையன்று பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் எது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமையன்று பன்னிரண்டு நாழிகைகள் உள்ளன. (அவற்றில் ஒரு நாழிகையில்) எந்த முஸ்லிம் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறாரோ அதை அவருக்கு மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அஸருக்குப்பின் கடைசி நேரத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(அபூதாவூத்: 1048)

بَابُ الْإِجَابَةِ أَيَّةُ سَاعَةٍ هِيَ فِي يَوْمِ الْجُمُعَةِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو يَعْنِي ابْنَ الْحَارِثِ، أَنَّ الْجُلَاحَ، مَوْلَى عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَهُ أَنَّ أَبَا سَلَمَةَ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَهُ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«يَوْمُ الْجُمُعَةِ ثِنْتَا عَشْرَةَ – يُرِيدُ – سَاعَةً، لَا يُوجَدُ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا، إِلَّا أَتَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ»


Abu-Dawood-Tamil-884.
Abu-Dawood-TamilMisc-884.
Abu-Dawood-Shamila-1048.
Abu-Dawood-Alamiah-884.
Abu-Dawood-JawamiulKalim-886.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ்

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

4 . அம்ர் பின் ஹாரிஸ்

5 . ஜுலாஹ் பின் அப்துல்லாஹ்

6 . அபூஸலமா

7 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10654-ஜுலாஹ் பின் அப்துல்லாஹ்-அபூகஸீர் என்பவர் பற்றி யஸீத் பின் அபூஹபீப் அவர்கள் இவர் பொருந்திக் கொள்ளப்பட்டவர் (ஏற்கத்தகுந்தவர்) என்ற கருத்தில் கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு அப்துல்பர் ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை ஸதூக் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்இக்மால்-3/263, தஹ்தீபுத் தஹ்தீப்-1/321, தக்ரீபுத் தஹ்தீப்-1/205)

எனவே இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரமாகும். இந்த செய்தியை சில அறிஞர்கள் ஹஸன் என்றும், சிலர் சரியானது என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் இந்தக் கருத்தில் வரும் மற்ற செய்திகளையும் பார்க்கும்போது ஷாத் என்ற வகையில் இந்தச் செய்தி பலவீனமானது என்று சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதைப் பற்றிய விவரம்:

  • அபூஸலமா அவர்களிடமிருந்து அறிவிக்கும்

1 . முஹம்மத் பின் இப்ராஹீம், …
2 . மூஸா பின் உக்பா (முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-5579)
3 . ஸாலிம்-அபுன் நள்ர் (அஹ்மத்-23781)
4 . ஸயீத் பின் ஹாரிஸ் (அல்முஃஜமுல் கபீர்-,
5 . யஹ்யா பின் அபூகஸீர் …
6 . முஹம்மத் பின் அம்ர் (அபூதாவூத்-1046 ,

போன்ற 6 பேர் “வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் எந்த முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்லாஹ்விடம் கேட்கிறாரோ அதை அவருக்கு மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை” என்றக் கருத்தை அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

  • “அந்த நேரத்தை அஸருக்குப் பின் தேடிக்கொள்ளுங்கள்” என்றக் கருத்தை அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

ஜுலாஹ் அவர்கள் இந்தச் செய்தியின் கருத்தையும் அறிவிப்பாளர்தொடரையும் மேற்கண்ட 6 பேருக்கு மாற்றமாக அறிவித்துள்ளார்.

1 . அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களின் சொல்லை மர்ஃபூவாக அறிவித்துள்ளார்.

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் ஹதீஸை ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸாக அறிவித்துள்ளார்.

ஜுலாஹ் இதில் தவறிழைத்துள்ளார் என்பதற்கு காரணங்கள்:

1 . அபூஸலமாவின் ஹதீஸ்களை யஹ்யா பின் அபூகஸீர் நன்கு அறிந்தவர் ஆவார். இவருக்கு ஜுலாஹ் மாற்றமாக அறிவித்துள்ளார் என்பதால் இதில் தவறிழைத்துள்ளார்.

2 . இந்தச் செய்தியை அபூஸலமா —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஜுலாஹ் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். (காரணம் ஜாபிர் (ரலி) அவர்களின் முக்கிய மாணவர்களான அபுஸ்ஸுபைர், முஹம்மத் பின் முன்கதிர், அம்ர் பின் தீனார்,பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
அதாஉ பின் அபூரபாஹ் போன்ற பலரும் இந்தச் செய்தியை அறிவிக்கவில்லை.)

3 . ஜுலாஹ் மிஸ்ர்-எகிப்தைச் சேர்ந்தவர் ஆவார். அபூஸலமா அவர்கள் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார். ஜுலாஹுக்கு எதிரணியில் உள்ளவர்களில் அதிகமானோர் மதீனாவாசிகள் என்பதுடன் ஜுலாஹை விட மிகப்பலமானவர்கள் ஆவர்.

இந்தக் கருத்தில் அபூஸலமா —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் ஒரு செய்தி வந்துள்ளது. என்றாலும் அதில் விமர்சனம் உள்ளது…

எனவே அபூஸலமா அவர்கள் வழியாக வரும் செய்திகளில், வெள்ளிக்கிழமை அஸரிலிருந்து சூரியன் மறைகின்ற நேரம் வரை உள்ள நேரம் துஆ ஏற்கப்படும் நேரம் என்ற கருத்து நபியின் சொல் அல்ல.


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்னு வஹ்ப் —> அம்ர் பின் ஹாரிஸ் —> ஜுலாஹ் பின் அப்துல்லாஹ் —> அபூஸலமா —> ஜாபிர் (ரலி)

பார்க்க: முஅத்தா-அப்துல்லாஹ் பின் வஹ்ப்-228 , அபூதாவூத்-1048 , குப்ரா நஸாயீ-1709 , நஸாயீ-1389 , ஹாகிம்-1032 , குப்ரா பைஹகீ-6001 , …


  • முஅத்தா-அப்துல்லாஹ் பின் வஹ்ப்-228.

موطأ عبد الله بن وهب (ص: 81)
228 – حَدَّثَكَ عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ اللَّجْلاجِ مَوْلَى عَبْدِ الْعَزِيزِ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «يَوْمُ الْجُمُعَةِ، لَا يُوجَدُ عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ شَيْئًا إِلَّا آتَاهُ اللَّهُ إِيَّاهُ، فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ»


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-489 .


3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

4 . அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5579 .

5 . முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

6 . தாவூஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-935 ,

 

4 comments on Abu-Dawood-1048

  1. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.நல்லது ஜி,
    இதில் எனது சந்தேகம் குறிப்பிட்ட நேரம் சம்பந்தமாக வரும் இரண்டு செய்திகளும் பலகீனம் எனும்போது சஹீஹான செய்தியில் வெள்ளிக்கிழமை என்று பொதுவாகவே வந்துள்ளது. அப்படியிருக்க ஜுமுஆவின் கடைசி இருப்புதான் என்று நீங்கள் அந்த கட்டுரையில் பதிவுசெய்துள்ளீர்கள். அதன் விளக்கம் என்ன?

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.

    முஸ்லிம்-1546 வது ஹதீஸின் அடிக்குறிப்பில் வரும் அந்த கட்டுரையை நாம் பதிவு செய்யவில்லை. அது வேறு ஒரு அறிஞரின் கட்டுரையாகும். (எனவே தான் அதை ஆய்வுக்காக என்று குறிப்பிட்டுள்ளோம்.) வெள்ளிக்கிழமை துஆ ஏற்கப்படும் நேரம் பற்றி பல செய்திகள் இருந்தாலும் இரண்டு நேரம் பற்றி வரும் செய்திகளையே அதிகமான அறிஞர்கள் ஆதாரமாக கூறுகின்றனர். ஆனால் அந்த இரண்டு நேரம் பற்றி வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது என்பதால் அந்த நேரம் மறைக்கப்பட்டுள்ளது என்றே முடிவு செய்ய வேண்டும்.

    1. ஜஸாகல்லாஹ்…அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.நல்லது ஜி,

      1. அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கும் அருள் புரிவானாக.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.