தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1546

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

 அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள்.

நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அது, இமாம் (சொற்பொழிவு மேடையில்) அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.

– இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 7

(முஸ்லிம்: 1546)

وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ، ح وحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالَا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا مَخْرَمَةُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ

قَالَ لِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ: أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ، سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ»


Muslim-Tamil-1546.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-853.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1415.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

..


فتح الباري لابن حجر (2/ 422)
كَحَدِيثِ أَبِي مُوسَى هَذَا فَإِنَّهُ أُعِلَّ بِالِانْقِطَاعِ وَالِاضْطِرَابِ أَمَّا الِانْقِطَاعُ فَلِأَنَّ مَخْرَمَةَ بْنَ بُكَيْرٍ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ قَالَهُ أَحْمَدُ عَنْ حَمَّادِ بْنِ خَالِدٍ عَنْ مَخْرَمَةَ نَفْسِهِ وَكَذَا قَالَ سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ عَنْ مُوسَى بْنِ سَلَمَةَ عَنْ مَخْرَمَةَ وَزَادَ إِنَّمَا هِيَ كُتُبٌ كَانَتْ عِنْدَنَا وَقَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ لَمْ أَسْمَعْ أَحَدًا مِنْ أَهْلِ الْمَدِينَةِ يَقُولُ عَنْ مَخْرَمَةَ إِنَّهُ قَالَ فِي شَيْءٍ مِنْ حَدِيثِهِ سَمِعْتُ أَبِي وَلَا يُقَالُ مُسْلِمٌ يَكْتَفِي فِي الْمُعَنْعَنِ بِإِمْكَانِ اللِّقَاءِ مَعَ الْمُعَاصَرَةِ وَهُوَ كَذَلِكَ هُنَا لِأَنَّا نَقُولُ وُجُودُ التَّصْرِيحِ عَنْ مَخْرَمَةَ بِأَنَّهُ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ كَافٍ فِي دَعْوَى الِانْقِطَاعِ وَأَمَّا الِاضْطِرَابُ فَقَدْ رَوَاهُ أَبُو إِسْحَاقَ وَوَاصِلٌ الْأَحْدَبُ وَمُعَاوِيَةُ بْنُ قُرَّةَ وَغَيْرُهُمْ عَنْ أَبِي بُرْدَةَ مِنْ قَوْلِهِ وَهَؤُلَاءِ مِنْ أَهْلِ الْكُوفَةِ وَأَبُو بُرْدَةَ كُوفِيٌّ فَهُمْ أَعْلَمُ بِحَدِيثِهِ مِنْ بُكَيْرٍ الْمَدَنِيِّ وَهُمْ عَدَدٌ وَهُوَ وَاحِدٌ وَأَيْضًا فَلَوْ كَانَ عِنْدَ أَبِي بُرْدَةَ مَرْفُوعًا لَمْ يُفْتِ فِيهِ بِرَأْيهِ بِخِلَافِ الْمَرْفُوعِ وَلِهَذَا جَزَمَ الدَّارَقُطْنِيُّ بِأَنَّ الْمَوْقُوفَ هُوَ الصَّوَابُ

1 . இந்த செய்தியை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்கள், இந்த கருத்தில் வரும் செய்திகளில் சரியானது என்று கூறியிருந்தாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இரண்டு காரணங்களால் இதை பலவீனமானது என்று கூறியுள்ளார். முதல் காரணம் இது முன்கதிஃ யான செய்தியாகும்.

2 . இரண்டாவது இதில் குளறுபடி உள்ளது; சிலர் இதை அபூபுர்தா அவர்களின் சொல்லாக (வெவ்வேறு கருத்தில்) அறிவித்துள்ளனர்.

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இது மவ்கூஃப் (மக்தூஃ) என்பதே உண்மையென்று கூறியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-2/482)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (7/ 212)
1297- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فِي السَّاعَةِ الَّتِي فِي يَوْمِ الْجُمُعَةِ وَأَنَّهَا مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تَنْقَضِيَ الصَّلَاةُ.
فَقَالَ: يَرْوِيهِ مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم، تَفَرَّدَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْهُ، وَهُوَ صَحِيحٌ عَنْهُ.
وَرَوَاهُ أَبُو إِسْحَاقَ السَّبِيعِيُّ، عَنْ أَبِي بُرْدَةَ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو، عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَخَالَفَهُ النُّعْمَانُ بْنُ عَبْدِ السَّلَامِ، فَرَوَاهُ عَنِ الثَّوْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ مَوْقُوفًا.
وَخَالَفَهُمَا يَحْيَى الْقَطَّانُ، فَرَوَاهُ عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ.
قَوْلِهِ. وَتَابَعَهُ عَمَّارُ بْنُ رُزَيْقٍ، فَرَوَاهُ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ قَوْلِهِ.
وَكَذَلِكَ رَوَاهُ مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ، وَمُجَالِدٌ، عَنْ أَبِي بُرْدَةَ من قوله.
وحديث مخرمة بن بكير، أخرجه مسلم في الصحيح، والمحفوظ من رواية الآخرين، عَنْ أَبِي بُرْدَةَ قَوْلِهِ غَيْرَ مَرْفُوعٍ.


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مَسْعَدَةَ الْفَزَارِيُّ قال: حدثنا عبد الله بن محمد بن زكريا، حدثنا إسماعيل بن عمرو، حدثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: السَّاعَةُ الَّتِي يُرْجَى فِيهَا يَوْمَ الْجُمُعَةِ عِنْدَ نُزُولِ الْإِمَامِ.

வெள்ளிக்கிழமையில் (துஆ ஏற்கப்படும் என) ஆதரவுவைக்கப்படும் அந்த நேரம் இமாம் மிம்பரிலிருந்து இறங்கும் நேரம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமூஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1/523, இலலுத் தாரகுத்னீ-7/213, அக்பாரு அஸ்பஹான்-2/23)

இதில் இடம்பெறும் ராவீ-7842-இஸ்மாயீல் பின் அம்ர் என்பவர் பற்றி அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்ற பலரும் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
வழியாக அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என கதீப் பஃக்தாதீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/190, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1/523, தஹ்தீபுத் தஹ்தீப்-1/162, லிஸானுல் மீஸான்-2/155)


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مَسْعَدَةَ، قَالَ: حدثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ الْأَصْبَهَانِيُّ، قال: حدثنا أبو سفيان صالح بن مهران، حدثنا النُّعْمَانُ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ السَّاعَةُ الَّتِي تُذْكَرُ فِي الْجُمُعَةِ مَا بَيْنَ نُزُولِ الْإِمَامِ عَنْ مِنْبَرِهِ إِلَى دُخُولِهِ فِي الصَّلَاةِ
موقوف.

வெள்ளிக்கிழமையில் (துஆ ஏற்கப்படும் என) கூறப்படும் அந்த நேரம், இமாம் மிம்பரிலிருந்து இறங்குவதற்கும், தொழுகை நடத்துவதற்கும் உள்ள இடைப்பட்ட நேரமாகும் என அபூமூஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: இலலுத் தாரகுத்னீ-7/213)


1 . இந்த கருத்தில் வரும் செய்திகளின் பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களைக் கூறி, இதை அதிகமானோர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் வழியாக அபூபுர்தா அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்பதால் இது மர்ஃபூவான செய்தியல்ல. அபூபுர்தா அவர்களின் சொல்லாக வந்திருக்கும் செய்திகளே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1297, 7/212)

  • முன்கதிஃ என்பதற்கு காரணம் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-43937-மக்ரமா பின் புகைர் தனது தந்தையிடம் கேட்டுள்ளதாக மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அவர்கள் கூறியிருந்தாலும் மக்ரமா பின் புகைர் அவர்களே நான் என் தந்தை புகைர் பின் அப்துல்லாஹ் அவர்களிடம் செவியேற்கவில்லை என்று கூறியுள்ளார் என ஹம்மாத் பின் காலித் கூறியதாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் கூறியுள்ளார். இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    நஸயீ, இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோரும் இவ்வாறே கூறியுள்ளனர். எனவே மேற்கண்ட செய்தி முன்கதிஃ ஆகும்.
  • சிலர் கூறுவது போன்று மக்ரமா தனது தந்தையிடமிருந்து சில ஹதீஸ்களை கேட்டுள்ளார் என்பதின் அடிப்படையிலும், அல்லது மக்ரமா தனது தந்தையிடமிருந்து அறிவிப்பது அவரின் நூலிலிருந்து தான் என்பதின் அடிப்படையிலும் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியானதென முடிவு செய்தாலும் மற்ற பலமான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக இருப்பதால் இது ஷாத் என்ற வகையில் பலவீனமானதாகும்.

காரணம் அபூபுர்தா அவர்களிடமிருந்து அறிவிக்கும்,

1 . வாஸில் பின் ஹய்யான்,
2 . அபூஇஸ்ஹாக்,
3 . முஆவியா பின் குர்ரா போன்றோர் இந்த செய்தியை அபூபுர்தா அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

அபூபுர்தா கூஃபாவாசி ஆவார். மேற்கண்ட மூவரும் கூஃபாவாசிகள் என்பதால் அவரின் செய்திகளை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் மேற்கண்ட செய்தியை அபூபுர்தா அவர்களிடமிருந்து அறிவிக்கும் புகைர் பின் அப்துல்லாஹ் அவர்கள் மதீனாவாசி ஆவார். எனவே இவரின் அறிவிப்பை விட மற்ற மூவரின் அறிவிப்பே பலமாகும்.


1 . வாஸில் பின் ஹய்யான் அவர்களின் அறிவிப்பு:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5464 , அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-1723 , அத்தம்ஹீத்-19/22 ,

الأوسط في السنن والإجماع والاختلاف (4/ 11)
1723 – حَدَّثَنَا مُوسَى، قَالَ: ثنا أَبُو بَكْرٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ فَسُئِلَ عَنِ السَّاعَةِ الَّتِي، فِي الْجُمُعَةِ؟ قَالَ: فَقُلْتُ: هِيَ السَّاعَةُ الَّتِي اخْتَارَ اللهُ وَقْتَهَا لِلصَّلَاةِ، قَالَ: فَمَسَحَ رَأْسِي وَبَرَّكَ عَلَيَّ وَأَعْجَبَهُ مَا قُلْتُ

அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது நான், “அதை அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அல்லது அதில் தொழுவதை அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்று கூறினேன்.

உடனே இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்கள், நான் கூறியதைக் கேட்டு ஆச்சரியமடைந்து எனது தலையை தடவிக்கொடுத்தார்கள்; எனக்கு இறைவனின் அருள்வளம் கிடைக்க பிரார்த்தனை செய்தார்கள்.


التمهيد – ابن عبد البر (19/ 22 ط المغربية):
وَحَدَّثَنَا ابْنُ حُمَيْدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مُغِيرَةَ عَنْ وَاصِلِ بْنِ حِبَّانَ عَنْ أَبِي بُرْدَةَ قال قلت لأبي إني لا أعلم أَيَّ سَاعَةٍ هِيَ فَقَالَ وَمَا يُدْرِيكَ فَقُلْتُ هِيَ السَّاعَةُ الَّتِي يَخْرُجُ فِيهَا الْإِمَامُ وَهِيَ أَفْضَلُ السَّاعَاتِ فَقَالَ بَارَكَ اللَّهُ عَلَيْكَ

அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (அபூமூஸா ரலி) யிடம், ஜும்ஆவின் அறிய நேரம் குறித்து நான் அறிவேன் என்று கூறினேன். உடனே அவர்கள் அது எந்த நேரம் என்று தெரியுமா? கூறு! என்று கூறினார்கள். அதற்கு நான், இமாம் மிம்பரில் இருந்து இறங்கும் நேரம் தான் அந்த நேரம். அதுவே நேரங்களில் மிகச் சிறந்த நேரம் என்று கூறினேன். அதற்கு என் தந்தை, அல்லாஹ் உனக்கு அருள்வளம் செய்வானாக! என்று கூறினார்கள்.

வாஸில் பின் ஹய்யான் வழியாக வரும் செய்திகள் சரியான அறிவிப்பாளர்தொடராகும்.


2 . அபூஇஸ்ஹாக் அவர்களின் அறிவிப்பு:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5465 , அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-1722 , அத்தம்ஹீத்-19/22 ,

الأوسط في السنن والإجماع والاختلاف (4/ 11)
1722 – حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: «عِنْدَ نُزُولِ الْإِمَامِ يَعْنِي السَّاعَةَ الَّتِي فِي الْجُمُعَةِ»

அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (அபூமூஸா ரலி) யிடம், ஜும்மாவின் அறிய நேரம் குறித்து நான் அறிவேன் என்று கூறினேன். உடனே அவர்கள் அது எந்த நேரம் என்று தெரியுமா? கூறு! என்று கூறினார்கள். அதற்கு நான், இமாம் மிம்பரில் இருந்து இறங்கும் நேரம் தான் அந்த நேரம். அதுவே நேரங்களில் மிகச் சிறந்த நேரம் என்று கூறினேன். அதற்கு என் தந்தை, அல்லாஹ் உனக்கு அருள்வளம் செய்வானாக! என்று கூறினார்கள்.


التمهيد – ابن عبد البر (19/ 22 ط المغربية):
وَحَدَّثَنَا ابن بشار حدثنا عبد الرحمان حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ السَّاعَةُ الَّتِي فِي الْجُمُعَةِ عِنْدَ نُزُولِ الْإِمَامِ عَلَى الْمِنْبَرِ

வெள்ளிக்கிழமையில் (துஆ ஏற்கப்படும் என கூறப்படும்) அந்த நேரம், இமாம் மிம்பரிலிருந்து இறங்கும் நேரமாகும் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிறந்த பலமான அறிஞர்களான வகீஃ பின் ஜர்ராஹ், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன் போன்றோரும், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் தனது அறிவிப்பில் குறிப்பிடும் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் அவர்களும், இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> அபூஇஸ்ஹாக் —> அபூபுர்தா
என்ற அறிவிப்பாளர்தொடரில் அபூபுர்தா அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.


இவ்வாறே அம்மார் பின் ருஸைக் என்பவரும் அபூஇஸ்ஹாக் —> அபூபுர்தா என்ற அறிவிப்பாளர்தொடரில் அபூபுர்தா அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளார் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறியுள்ளார்.


3 . முஆவியா பின் குர்ரா அவர்களின் அறிவிப்பு:

பார்க்க: அத்தம்ஹீத்-19/22 ,

التمهيد – ابن عبد البر (19/ 22 ط المغربية):
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْفَضْلِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ مُحَمَّدٍ الْوَرَّاقُ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا عَوْفٌ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ هِيَ السَّاعَةُ الَّتِي يَخْرُجُ فِيهَا الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ فَقَالَ ابْنُ عُمَرَ أَصَابَ اللَّهُ بِكَ

வெள்ளிக்கிழமையில் (துஆ ஏற்கப்படும் என கூறப்படும்) அந்த நேரம், இமாம் மிம்பரிலிருந்து இறங்கும் நேரத்திலிருந்து (அல்லது இமாம் மிம்பருக்கு வரும் நேரத்திலிருந்து) தொழுகை முடியும் வரை உள்ள நேரமாகும் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்கள், அல்லாஹ் உம்மை சரியானதைச் சொல்ல வைத்துவிட்டான்! என்று கூறினார்கள். (அல்லது சொல்ல வைப்பானாக! என்று பிரார்த்தனையாக கூறினார்கள்)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-3473-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஃபள்ல் பின் அப்பாஸ்
என்பவர் பற்றி இவர் தான் அறிவிக்கும் செய்திகளை அந்தளவுக்கு சரியாக மனனமிடவில்லை என்று இப்னுல் ஃபரளீ கூறியுள்ளார்.

மேலும் இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என முஹம்மத் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யஹ்யா-துஹ்லீ இமாம் கூறியதாக இப்னுல் ஃபரளீ கூறியுள்ளார்.

(நூல்: தாரீகு உலமாஇல் அன்தலுஸ்-203)

இவர் இந்தச் செய்தியின் வார்த்தைகளை சிறிது மாற்றமாக அறிவித்திருந்தாலும் மற்ற இருவர் போன்று அறிவிப்பாளர்தொடரை அறிவித்துள்ளார்.


1 . இந்தக் கருத்தில் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மக்ரமா —>  புகைர் —> அபூபுர்தா —> அபூமூஸா (ரலி)

பார்க்க: முஸ்லிம்-1546 , அபூதாவூத்-1049 , இப்னு குஸைமா-1739 , குப்ரா பைஹகீ-5999 , 6000 , …


ஆய்வுக்காக:

1 . ஜும்மாவில் இமாம் மிம்பரில் அமரும் போது துஆ கேட்டால் .

2 . ஜும்மாவில் ஒரு நேரம் இருக்கிறது .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-935 ,

4 comments on Muslim-1546

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    அவர்களிடமிருந்து அறிவிக்கும் புகைர் பின் அப்துல்லாஹ் மதீனாவாசி ஆவார். எனவே இவரின் அறிவிப்பை விட மற்ற மூவரின் அறிவிப்பே பலமாகும்.
    more …

    இந்த ஹதீஸின் விளக்கம் இவ்வளவுதானா இன்னும் மேற்கொண்டு உள்ளதா மோர் என்ற வார்த்தை வந்ததனால் சந்தேகமாக உள்ளது

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      தகவல் இன்னும் உள்ளது. மேற்கண்டவை தற்போது போதும்.

  2. வெள்ளிக்கிழமையன்று பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் எது?

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    வெள்ளிக்கிழமையன்று பன்னிரண்டு நாழிகைகள் உள்ளன. (அவற்றில் ஒரு நாழிகையில்) எந்த முஸ்லிம் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறாரோ அதை அவருக்கு மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அஸருக்குப்பின் கடைசி நேரத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்.

    இதை ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கிறார்கள்.

    -ஸுனன் அபூதாவூத் 884

    அஸ்ஸலாமு அலைக்கும், கீழ்காணும் செய்திக்கு விளக்கம் தேவை,

    அஸருக்குப்பின் கடைசி நேரத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள். என்று இந்த செய்தியில் வந்துள்ளது ஆனால் நீங்கள் உங்கள் கட்டூரையில்
    ””ஜும்மாவில் அத்தஹிய்யாத் அமர்வில் சிறிய நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நமது துஆ அமைந்து விட்டால் அது கட்டாயம் ஏற்கப்படும் என்று கருத்துக் கொள்வது தான் அனைத்து ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் முடிவாகும்””
    என்று கூறியுள்ளீர்கள் தயவுசெய்து விளக்கம் தரவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.