திருமணம் செய்யுங்கள். ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
(akhbar-asbahan-240: 240)أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنُ يَحْيَى أَبُو بَكْرٍ الضَّرِيرُ الْخَبَّازُ جَلِيسُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الْوَهَّابِ تُوُفِّيَ بَعْدَ الْخَمْسِينَ، كَتَبَ بِالْعِرَاقِ، وَبِأَصْبَهَانَ، مِنْ أَهْلِ الْقُرْآنِ وَالْفَضْلِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى الضَّرِيرُ الْخَبَّازُ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، ثنا أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، ثنا عَمْرُو بْنُ جُمَيْعٍ، عَنْ جُوَيْبِرٍ، عَنِ الضَّحَّاكِ، عَنِ النَّزَّالِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَزَوَّجُوا وَلَا تُطَلِّقُوا، فَإِنَّ الطَّلَاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ»
Akhbar-Asbahan-Tamil-.
Akhbar-Asbahan-TamilMisc-.
Akhbar-Asbahan-Shamila-240.
Akhbar-Asbahan-Alamiah-.
Akhbar-Asbahan-JawamiulKalim-474.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூநுஐம் அஸ்பஹானீ
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத்
3 . இஸ்மாயீல் பின் இப்ராஹீம்-அபூஇப்ராஹீம்
4 . அம்ர் பின் ஜுமைஃ
5 . ஜுவைபிர் பின் ஸயீத்
6 . ளஹ்ஹாக் பின் முஸாஹிம்
7 . நஸ்ஸால் பின் ஸப்ரா
8 . அலீ (ரலி)
1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32213-அம்ர் பின் ஜுமைஃ என்பவர் பற்றி,
- இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும், - முன்கருல் ஹதீஸ் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும், - பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களும், - கைவிடப்பட்டவர் என நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோரும்; இன்னும் பலரும் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/224, அல்காமில்-இப்னு அதீ-6/196, லிஸானுல் மீஸான்-5788, 6/197)
2 . மேலும் ராவீ-9949-ஜாபிர் பின் ஸயீத் என்ற ஜுவைபிர் பின் ஸயீத் என்பவர் பற்றி,
- இவர் ளஹ்ஹாக் அவர்கள் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களும், - இவரிடமிருந்து செய்திகளை அறிவிக்கக்கூடாது என யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்களும், - இவர் கைவிடப்பட்டவர் என நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோரும், - இவர் மிகவும் பலவீனமானவர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களும் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/320, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/205).
- அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இந்த செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்.
(நூல்: அள்ளயீஃபா-147, 731)
எனவே இது மிக பலவீனமான செய்தியாகும்.
இந்தச் செய்தி (அபூஇப்ராஹீம் அத்தர்ஜுமானீ-இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் பஸ்ஸாம் என்பவர் வழியாகவே) அபூஇப்ராஹீம் —> அம்ர் பின் ஜுமைஃ —> ஜுவைபிர் பின் ஸயீத் —> ளஹ்ஹாக்… என்ற மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.
அபூஇப்ராஹீம் அத்தர்ஜுமானீ என்பவரிடமிருந்து மூவர் அறிவித்துள்ளனர்.
1 . அலீ பின் அப்துல் ஹமீத்.
பார்க்க: அல்காமில்-இப்னு அதீ-1279 , தஃப்ஸீருஸ் ஸஃலபீ-3163 ,
- அல்காமில்-இப்னு அதீ-1279.
الكامل في ضعفاء الرجال (6/ 196):
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبد الْحَمِيدِ الغضائري، قَال: حَدَّثَنا أَبُو إِبْرَاهِيم الترجماني، حَدَّثَنا عَمْرو بْنُ جُمَيْعٍ عَنْ جُوَيْبِرٍ عَنِ الضَّحَّاكِ عَنِ النَّزَّالِ عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ تَزَوَّجُوا، ولَا تُطَلِّقُوا فَإِنَّ الطَّلاقَ يَهْتَزُّ منه العرش
…
- தஃப்ஸீருஸ் ஸஃலபீ-3163.
تفسير الثعلبي = الكشف والبيان عن تفسير القرآن ط دار التفسير (26/ 535):
[3163] أخبرنا ابن فنجويه، حدّثنا ابن حبيش المقري، حدّثنا علي بن عبد الحميد العصاري بحلب، حدّثنا أبو إبراهيم الترجماني، حدّثنا عمرو بن جميع عن جويبر عن الضّحاك عن النزال بن سمرة عن علي رضي الله عنه عن النّبي صلى الله عليه وسلم قال: «تزوّجوا ولا تطلّقوا، فإنّ الطّلاق يهتزّ منه العرش»
…
2 . அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்துல்அஸீஸ்.
பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-240 ,
3 . முஹம்மது பின் மஹ்மூத்.
பார்க்க: தாரீகு பக்தாத்-4103 , அல்மவ்ளூஆத்-இப்னுல் ஜவ்ஸீ-1290 ,
الموضوعات لابن الجوزي ط-أخرى (3/ 79)
1290- أَنبَأَنا الْقَزَّازُ، قَالَ: أَنبَأَنا أَبُو بَكْرٍ الْخَطِيبُ، قَالَ: أَنبَأَنا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ عُمَرَ الْمُقْرِئ، قَالَ: حَدَّثنا الْحَسَنُ بْنُ سَعِيدٍ الآدَمِيُّ، قَالَ: حَدَّثنا مُحَمَّدُ بْنُ مَحْمُودٍ الصَّيْدَلانِيُّ، قَالَ: حَدَّثنا أَبُو إِبْرَاهِيمَ التُّرْجُمَانِيُّ، قَالَ: حَدَّثنا عَمْرُو بْنُ جُمَيْعٍ، عَنْ جُوَيْبِرٍ، عَنِ الضَّحَّاكِ، عَنْ النَّزَّالِ بْنِ سَبْرَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قَالَ رَسُولُ الله صَلى الله عَليهِ وسَلمَ: تَزَوَّجُوا، ولا تُطَلِّقُوا فَإِنَّ الطَّلاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ.
– قال المصنف: هَذَا حديثٌ لا يصح، وفِيهِ آفة: الضَّحَّاك مجروح، وجويبر لَيس بشيء.
قَالَ النسائي، والدارقطني: جُوَيْبِر، وعمرو بن جميع متروكان، وقَالَ ابن عَدِيّ: كَانَ عَمْرو بن جميع يتهم بالوضع.
…
1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்காமில்-இப்னு அதீ-1279 , தஃப்ஸீருஸ் ஸஃலபீ-3163 , அக்பாரு அஸ்பஹான்-240 , தாரீகு பக்தாத்-4103 , அல்மவ்ளூஆத்-இப்னுல் ஜவ்ஸீ-1290 , …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7848 , இப்னு மாஜா-2018 ,
அஸ்ஸலாமு அலைக்கும்
Narrated Anas bin Malik:
Allah’s Apostle (Peace and blessing be upon him) said, “People will not stop asking questions till they say, ‘This is Allah, the Creator of everything, then who created Allah And he said: He is my imagination.
Sunan al Daraqutni:Vol.1,p.399
இந்த ஹதீஸின் தரம் என்ன
வ அலைக்கும் ஸலாம்.
நீங்கள் குறிப்பிடும் செய்தியை அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் (ரலி) என்றும், நூல்-ஸுனன் தாரகுத்னீ என்று கூறியுள்ளீர்கள். இது சரியா என்று குறிப்பிடவும்.
நீங்கள் குறிப்பிட்ட செய்தியை போன்றது முஸ்லிம்-212 இல் உள்ளது.
இந்த ஹதீஸை Facebook ல் பார்த்தேன்.இப்படி ஒரு ஹதீஸ் உள்ளதா என்று தெரிந்து கொள்ளவே கேட்டேன்
சரிங்க பாய். நாம் பார்த்தவரை அனஸ் (ரலி) வழியாக இந்தச் செய்தி ஸுனன் தாரகுத்னியில் இல்லை. புகாரீ-7296 லும், வேறு சில நூல்களிலும் இந்தச் செய்தி உள்ளது. நீங்கள் அந்த பேஸ்புக் லின்கை அனுப்பவும்.
ஜஸாக்கல்லஹ் ஹைர் பாய்.என்னிடம் அந்த ஹதீஸ் photo vaaga உள்ளது