தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-349

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 78

தொழுத தொழுகையை மீண்டும் இமாமுடன் சேர்ந்து தொழுவது

நபி(ஸல்) அவர்களுடன் நான் ஒரு இடத்தில் இருந்தேன். அதுசமயம் பாங்கு கூறியதும், நபி(ஸல்) அவர்கள் நின்று தொழ வைத்தார்கள். நான் தொழாமல் அமர்ந்திருந்தேன். மக்களுடன் நீ சேர்ந்து தொழாமல் இருக்கக் காரணம் என்ன? நீர் முஸ்லிம் இல்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே..! நான் முஸ்லிம் தான். எனினும் ”நான் என் வீட்டிலேயே தொழுது விட்டேன்”” என்று கூறினேன். நீ வீட்டிலே தொழுதிருந்தாலும் (ஜமாஅத் நடக்கும் இடத்திற்கு) நீ வந்தால் மக்களுடன் தொழுது கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக மிஹ்ஜன்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 349)

78- بَابُ إِعَادَةِ الصَّلَاةِ مَعَ الْإِمَامِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ: بُسْرُ بْنُ مِحْجَنٍ، عَنْ أَبِيهِ مِحْجَنٍ

أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُذِّنَ بِالصَّلَاةِ. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى، ثُمَّ رَجَعَ، وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ لَمْ يُصَلِّ مَعَهُ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ؟ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ»؟ فَقَالَ: بَلَى. يَا رَسُولَ اللَّهِ. وَلَكِنِّي قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ، وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-349.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: நஸாயீ-857 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.