நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்” என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்
(நஸாயி: 857)أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ بُسْرُ بْنُ مِحْجَنٍ، عَنْ مِحْجَنٍ،
أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذَّنَ بِالصَّلَاةِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ؟ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ؟» قَالَ: بَلَى. وَلَكِنِّي كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-848.
Nasaayi-Shamila-857.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-848.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9030-புஸ்ர் பின் மிஹ்ஜன் அவர்களைப் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே பலமானவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார். - மேலும் இவரிடமிருந்து ஸைத் பின் அஸ்லம் அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார்.
- இப்னு முன்தா இவரை நபித்தோழர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது தவறு. இவர் தாபிஈ என்பதே சரியானதென அபூநுஐம் போன்றோர் கூறியுள்ளனர்.
- இப்னுல் கத்தான் அவர்கள், இவரின் நிலை அறியப்படவில்லை என்று கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இவர் அறியப்படாதவர் எனக் கூறியுள்ளார். - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவர் பிரபல்யமான தாபிஈ என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/222, அல்இஸாபா-813 , தக்ரீபுத் தஹ்தீப்-1/167 )
எனவே தான் இந்த செய்தியை ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் பலவீனமானது எனவும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றோர் சரியானது எனவும் கூறியுள்ளனர்.
2 . இந்தக் கருத்தில் மிஹ்ஜன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-349 , அஹ்மத்-16393 , 16394 , 16395 , 18978 , நஸாயீ-857 , இப்னு ஹிப்பான்-2405 , தாரகுத்னீ-1541 , ஹாகிம்-890 , 891 ,
மேலும் பார்க்க: நஸாயீ-858 .
சமீப விமர்சனங்கள்