தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-543

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லாஹ் இப்னு உம்மீ மக்தூம் (ரலி) அவர்கள் விஷயத்தில் தான் ”அபஸ வதவல்லா”” எனத் துவங்கும் அத்தியாயம் இறக்கப்பட்டது. அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். ”முஹம்மது அவர்களே! என்னை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்”” என்று கூறினார். (அது சமயம்) நபி(ஸல்) அவர்களிம், இணைவைப்போரில் உள்ள முக்கியமானவர்களில் ஒருவர் இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரை (உம்மீ மக்தூம்(ரலி))ப் புறக்கணித்தார்கள். மேலும் (இணைவைக்கும்) மற்ற நபரை நோக்கி, ”இன்னாரின் தந்தையே! நான் கூறுவதில் குறை ஏதும் கண்டீர்களா?”” என்று கேட்டார்கள். ”இல்லை, ரத்த (உறவின்) மீது சத்தியமாக, நீர் கூறியதில் குறையை நான் காணவில்லை”” என்று அவர் கூறினார். அப்போது தான், ”குருடன் அவரிடம் வந்த போது அவர் புறக்கணித்தார், கடுகடுத்தார்”” என்று வசனம் இறக்கியருளப்பட்டது. இதை தன் தந்தை உர்வா கூறியதாக ஹிஷாம் கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 543)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ

أُنْزِلَتْ {عَبَسَ وَتَوَلَّى} [عبس: 1] فِي عَبْدِ اللَّهِ بْنِ أُمِّ مَكْتُومٍ “. جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَقُولُ: يَا مُحَمَّدُ اسْتَدْنِينِي. وَعِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ عُظَمَاءِ الْمُشْرِكِينَ. فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرِضُ عَنْهُ، وَيُقْبِلُ عَلَى الْآخَرِ، وَيَقُولُ: «يَا أَبَا فُلَانٍ هَلْ تَرَى بِمَا أَقُولُ بَأْسًا؟» فَيَقُولُ: لَا وَالدِّمَاءِ. مَا أَرَى بِمَا تَقُولُ بَأْسًا. فَأُنْزِلَتْ {عَبَسَ وَتَوَلَّى، أَنْ جَاءَهُ الْأَعْمَى} [عبس: 2]


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-543.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: திர்மிதீ-3331 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.