அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் 10 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.
‘தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சி யம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வயச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்’
(அல்குர்ஆன்: 80:1-10)…
(திர்மிதி: 3331)بَاب وَمِنْ سُورَةِ عَبَسَ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعيدٍ الأَمَوِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: هَذَا مَا عَرَضْنَا عَلَى هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ
أُنْزِلَ: {عَبَسَ وَتَوَلَّى} [عبس: 1] فِي ابْنِ أُمِّ مَكْتُومٍ الأَعْمَى، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَقُولُ: يَا رَسُولَ اللَّهِ أَرْشِدْنِي، وَعِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ عُظَمَاءِ المُشْرِكِينَ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرِضُ عَنْهُ وَيُقْبِلُ عَلَى الآخَرِ، وَيَقُولُ: «أَتَرَى بِمَا أَقُولُ بَأْسًا؟» فَيَقُولُ: لَا، فَفِي هَذَا أُنْزِلَ
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ»
وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «أُنْزِلَ عَبَسَ وَتَوَلَّى فِي ابْنِ أُمِّ مَكْتُومٍ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَائِشَةَ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3452.
Tirmidhi-Shamila-3331.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3275.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : மாலிக்-543 , திர்மிதீ-3331 , முஸ்னத் அபீ யஃலா-4848 , இப்னு ஹிப்பான்-535 , ஹாகிம்-3896 ,
யார் மறுமை நாளைக் கண்களால் பார்ப்பது போல் பார்க்க விரும்புவாரோ, சூரியன் (ஒளி நீக்கப்பட்டுச்) சுருட்டப்பட்டுவிடும்போது-(81 வது அத்தியாயம்), வானம் பிளந்து விடும்போது-(82 வது அத்தியாயம்), வானம் பிளந்துவிடும் போது-(84 வது அத்தியாயம்)பின்னர் இதை அவர் ஓதட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்
அறிவிப்பவர்- இப்னு உமர் (ரலி)
ஜமி உத் திர்மிதீ-3333
இந்த செய்தி நடுத்தரமானதா அல்லது இது பலவீனமான செய்தியா என்பது பற்றி கூடுதல் தகவல் பதிவு செய்யுங்கள் சகோதரரே…