தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-564

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

”உங்களின் அந்தஸ்துகளை உயர்த்துகின்ற, உங்கள் எஜமானனிடம் உங்களை தூய்மைப்படுத்துகின்ற உங்களின் செயல்களில் சிறந்ததாகவும், தங்கம், பட்டை தர்மம் செய்வதை விட உங்களுக்கு சிறந்ததாகவும், மேலும் உங்களின் எதிரிகளை நீங்கள் சந்தித்து, அவர்களின் கழுத்தை நீங்கள் வெட்டி, உங்கள் கழுத்தை அவர்கள் வெட்டுவது என்பதை விட உங்களுக்கு சிறந்ததாகவும் உள்ளதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அபுத்தர்தா (ரலி) கேட்ட போது, மக்கள் ‘சரி” என்று கூறினார்கள்.

”அது, அல்லாஹ்வை துதிப்பது தான் என்று அபுத்தர்தா (ரலி) கூறினார்கள்.

இதை அறிவிக்கும் ஸியாத் பின் அபூஸியாத் என்பவர் ”அல்லாஹ்வின் வேதனையிலிருந்து ஆதமின் மகனைக் காப்பாற்றும் செயல்களில் அல்லாஹ்வைத் திக்ர் செய்தல் என்பதை விட வேறு இல்லை” என முஆத் இப்னு ஜபல் (ரலி) கூறியதாகவும் கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 564)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ أَنَّهُ قَالَ: قَالَ أَبُو الدَّرْدَاءِ

أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ أَعمَالِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَخَيْرٍ لَكُمْ مِنْ إِعْطَاءِ الذَّهَبِ وَالْوَرِقِ، وَخَيْرٍ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ، وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ؟ قَالُوا: بَلَى، قَالَ: ذِكْرُ اللَّهِ تَعَالَى ” قَالَ زِيَادُ بْنُ أَبِي زِيَادٍ، وَقَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ مُعَاذُ بْنُ جَبَلٍ: «مَا عَمِلَ ابْنُ آدَمَ مِنْ عَمَلٍ أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللَّهِ، مِنْ ذِكْرِ اللَّهِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-564.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.