தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3377

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இதற்கு முன்னுள்ள பாடத் தலைப்புடன் தொடர்புடைய செய்திகள்.

“உங்களுடைய செயல்களில் மிகச் சிறந்ததும், உங்களுடைய இறைவனிடத்தில் மிகவும் தூய்மையானதும், உங்களுடைய பதவிகளில் மிகவும் உயர்ந்ததும், தங்கத்தையும் வெள்ளியையும் செலவு செய்வதை விட உங்களுக்கு மேலானதும், உங்களுடைய எதிரிகளை நீங்கள் சந்தித்து நீங்கள் அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுவதையும், அவர்கள் உங்களுடைய கழுத்துக்களை வெட்டுவதையும் விட உங்களுக்குச் சிறந்த நற்செயல் எதுவென்று நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “ஆம் (அறிவியுங்கள்)” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள்,”அது உயர்ந்தோனான அல்லாஹ்வை (திக்ர் செய்து) நினைவு கூர்வது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பிக்க வைப்பதில், (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட மேலான வேறு எந்த செயலும் இல்லை.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இச்செய்தியை அப்துல்லாஹ் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் வேறுசிலரும் இதே அறிவிப்பாளர் தொடரில் (முத்தஸிலாக) அறிவித்துள்ளனர். வேறு சிலர் (ஸியாத் பின் அபூஸியாத் —> அபுத்தர்தா-ரலி என்ற அறிவிப்பாளர்தொடரில்) முர்ஸல்-முன்கதிஃயாக அறிவித்துள்ளனர்.

(திர்மிதி: 3377)

بَاب مِنْهُ

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ، عَنْ زِيَادٍ، مَوْلَى ابْنِ عَيَّاشٍ عَنْ أَبِي بَحْرِيَّةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالوَرِقِ، وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ»؟ قَالُوا: بَلَى. قَالَ: «ذِكْرُ اللَّهِ تَعَالَى»

قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: «مَا شَيْءٌ أَنْجَى مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ»

وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، مِثْلَ هَذَا بِهَذَا الإِسْنَادِ، وَرَوَى بَعْضُهُمْ عَنْهُ فَأَرْسَلَهُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3377.
Tirmidhi-Alamiah-3299.
Tirmidhi-JawamiulKalim-3324.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . ஹுஸைன் பின் ஹுரைஸ்

3 . ஃபள்ல் பின் மூஸா

4 . அப்துல்லாஹ் பின் ஸயீத் (அபூஹிந்த் அவர்களின் மகன்)

5 . ஸியாத் பின் அபூஸியாத்-ஸியாத் பின் மைஸரா (இப்னு அய்யாஷ் அவர்களின் அடிமை)

6 . அபூபஹ்ரிய்யா-அப்துல்லாஹ் பின் கைஸ்

7 . அபுத்தர்தா (ரலி)


 

 


1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸியாத் பின் அபூஸியாத் —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: மாலிக்-564, அஹ்மத்-,


  • கஸீர் பின் முர்ரா —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34590,


  • ஸியாத் பின் அபூஸியாத் —> அபூபஹ்ரிய்யா —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: அஹ்மத்-, இப்னு மாஜா-3790, திர்மிதீ-3377, ஹாகிம்-,


2 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.