தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-572

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனையில் மிகச் சிறந்தது, அரஃபா நாளின் போது செய்யும் பிரார்த்தனையாகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு” என்பதாகும்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் (ரஹ்)

(முஅத்தா மாலிக்: 572)

وَحَدَّثَنِي عَنْ مالِكٍ، عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-572.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-496.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20209-தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார். இடையில் நபித்தோழர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது முர்ஸலான செய்தி. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
    இறப்பு ஹிஜ்ரி 676
    வயது: 45
    இமாம் அவர்கள், சொர்க்கவாசி என்று சுபச்செய்தி கூறப்பட்ட 10 நபித்தோழர்களில் ஒருவரான தல்ஹா பின் உபைதுல்லா என்று நினைத்து விட்டார். இது தவறு என இப்னுல் இராகீ அவர்கள் தனது நூலில் கூறியுள்ளார். (நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல் 1/21)

இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாக உள்ளன. அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் அனைத்து செய்திகளையும் இணைத்து ஹஸன் என்று கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-1503)

1 . இந்தக் கருத்தில் தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்: பார்க்க : மாலிக்-572 , 1270 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8125 , குப்ரா பைஹகீ-8391 , 9473 ,

மேலும் பார்க்க: 2. திர்மிதீ-3585 , 3. இப்னு அபீ ஷைபா-15135 , 4. ஷுஅபுல் ஈமான்-3778 , 5. இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக அத்துஆ-தப்ரானீ-875 இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது (இதில் வரும் ஃபரஜ் பின் ஃபளாலா பலவீனமானவர்), 6. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களின் வழியாக இப்னு மர்தவியா அவர்களின் அமாலீ என்ற நூலில்  பதிவுசெய்யப்பட்டுள்ள செய்தியில் இஸ்ஹாக் பின் முஹம்மது, அபூமஃஷர் போன்ற பலவீனமானவர்கள் வருவதால் அதுவும் பலவீனமானது. 7. இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
அவர்களின் ஹதீஸு அலீ பின் ஹுஜ்ர் என்ற நூலில் இந்த செய்தி முர்ஸலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதால் அதுவும் பலவீனமானது)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.