தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-37

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஹதீஸ் எண்-36 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வந்துள்ளது. 

(அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் (எகிப்தில் உள்ள) அல்யூன் என்ற கோட்டையின் வாசலை ‎காவல் காத்து கொண்டிருக்கும் போது (மேற்கண்ட) இந்த ஹதீஸை (தமக்கு) ‎அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவித்ததாக அபூஸாலிம் அல்ஜைஷானி (ரஹ்) அவர்கள் கூறினார்) 

இமாம் அபூதாவூத் கூறுகிறார்:

அல்யூன் என்ற கோட்டை ஃபுஸ்தாத் என்ற ஊரின் மலையின் மீது இருக்கிறது.

(மேலும்) இமாம் அபூதாவூத் கூறுகிறார்:

(ஹதீஸ் எண்-36 இல் வரும் வரும்) ஷைபான் அல்கித்பானீ என்பவர் ‎அபூஹுதைபா என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் ஷைபான் பின் உமைய்யா என்பவர் ஆவார்.‎

(அபூதாவூத்: 37)

حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُفَضَّلٌ، عَنْ عَيَّاشٍ، أَنَّ شِيَيْمَ بْنَ بَيْتَانَ، أَخْبَرَهُ بِهَذَا الْحَدِيثِ أَيْضًا، عَنْ أَبِي سَالِمٍ الْجَيْشَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو

يَذْكُرُ ذَلِكَ وَهُوَ مَعَهُ مُرَابِطٌ بِحِصْنِ بَابِ أَلْيُونَ

قَالَ أَبُو دَاوُدَ: «حِصْنُ أَلْيُونَ بِالْفِسْطَاطِ عَلَى جَبَلٍ»، قَالَ أَبُو دَاوُدَ: «وَهُوَ شَيْبَانُ بْنُ أُمَيَّةَ يُكْنَى أَبَا حُذَيْفَةَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-37.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-33.




2 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-37 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-36 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.