பாடம் : 20
சுத்தம் செய்வதற்கு தடுக்கப்பட்டவை
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் (வாழும்) காலத்தில் எங்களில் ஒருவர் (போருக்கு செல்லும் போது) தான் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் செல்வத்தில், உடமையாளருக்குப் பாதி, தமக்குப் பாதி என்ற நிபந்தனையின் அடிப்படையில் தமது சகோதரனுடைய மெலிந்த ஒட்டகத்தை (வாடகைக்கு) எடுத்துச் செல்வார். (அதன் படி போரில் ஒரு அம்பு கிடைத்தால்) எங்களில் ஒருவருக்கு அம்புத் தலையும் இறகுகளும் ஒன்னொருவருக்கு அம்பின் அடிப்பாகமும் கிடைக்கும்.
பிறகு ருவைபிஃ சொன்னார்கள்: எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
ருவைபிஃ! எனக்கு பின் உன் வாழ்நாள் நீடிக்கலாம் ! அப்போது நீ மக்களுக்கு யார் தனது தாடிக்கு முடிச்சுப் போட்டு கொள்கின்றாரோ அல்லது யார் கழுத்தில் கயிறு அணிகின்றாரோ அல்லது மிருகங்களின் விட்டை அல்லது எலும்பைக் கொண்டு சுத்தம் செய்கின்றாரோ நிச்சயமாக அவரிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்கள் விலகி விட்டார்கள் என்று அறிவித்துவிடுக!
மஸ்லமா பின் முகல்லத் மூலம் எகிப்தின் கீழ் பகுதிக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ருபைபிஃ பின் சாமித் (ரலி) அவர்கள் கூம்ஷரீக் எனும் ஊரிலிருந்து அல்கமா என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அல்லது அல்கமா என்று ஊரிலிருந்து கூம்ஷரீக் எனும் உருக்கு செல்லும் வழியில் இதை அறிவித்தாக ஷைபான் குறிப்பிடுகிறார்.
(அபூதாவூத்: 36)20- بَابُ مَا يُنْهَى عَنْهُ أَنْ يُسْتَنْجَى بِهِ
حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا الْمُفَضَّلُ يَعْنِي ابْنَ فَضَالَةَ الْمِصْرِيَّ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، أَنَّ شِيَيْمَ بْنَ بَيْتَانَ، أَخْبَرَهُ عَنْ شَيْبَانَ الْقِتْبَانِيِّ، قَالَ
إِنَّ مَسْلَمَةَ بْنَ مُخَلَّدٍ اسْتَعْمَلَ رُوَيْفِعَ بْنَ ثَابِتٍ عَلَى أَسْفَلِ الْأَرْضِ، قَالَ شَيْبَانُ: فَسِرْنَا مَعَهُ مِنْ كَوْمِ شَرِيكٍ، إِلَى عَلْقَمَاءَ أَوْ مِنْ عَلْقَمَاءَ إِلَى كَوْمِ شَرِيكٍ يُرِيدُ عَلْقَامَ فَقَالَ رُوَيْفِعٌ: «إِنْ كَانَ أَحَدُنَا فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَأْخُذُ نِضْوَ أَخِيهِ عَلَى أَنَّ لَهُ النِّصْفَ مِمَّا يَغْنَمُ، وَلَنَا النِّصْفُ، وَإِنْ كَانَ أَحَدُنَا لَيَطِيرُ لَهُ النَّصْلُ وَالرِّيشُ، وَلِلْآخَرِ الْقِدْحُ» ثُمَّ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا رُوَيْفِعُ لَعَلَّ الْحَيَاةَ سَتَطُولُ بِكَ بَعْدِي، فَأَخْبِرِ النَّاسَ أَنَّهُ مَنْ عَقَدَ لِحْيَتَهُ، أَوْ تَقَلَّدَ وَتَرًا، أَوْ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ، أَوْ عَظْمٍ فَإِنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ بَرِيءٌ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-36.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-33.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19352-ஷைபான் அல்கித்பானீ என்பவரை இப்னு கல்ஃபூன் பிறப்பு ஹிஜ்ரி 555
இறப்பு ஹிஜ்ரி 636
வயது: 81
அவர்கள் பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். அபூஸயீத் பின் யூனுஸ் அவர்கள், இவர் எகிப்து, முஸ்லிம்களால் வெற்றிக்கொள்ளப்படும் சமயம் அந்தப்போரில் ஷஹீதானார் என்று குறிப்பிட்டுள்ளார். என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: இக்மாலு தஹ்தீபுல் கமால்-6/307, தக்ரீபுத் தஹ்தீப்-1/441)
என்றாலும் இந்த செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது. (பார்க்க: அபூதாவூத்-37 , நஸாயீ-5067)
1 . இந்தக் கருத்தில் ருவைபிஃ பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஷைபான் அல்கித்பானீ —> ருவைபிஃ பின் ஸாபித் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, அபூதாவூத்-36 , முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,
- ஷுயைம்-ஷியைம் பின் பைதான் —> ருவைபிஃ பின் ஸாபித் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-5067 , ஷரஹ் மஆனில் ஆஸார்-,
2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-37 .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17422 ,
சமீப விமர்சனங்கள்