உக்பா பின்ஆமிர் (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பத்து பேர் கொண்ட) ஒரு குழுவினர் வந்தபோது, ஒன்பது நபர்களிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கி கொண்டு ஒருவரிடம் வாங்கவில்லை. அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே!, இவரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள்? என கேட்க, “அவர் தாயத் அணிந்து உள்ளார்” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், தனது கையால் அதை அறுத்தெரிந்து விட்டு அவரிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 17422)حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ، عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ، فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا؟ قَالَ: ” إِنَّ عَلَيْهِ تَمِيمَةً ” فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا، فَبَايَعَهُ، وَقَالَ: ” مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16781.
Musnad-Ahmad-Shamila-17422.
Musnad-Ahmad-Alamiah-16781.
Musnad-Ahmad-JawamiulKalim-17091.
தாயத் அணிவது பற்றிய சட்டச் சுருக்கம்:
1 . சிலர், எந்த வகையான தாயத்தையும் அணிவது கூடாது. அதில் குர்ஆன் வசனங்களோ அல்லது வேறு எதுவும் இருந்தாலும் அணிந்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகின்றனர்.
2 . வேறுசிலர், நோய் போன்றவை ஏற்பட்டப் பிறகு குர்ஆன் வசனங்களை எழுதி அணிந்துக் கொள்ளலாம். நோய் போன்றவை ஏற்படும் முன்புதான் அணிவது கூடாது என்று கூறுகின்றனர்.
3 . வேறுசிலர், நோய் போன்றவை ஏற்படும் முன்பும் பின்பும் குர்ஆன் வசனங்களை எழுதி அணிந்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.
இந்த மூன்று கருத்துக்களில் முதல் கருத்தான எந்த வகையான தாயத்தையும் அணிவது கூடாது என்ற கருத்துக்கே ஆதாரங்கள் பலமாக உள்ளன. இதன்படி முடிவு செய்வதே மிகச் சரியானதாகும்…
விரிவான விளக்கம்:
உக்பா பின் ஆமிர் (ரலி), இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் உகைம் (ரஹ்), அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் (ரஹ்), இப்ராஹீம் நகஈ (ரஹ்), இப்னுல் அரபீ (ரஹ்) போன்ற பலர் முதல் கருத்தின்படி முடிவு செய்துள்ளனர்.
தாயத் அணியக் கூடாது என்போரின் ஆதாரங்கள்:
1 . தாயத் அணியக்கூடாது என்றக் கருத்தில் நபியின் சொல்லாக வந்துள்ள செய்திகளில் தடை பொதுவாக உள்ளது. தாயத்தில் குர்ஆன் வசனங்கள் இருந்தால் அணிந்துக் கொள்ளலாம் என்ற விதிவிலக்கு அந்த செய்திகளில் இல்லை.
2 . மருத்துவத்திற்காக ஓதிப் பார்ப்பது குறித்து வரும் நபிமொழிகளில் ஓதிக் கொள்வதும், ஓதி ஊதி விடுவதும், ஓதி மேலே தடவிக்கொள்வது பற்றியும் தான் கூறப்பட்டுள்ளது. எழுதிக் கட்டிக் கொள்வது பற்றியோ, தொங்கவிடுவது பற்றியோ கூறப்படவில்லை.
3 . குர்ஆன் வசனங்களை தாயத்தாக எழுதிக் கொள்ளலாம் என்பதற்கு அனுமதி அளித்தால் அதில் குர்ஆன் அல்லாதவைகளும், ஷிர்க்கான வார்த்தைகளும் கலந்துவிட வாய்ப்புள்ளது. எது தடை செய்யப்பட்டது, எது தடைசெய்யப்படாதது என்று அடையாளம் காணமுடியாமல் போய்விடும்.
மேலும் குர்ஆனுடன் விளையாடும் போக்கும் ஏற்படும்.
இப்போதும் கூட குர்ஆன் வசனங்களை தாயத்தில் எழுதக்கூடியவர்கள் பலவகையான மோசடிகளையும், விளையாட்டையும் கையாண்டு உள்ளனர் என்பதைக் காணலாம்.
உதாரணம்: அலிஃப் லாம் மீம் போன்ற சில ஸூராக்களின் ஆரம்பத்தில் வரும் ஹுரூஃபுல் முகத்தஆத் எழுத்துக்களை சதுர, செவ்வக வடிவ கட்டங்களில் எழுதியிருப்பார்கள்…
ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்), இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
(ரஹ்), அதாஃ.., அபூஜஃபர் பாகிர், அஹ்மத்…, இப்னு அப்துல்பர், பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
குர்துபீ, இப்னு தைமியா, இப்னுல் கய்யிம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் இரண்டாவது கருத்தின்படி முடிவு செய்துள்ளனர்.
தாயத் அணிவது கூடும் என்போரின் ஆதாரங்கள்:
பார்க்க: ஹாகிம்-7506.
இந்தக் கருத்தில் நபித்தோழர்களின் சொல்லாக வரும் சில செய்திகள் பலவீனமானவையாகும். மேலும் சிலவை நபித்தோழர்கள் சுயமாக சிந்தித்துக் கூறிய செய்திகளாகும். நபித்தோழர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் போது நபிவழிக்கு நெருக்கமானதையே நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அப்துஸ்ஸமத் பின் அப்துல்வாரிஸ்
3 . அப்துல்அஸீஸ் பின் முஸ்லிம்
4 . யஸீத் பின் அபூமன்ஸூர்
5 . துகைன் பின் ஆமிர்
6 . உக்பா பின் ஆமிர் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48803-யஸீத் பின் அபூமன்ஸூர் என்பவர் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் விசயத்தில் குறையில்லை என்று கூறியுள்ளார். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவரை தபஉத் தாபிஈன்களில் உள்ள பலமானவர்கள் பட்டியலில் கூறிவிட்டு, இவர் துகைன் பின் ஆமிரிடம் கேட்டதாக தனக்கு தெரியவில்லை என்றும்; அவ்வாறு கேட்டிருந்தால் இவர் தபஉத் தாபிஈன்களில் உள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரை ஸதூக் என்றும்; - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் விசயத்தில் குறையில்லை என்றும் கூறியுள்ளனர். - ஒரு செய்தியின் மூலம் சிலர் இவரை நபித்தோழர் என்று கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இதன் அறிவிப்பாளர்தொடர் தவறு என்றும்; அதில் இடம்பெறுபவர் அபூமன்ஸூர் ஆவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். - இவர் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து சில ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்பதால் இப்னு யூனுஸ் அவர்கள் இவரை தாபிஈ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் துல்லிஹ்யா (ரலி) அவர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/291, அஸ்ஸிகாத்-7/626, தஹ்தீபுல் கமால்-32/251, அல்காஷிஃப்-4/527, அல்இஸாபா-11/429, தஹ்தீபுத் தஹ்தீப்-4/430, தக்ரீபுத் தஹ்தீப்-1/1083)
யஸீத் பின் அபூமன்ஸூர் அவர்களின் இறப்பு ஹி-111 அல்லது 120 என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இவர் எகிப்துக்கு சென்றுள்ளார். துகைன் பின் ஆமிர் அவர்களின் இறப்பு ஹி-100 என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. எனவே யஸீத் பின் அபூமன்ஸூர், துகைன் அவர்களிடம் இந்தச் செய்தியை கேட்டிருக்க வாய்ப்புள்ளது. இவர் ஹஸன் தரம் என்பதால் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரமாகும்.
1 . இந்தக் கருத்தில் உக்பா பின்ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- யஸீத் பின் அபூமன்ஸூர் —> துகைன் பின் ஆமிர் —> உக்பா பின்ஆமிர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-17422, முஸ்னத் ஹாரிஸ்-563, அல்முஃஜமுல் கபீர்-885, ஹாகிம்-7513, முஸ்னத் உக்பா பின் ஆமிர்-40,
- முஸ்னத் ஹாரிஸ்-563.
مسند الحارث = بغية الباحث عن زوائد مسند الحارث (2/ 600)
563 – حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبَانَ , ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَنْصُورٍ , عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ , عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَةُ رَهْطٍ لِيُبَايِعُوهُ , فَبَايَعَ تِسْعَةً وَلَمْ يُبَايِعِ الْآخَرَ , فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا لَكَ لَمْ تُبَايِعْ هَذَا؟ فَقَالَ: «إِنَّ عَلَيْهِ تَمِيمَةً» , فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا , فَبَايَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ»
…
- முஸ்னத் உக்பா பின் ஆமிர்-40.
مسند عقبة بن عامر (ص: 41، بترقيم الشاملة آليا)
40 – حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ , حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ , حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ , عَنْ دُخَيْنٍ الْحَجَرِيِّ , عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ, أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ فَقَالُوا يَا رَسُولَ اللهِ بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ وَاحِدًا؟ فَقَالَ: «إِنَّ عَلَيْهِ تَمِيمَةً». فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ وَقَالَ: «مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ»
…
இதனுடன் தொடர்புடைய தாயத் தடைச் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17404, 18781, 20000, முஸ்லிம்-4296, அபூதாவூத்-36, 3883,
தாயத் அணிவதற்கு ஆதரமாக கூறப்படும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-3893, ஹாகிம்-7506,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள், விரிவான தகவல்கள் தேவையேற்படும்போது சேர்க்கப்படும்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்
நீங்கள் கேள்விக் கேட்டதின்படி பதிவு செய்துள்ளதால் உங்களுக்கும் ஜஸாகல்லாஹு கைரா.
அல்ஹம்துலில்லாஹ்