யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 17404)حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا حَيْوَةُ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عُبَيْدٍ، قَالَ: سَمِعْتُ مِشْرَحَ بْنَ هَاعَانَ، يَقُولُ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ تَعَلَّقَ تَمِيمَةً، فَلَا أَتَمَّ اللَّهُ لَهُ، وَمَنْ تَعَلَّقَ وَدَعَةً، فَلَا وَدَعَ اللَّهُ لَهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16763.
Musnad-Ahmad-Shamila-17404.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17073.
….இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் خالد بن عبيد المعافري காலித் பின் உபைத் பற்றிய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.
- மேலும் இவர் மிஷ்ரஹ் என்பவரிடமிருந்து மட்டும் , அதுவும் ஒரே ஒரு ஹதீஸை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஹய்வா பின் ஷுரைஹ் என்பவர் மட்டும் அறிவித்துள்ளார்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- சிலர் ஒருவரின் ஆசிரியரும், மாணவரும் பலமானவர்கள் என்றால் அவர் அறியப்படாதவர் அல்ல என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பாளரை பலமானவர் என்று கூறியுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் உக்பா பின்ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17404 , முஸ்னத் அபீயஃலா-1759 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-6086 , அல்முஃஜமுல் கபீர்-820 , ஹாகிம்-7501 , 8289 , ஸுனன் குப்ரா பைஹகீ-19605 ,
- மேலும் ஃபுதூஹ் மிஸ்ர், ஷரஹ் மஆனில்ஆஸார், தம்ஹீத் போன்ற நூல்களில் மிஷ்ரஹ்விடமிருந்து ராவீ-25382-இப்னு லஹீஆ (நினைவாற்றலில் பலவீனமானவர்) அறிவிக்கும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இதை ஹஸன் தரம் என கூறுகின்றனர்… - மேலும் தப்ரானியின் முஸ்னதுஷ் ஷாமியீன் என்ற நூலிலும் 234 எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் வலீது பின் வலீது பொய்யர்…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17422 ,
சமீப விமர்சனங்கள்