அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு திடுக்கத்தின் போது கூறவேண்டிய சில வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார்கள். அவை:-
அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வஅய் யஹ்ளுரூன் ’
(பொருள் : அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:
தன் பிள்ளைகளில் விவரமுள்ளவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) இவைகளை கற்றுக் கொடுப்பார்கள். விவரமில்லாத பிள்ளைகளுக்கு அதை எழுதி அவர்களின் உடலில் கட்டிவிடுவார்கள்.
(அபூதாவூத்: 3893)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْفَزَعِ كَلِمَاتٍ: «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ»
وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يُعَلِّمُهُنَّ مَنْ عَقَلَ مِنْ بَنِيهِ، وَمَنْ لَمْ يَعْقِلْ كَتَبَهُ فَأَعْلَقَهُ عَلَيْهِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3893.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3397.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36907-முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், சிலர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும், இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
- இவர் தத்லீஸ் செய்பவர் என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் விமர்சித்துள்ளனர். மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஹதீஸ்கலை இமாம்கள் இவர் விசயத்தில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். இவரை (ஹதீஸில்) ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்கள் இவர் போன்று அறிவித்துள்ளனரா? என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர்; என்றாலும் தத்லீஸ் செய்பவர், பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர்; வரலாற்று செய்திகளில் இவரை ஏற்கப்படும் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுல் கமால்-24/405, தஹ்தீபுத் தஹ்தீப்-3/504, தக்ரீபுத் தஹ்தீப்-1/825, தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ்-1/168, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/254)
- இந்த கருத்தில் வரும் செய்திகளில் எவற்றிலும் முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள், அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்த செய்தியின் முதல் பகுதி வேறு சில அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களின் செயலைப் பற்றி வரும் இரண்டாம் பகுதியை முஹம்மது பின் இஸ்ஹாக் மட்டும் தனித்து அறிவிப்பதால் இது முன்கர்-நிராகரிக்கப்பட்ட செய்தி என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-264)
3 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23547 , 23604 , 29621 , அஹ்மத்-6696 , அபூதாவூத்-3893 , திர்மிதீ-3528 , குப்ரா நஸாயீ-10533 , 10534 , ஹாகிம்-2010 ,
மேலும் பார்க்க: முஸ்லிம்-5248 .
சமீப விமர்சனங்கள்