தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-2010

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், ”அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ இகாபிஹீ, வமின் ஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறட்டும்.

(பொருள் : அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த அவரது பருமடைந்த பிள்ளைகளும் தூங்கும் சமயம் இதை ஓதுவார்கள். பருவமடையாத பிள்ளைகள் என்றால் இதை எழுதி அவர்களின் கழுத்தில் மாட்டிவிடுவார்கள்.

(ஹாகிம்: 2010)

حَدَّثَنِي أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ بَالَوَيْهِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، ثنا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عَبْدِ اللَّهِ وَهُوَ ابْنُ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِكَلِمَاتٍ مِنَ الْفَزَعِ «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَمِنْ عِقَابِهِ وَمِنْ شَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونَ»

قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَمَنْ بَلَغَ مِنْ وَلَدٍ عَلَّمَهُنَّ إِيَّاهُ فَقَالَهُنَّ عِنْدَ قَوْمِهِ وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فَعَلَّقَهَا فِي عُنُقِهِ.

«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ مُتَّصِلٌ فِي مَوْضِعِ الْخِلَافِ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2010.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1946.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் பற்றி, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர். என்றாலும் தத்லீஸ் செய்பவர்; பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர்; வரலாற்று செய்திகளில் இவரை ஏற்கப்படும் என்று கூறியுள்ளார்.
  • இந்த கருத்தில் வரும் செய்திகளில் எவற்றிலும் முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள், அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-3893 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.