பாடம்:
தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டு எழுந்தால் கூறவேண்டியவை.
நாங்கள் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், ” பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ இகாபிஹீ, வ மின்ஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்ற பிரார்த்தனையை நாங்கள் ஓதவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
(பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(குப்ரா-நஸாயி: 10533)وَمَا يَقُولُ مَنْ يَفْزَعُ فِي مَنَامِهِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا كَلِمَاتٍ يَقُولُهَا عِنْدَ النَّوْمِ مِنَ الْفَزَعِ: «بِاسْمِ اللهِ، أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَمِنْ شَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10533.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10128.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் பற்றி, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர். என்றாலும் தத்லீஸ் செய்பவர்; பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர்; வரலாற்று செய்திகளில் இவரை ஏற்கப்படும் என்று கூறியுள்ளார். - இந்த கருத்தில் வரும் செய்திகளில் எவற்றிலும் முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள், அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-3893 .
சமீப விமர்சனங்கள்