உக்பா பின்ஆமிர் (ரலி) கூறியதாவது:
நாங்கள் பத்து பேர் கொண்ட ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற போது ஒன்பது நபர்களிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கி கொண்டு ஒருவரிடம் வாங்கவில்லை. அதற்கு சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, இவரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள் என கேட்க, அவர் தோளில் தாயத் அணிந்து உள்ளார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த மனிதர் தாயத்தை அறுத்தெரிந்தார். அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கினார்கள். அதன் பிறகு நபி (ஸல்) கூறினார்கள்: யார் (தாயத்தைத்) தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.
(ஹாகிம்: 7513)حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى، ثَنَا إِمَامُ الْمُسْلِمِينَ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، ثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْحَرَشِيُّ، ثَنَا سَهْلُ بْنُ أَسْلَمَ الْعَدَوِيُّ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ، عَنِ الرَّجُلَيْنِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ،
أَنَّهُ جَاءَ فِي رَكْبِ عَشَرَةٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ بَيْعَةِ رَجُلٍ مِنْهُمْ، فَقَالُوا: مَا شَأْنُ هَذَا الرَّجُلِ لَا تُبَايِعُهُ؟ فَقَالَ: «إِنَّ فِي عَضُدِهِ تَمِيمَةً» فَقَطَعَ الرَّجُلُ التَّمِيمَةَ، فَبَايَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «مَنْ عَلَّقَ فَقَدْ أَشْرَكَ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7513.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7577.
இதன் அறிவிப்பாளர்தொடரில் உக்பா பின்ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து ரஜுலைனி-இரு மனிதர்கள் அறிவிக்கிறார்கள் என்று வருகிறது. ஆனால் இது எழுத்துப்பிழை. துகைன் பின் ஆமிர்- دخين بن عامر الحجري என்பதே சரி. இவர் பலமான அறிவிப்பாளர்.
ثقة
الكاشف في معرفة من له رواية في الكتب الستة: (2 / 379)
மேலும் பார்க்க: அஹ்மத்-17422.
சமீப விமர்சனங்கள்