ஈஸா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் நோயுற்றபோது அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். நீங்கள் தாயத் (போன்ற) ஏதாவது அணிந்துக்கொள்ளலாமே என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அதற்கு அவர்கள், யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்க நான் எப்படி அணியமுடியும்? என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 18781)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ أَخِيهِ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ:
دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ وَهُوَ مَرِيضٌ نَعُودُهُ فَقِيلَ لَهُ: لَوْ تَعَلَّقْتَ شَيْئًا، فَقَالَ: أَتَعَلَّقُ شَيْئًا، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-18781.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18401.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
இதன் அறிவிப்பாளர்தொடரில் محمد بن عبد الرحمن الأنصاري வரும் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் மனனசக்தியில் பலவீனமானவர்.
- மேலும் இதில் வரும் ஈஸா பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அப்துல்லாஹ் பின் உகைமை சந்தித்தாரா என தெரியவில்லை என இப்னு கானிஃ கூறியுள்ளார்.
- அப்துல்லாஹ் பின் உகைம்-அப்துல்லாஹ் பின் ஹகீம்-அபூமஃபத் ஜுஹனீ-அப்துல்லாஹ் பின் மஃபத் போன்ற பெயர்கள் ஒருவரையே குறிக்கின்றன என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் சிறு வயது நபித்தோழர் ஆவார்.
- அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து எதையும் செவியுறவில்லை என்று புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஸுர்ஆ போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
وقال أبو زرعة : لم يسمع ابن عكيم من النبي – صلى الله عليه وسلم – وكان في زمانه وسمعت أبي يقول : لا يعرف له سماع صحيح .
إكمال تهذيب الكمال: (8 / 71)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23457 , அஹ்மத்-18781 , 18786 , திர்மிதீ-2072 , அல்முஃஜமுல் கபீர்-960 , ஹாகிம்-7503 , குப்ரா பைஹகீ-19610 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: நஸாயீ-4079 .
3 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23474 .
4 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20682 .
5 . அபூமிஜ்லஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23466 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17422 ,
சமீப விமர்சனங்கள்