தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-960

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஈஸா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் நோயுற்றபோது அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். நீங்கள் தாயத் (போன்ற) ஏதாவது  அணிந்துக்கொள்ளலாமே என்று அவர்களிடம் கூறினோம்.

அதற்கு அவர்கள், தாயத் போன்றதை அணிவதற்கு மரணமே பரவாயில்லை எனக் கூறி, யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற தாம் செவியேற்றுள்ளதாக கூறினார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 960)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلْمٍ أَبُو يَحْيَى الرَّازِيُّ، ثنا الْحَسَنُ بْنُ الزِّبْرِقَانِ الْكُوفِيُّ، ثنا الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى، قَالَ:

دَخَلْنَا عَلَى أَبِي مَعْبَدٍ الْجُهَنِيِّ نَعُودُهُ فَقُلْنَا: أَلَا تُعِلِّقُ شَيْئًا؟ قَالَ: الْمَوْتُ أَقْرَبُ مِنْ ذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ عَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-960.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-18429.




إسناد ضعيف فيه محمد بن عبد الرحمن الأنصاري وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் محمد بن عبد الرحمن الأنصاري வரும் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் மனனசக்தியில் பலவீனமானவர்.
  • மேலும் இதில் வரும் ஈஸா பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அப்துல்லாஹ் பின் உகைமை (ரலி)  அவர்களை சந்தித்தாரா என தெரியவில்லை என இப்னு கானிஃ கூறியுள்ளார்.
  • அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி)  அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் எதையும் செவியுறவில்லை என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    போன்றோர் கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க: அஹ்மத்-18781 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.