ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார்.
யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்).
அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)
(musannaf-abdur-razzaq-20682: 20682)أخبرنا عبد الرزاق، [أَخْبَرَنَا مَعْمَرٌ] (1)، عَنْ أَبَانَ، عَنِ الْحَسَنِ، يَرْفَعُ الْحَدِيثَ قَالَ:
مَنْ عَقَدَ عُقْدَةً فِيهَا رُقْيَةٌ، فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ، فَقَدْ كَفَرَ، وَمَنْ عَلَّقَ عُلْقَةً وُكِلَ إِلَيْهَا.
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-20682.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36-அபான் பின் அபூஅய்யாஷ் விடப்பட்டவர் என்பதால் அதுவும் மிக பலவீனமான செய்தி.
متروك
تقريب التهذيب: (1 / 103)
- மேலும் ஹஸன் பஸரீ (ரஹ்) நபி (ஸல்) அவர்களிடம் எதையும் செவியேற்கவில்லை.
4 . இந்தக் கருத்தில் ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20682 , குப்ரா பைஹகீ-19611 , …
மேலும் பார்க்க: அஹ்மத்-18781 .
சமீப விமர்சனங்கள்