தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-49

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 26

பல் துலக்கும் முறை.

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தருமாறு ‎கேட்டு வந்த போது அவர்கள் தமது நாக்கை (பற்குச்சியால்) துலக்கக் கண்டேன் என்று ‎அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அறிவிப்பதாக முஸத்தத் ‎குறிப்பிடுகிறார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன் அப்போது அவர்கள் தமது ‎நாவின் ஓரத்தில் பற்குச்சியை வைத்துக் கொண்டு உஹ், உஹ் என்று சப்தமிட்டவாறு ‎பல் துலக்கிக் கொண்டிருக்கக் கண்டேன் என அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) ‎கூறுவதாக சுலைமான் குறிப்பிடுகின்றார் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்.‎

அபூபுர்தா (ரலி) அவர்கள் தமது தந்தை அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) ‎மூலம் அறிவிக்கிறார்கள். அது ஒரு நீண்ட ஹதீஸாக இருந்தது. அதை நான் சுருக்கி ‎விட்டேன் என முஸத்தத் கூறுவதாக அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்.‎

அறிவிப்பவர் : அபூபுர்தா(ரலி)‎

(அபூதாவூத்: 49)

26- بَابُ كَيْفَ يَسْتَاكُ

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: مُسَدَّدٌ قَالَ

«أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَرَأَيْتُهُ يَسْتَاكُ عَلَى لِسَانِهِ»

قَالَ أَبُو دَاوُدَ: وَقَالَ سُلَيْمَانُ: قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَاكُ، وَقَدْ وَضَعَ السِّوَاكَ عَلَى طَرَفِ لِسَانِهِ، وَهُوَ يَقُولُ: «إِهْ إِهْ» يَعْنِي يَتَهَوَّعُ. قَالَ أَبُو دَاوُدَ: قَالَ مُسَدَّدٌ: فَكَانَ حَدِيثًا طَوِيلًا وَلَكِنِّي اخْتَصَرْتُهُ


AbuDawood-Tamil-49.
AbuDawood-Shamila-49.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.