பாடம் : 29
பல் துலக்குவது இயற்கை மரபு சார்ந்தது.
மீசையை கத்தரித்தல், தாடியை வளர விடுதல், பல் துலக்குதல், நாசிக்கு தண்ணீர் செலுத்துதல், நகங்களை வெட்டுதல், விரல் கணுக்குகளை நன்கு கழுவுதல், அக்குள் முடி களைதல், மர்ம ஸ்தான முடி எடுத்தல், மல ஜலம் கழித்தபின் தண்ணீரால் சுத்தம் செய்தல் ஆகிய இந்த பத்து காரியங்களும் இப்றாகீம் நபியின் வழிமுறைகளிலிருந்து அரபியர்களிடம் எஞ்சி நிற்பவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரும் முஸ்அப் என்பவர் நான் பத்தாவது காரியத்தை மறந்து விட்டேன். அது வாய் கொப்பளிப்பதாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியதாக ஜகரிய்யா பின் அபூஸாயிதா தெரிவிக்கிறார்.
(அபூதாவூத்: 53)29- بَابُ السِّوَاكِ مِنَ الْفِطْرَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، عَنِ ابْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَالِاسْتِنْشَاقُ بِالْمَاءِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَنَتْفُ الْإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ – يَعْنِي الِاسْتِنْجَاءَ بِالْمَاءِ – “،
قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ: وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ «الْمَضْمَضَةَ»
AbuDawood-Tamil-53.
AbuDawood-Shamila-53.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்