தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-118

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

யஹ்யா அல்மாஸினி அவர்கள் தன் தந்தை அப்துல்லாஹ் பின் ஸைது பின் ஆஸிம் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி உலூ செய்தார்கள்? என்பதை எனக்கு செய்து காட்ட முடியுமா? என்று வினவினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அவர்கள் ஆம் என்று பதிலளித்து விட்டு தண்ணீர் கொண்டு வரச் செய்து அதை தமது இருகைகளிலும் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு மூன்று முறை வாய் கொப்பளித்து, மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்பு தனது இரு கைகளையும் முட்டுக்கைகள் வரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு தனது இரு கைகளாலும் தலையின் முன் பாகத்தில் துவங்கி பிடரி வரை கொண்டு சென்று ஆரம்பித்த இடத்திற்கே கைகளைத் திருப்பிக் கொண்டு வந்து மஸஹ் செய்தார்கள். பிறகு இருகால்களையும் கழுவினார்கள் என இப்னு யஹ்யா அறிவிக்கிறார்.

(குறிப்பு : இதே ஹதீஸ் நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 118)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ [ص:30]، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ – وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ -:

هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ: نَعَمْ، «فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»


AbuDawood-Tamil-118.
AbuDawood-Shamila-118.
AbuDawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-186 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.