தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-186

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 39

இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவுதல். 

யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அம்ர் பின் அபூஹஸன் (ரஹ்) அவர்களுடன் (ஒரு நாள்) நான் இருந்தேன். அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத்தூய்மை பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று அங்கத் தூய்மை செய்துக் காட்டினார்கள்:

(ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி வாய்கொப்புளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரு முறை கழுவினார்கள்.

பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இரு கைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டுசென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (ஆரம்பித்த இடத்திற்கே) கொண்டுவந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று தடவை செய்யவில்லை). பின்னர் தம் கால்களை கணுக்கால்கள் வரை கழுவினார்கள்.

அத்தியாயம்: 4

(புகாரி: 186)

بَابُ غَسْلِ الرِّجْلَيْنِ إِلَى الكَعْبَيْنِ

حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِيهِ، شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ

سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ، عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَتَوَضَّأَ لَهُمْ وُضُوءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَأَكْفَأَ عَلَى يَدِهِ مِنَ التَّوْرِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثَلاَثَ غَرَفَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ إِلَى المِرْفَقَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَمَسَحَ رَأْسَهُ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الكَعْبَيْنِ


Bukhari-Tamil-186.
Bukhari-TamilMisc-186.
Bukhari-Shamila-186.
Bukhari-Alamiah-180.
Bukhari-JawamiulKalim-182.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . மூஸா பின் இஸ்மாயீல்

3 . உஹைப் பின் காலித்

4 . அம்ர் பின் யஹ்யா

5 . யஹ்யா பின் உமாரா

6 . அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)


  • இந்தச் செய்தியை அம்ர் பின் யஹ்யா அவர்களிடமிருந்து இமாம் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    உஹைப் பின் காலித், காலித் பின் அப்துல்லாஹ், அப்துல்அஸீஸ் பின் அபூஸலமா, ஸுலைமான் பின் பிலால், முஹம்மத் பின் ஃபுலைஹ் ஆகிய ஆறுபேரும் அறிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும், “தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்ததாக” அறிவித்துள்ளனர். (சிலர் ஒரு தடவை என்று வார்த்தையில் கூறியும், சிலர் மற்ற உறுப்புகளை பற்றி எத்தனை தடவை என்று கூறியதை தலைக்கு மஸஹ் செய்யும் விசயத்தில் கூறாமலும் அறிவித்துள்ளனர்).
  • அம்ர் பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் பின் உயைனா அவர்கள் தான், “தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்ததாக” அறிவித்துள்ளார்.
  • இந்த செய்தியை ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்களிடமிருந்து 3 முறை கேட்டுள்ளேன். ஒரு முறை அறிவிக்கும் போது, “ஒரு தடவை தலைக்கு மஸஹ் செய்தார்கள்” என்று அறிவித்தார். மற்ற இரண்டுமுறைகளில் அறிவிக்கும் போது “இரு தடவை தலைக்கு மஸஹ் செய்தார்கள்” என்று அறிவித்தார் என்று தனது தந்தை அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹம்பல் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(பார்க்க: அஹ்மத்-16452)

எனவே ஸுஃப்யான் அவர்கள் தலைக்கு மஸஹ் செய்வது இரண்டு தடவை என்று அறிவிக்கும் செய்திகள் ஷாத் ஆகும்.


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்ர் பின் யஹ்யா —> யஹ்யா பின் உமாரா —> அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

பார்க்க: மாலிக்-32 , முஸ்னத் தயாலிஸீ-1198 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-05 , 138 , அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-185 , 186 , 191192197199 , முஸ்லிம்-398 , இப்னு மாஜா-434 , அபூதாவூத்-118 , திர்மிதீ-2832 , நஸாயீ-,


  • அம்ர் பின் யஹ்யா அவர்களிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்கள் அறிவிக்கும் செய்திகள்
    :

பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-421 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-57 , அஹ்மத்-16452 , திர்மிதீ-47 , நஸாயீ-99 , …


  • முஸ்னத் ஹுமைதீ-421.

مسند الحميدي (1/ 392)
421 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا سُفْيَانُ قَالَ: ثنا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي حَسَنٍ الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ: ” تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَغَسَلَ رِجْلَيْهِ .


2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

3 . உஸ்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

4 . அலீ பின் அபூதாலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-91 .

5 . ருபைய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-126 .

6 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

8 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-419 .

9 . லகீத் பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

10 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

11 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

12 . முஆவியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

13 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

14 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

15 . மிக்தாம் பின் மஃதீ கரிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

16 . அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

17 . அம்மார் பின் யாஸிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

….more…

2 comments on Bukhari-186

  1. தப்ஸிர் இப்னு கஸிர் பதிவுகளை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

    1. அஸ்ஸலாமு அலைக்கும். இது ஹதீஸ்களின் தரம் அறிவதற்காக ஏற்படுத்தப்பட்ட Software. தப்ஸீர்களை பதிவு செய்யும் திட்டம் தற்போது இல்லை. எனினும்,
      அதிகமான கோரிக்கைகள் வரும் போது, எதிர்காலத்தில் முடிவுகள் மாறலாம். துஆச் செய்யுங்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.