தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-191

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 41 ஒரு கை நீரில் வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்துதல்.

 191. ‘அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றிக் கழுவினார். பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார். இவ்வாறு மூன்று முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார். மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) தலையின் முன் புறமும் பின்புறமும தடவினார். மேலும் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார். பின்னர், இதுதான் நபி(ஸல்) அவர்களின் உளூ என்று கூறினார்’ யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.
Book : 4


بَابُ مَنْ مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ

أَنَّهُ أَفْرَغَ مِنَ الإِنَاءِ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ – أَوْ مَضْمَضَ وَاسْتَنْشَقَ – مِنْ كَفَّةٍ وَاحِدَةٍ، فَفَعَلَ ذَلِكَ ثَلاَثًا، فَغَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ، مَا أَقْبَلَ وَمَا أَدْبَرَ، وَغَسَلَ رِجْلَيْهِ إِلَى الكَعْبَيْنِ، ثُمَّ قَالَ: (هَكَذَا وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)


Bukhari-Tamil-191.
Bukhari-TamilMisc-191
Bukhari-Shamila-191.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

முஸத்தத் பின் முஸர்ஹத்-அல்அஸதீ

مسدد بن مسرهد

இறப்பு: ஹிஜ்ரி 228, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ்

தந்தை பெயர்: முஸர்ஹத்

வம்சம்: அல்அஸதீ

புனைப்பெயர்: அபூ ஹஸன்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 150

இறப்பு: ஹிஜ்ரி 228, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

முஸத்தத் பின் முஸர்ஹத்-அல்அஸதீ ரஹ் அவர்கள் மிகப் பலமான ஹதீஸ் அறிவிப்பாளர் மற்றும் மனனசக்தி மிக்கவர். இவர் ஹிஜ்ரி 150-ல் பிறந்தார். பஸராவைச் சேர்ந்த இவர், பஸராவில் முதன்முதலில் முஸ்னத் நூலைத் தொகுத்தவர் என்று கூறப்படுகிறது.

இவர் ஹிஜ்ரி 228-ல் பஸராவில் மரணமடைந்தார். புகாரி இமாம், அபூ தாவூத், இமாம் திர்மிதீ போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபூ கஸீர், ஹுஷைம் பின் பஷீர் பின் அல்காஸிம், யஸீத் பின் ஸரீஃ, ஈஸா பின் யூனுஸ் பின் அபூ இஸ்ஹாக், ஃபுளைல் பின் இயாழ் பின் மஸ்ஊத், மஹ்தீ பின் மைமூன் அல்அஸ்தீ, ஜுவைரிய்யா பின் அஸ்மா பின் உபைத், ஜஃபர் பின் ஸுலைமான் அத்தபாஈ, ஹம்மாத் பின் ஸைத், அபூ அஹ்வஸ், ஸலாம் பின் ஸுலைம் அல்ஹனஃபீ, அப்துல் வாரிஸ் பின் ஸயீத் பின் தக்வான்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், அபூ தாவூத், இமாம் திர்மிதீ, முஹம்மத் பின் யஹ்யா, யஹ்யா (இவரது மகன்), அபூ ஸுர்ஆ, அபூ ஹாதிம், யஃகூப் அல்ஃபஸவீ, யஃகூப் அஸ்ஸதூஸீ, முஆத் பின் அல்முஸன்னா, இஸ்மாயீல் அல்காழீ, அபூ கலீஃபா அல்ஜுமஹீ

வேறு பெயர்கள்: முஸத்தத், முஸத்தத் பின் முஸர்ஹத்


ஆதாரம்: muslimscholars.info (30175) · Should verify

காலித் பின் அப்துல்லாஹ்-அத்தஹ்ஹான்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அம்ர் பின் யஹ்யா-அல்அன்ஸாரீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

யஹ்யா பின் உமாரா-அல்அன்ஸாரீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் ஸைத்-அல்அன்ஸாரீ (ரலி)

عبد الله بن زيد بن عاصم المازني

இறப்பு: ஹிஜ்ரி 63, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் பின் கஅப் பின் அம்ர் பின் அவ்ஃப் பின் மப்தூல் பின் அம்ர் பின் ஃகனம் பின் மாஸின் பின் அன்நஜ்ஜார்

தந்தை பெயர்: ஸைத் பின் ஆஸிம் அல்மாஸினீ

வம்சம்: பனூ மாஸின் பின் அன்நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 63, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அன்ஸாரீ ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். நபி (ஸல்) அவர்களின் உளூ செய்யும் முறையை விவரித்தவர். முஸைலமத்துல் கத்தாபை கொன்றவர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

ஹிஜ்ரி 63 ஆம் ஆண்டு ஹர்ரா போரில் ஷஹீதாக்கப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்பாத் பின் தமீம் அல்மாஸினீ, ஸயீத் பின் அல்முஸய்யப், யஹ்யா பின் அம்மாரா, அபூ ஸுஃப்யான்

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ, அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம்


ஆதாரம்: muslimscholars.info (605) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.