தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-192

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 42

தலைக்கு ஒரு தடவை ‘மஸ்ஹு’ செய்தல்

192. யஹ்யா பின் உமாரா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை பற்றிக் கேட்டார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அவர்களுக்கு அங்கத் தூய்மை செய்துகாட்டினார்கள்.

(ஆரம்பமாகப் பாத்திரத்திலிருந்த தண்ணீரைத்) தம்மிரு கைகளில் ஊற்றி இரு (முன்)கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்திற்குள் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி மூன்று முறை வாய் கொப்புளித்து (மூக்கிற்குள் நீர் செலுத்தி சுத்தப்படுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவி னார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் அள்ளி) இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள்.

பிறகு பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். அதாவது தமது இரு கைகளையும் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டுவந்தார்கள். பிறகு பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர் அள்ளி) தம்முடைய இரு கால்களையும் கழுவினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது தலையை (ஒரே) ஒரு தடவை மட்டுமே (ஈரக் கையால்) தடவினார்கள்” என்று அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம்: 4


بَابُ مَسْحِ الرَّأْسِ مَرَّةً

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ:

شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ لَهُمْ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، بِثَلاَثِ غَرَفَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ، فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ بِهِمَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَغَسَلَ رِجْلَيْهِ»

وحَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: مَسَحَ رَأْسَهُ مَرَّةً


Bukhari-Tamil-192.
Bukhari-TamilMisc-192.
Bukhari-Shamila-192.
Bukhari-Alamiah-185.
Bukhari-JawamiulKalim-187.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

ஸுலைமான் பின் ஹர்ப்-அபூஅய்யூப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

உஹைப் பின் காலித்-அல்பாஹிலி

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அம்ர் பின் யஹ்யா-அல்அன்ஸாரீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

யஹ்யா பின் உமாரா-அல்அன்ஸாரீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் ஸைத்-அல்அன்ஸாரீ (ரலி)

عبد الله بن زيد بن عاصم المازني

இறப்பு: ஹிஜ்ரி 63, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் பின் கஅப் பின் அம்ர் பின் அவ்ஃப் பின் மப்தூல் பின் அம்ர் பின் ஃகனம் பின் மாஸின் பின் அன்நஜ்ஜார்

தந்தை பெயர்: ஸைத் பின் ஆஸிம் அல்மாஸினீ

வம்சம்: பனூ மாஸின் பின் அன்நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 63, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அன்ஸாரீ ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். நபி (ஸல்) அவர்களின் உளூ செய்யும் முறையை விவரித்தவர். முஸைலமத்துல் கத்தாபை கொன்றவர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

ஹிஜ்ரி 63 ஆம் ஆண்டு ஹர்ரா போரில் ஷஹீதாக்கப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்பாத் பின் தமீம் அல்மாஸினீ, ஸயீத் பின் அல்முஸய்யப், யஹ்யா பின் அம்மாரா, அபூ ஸுஃப்யான்

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ, அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம்


ஆதாரம்: muslimscholars.info (605) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.