ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களிடம் (அடிக்கடி) வருபவர்களாக இருந்தார்கள். (ஒருநாள்) எங்களிடம் (வந்து) “எனக்கு ‘உளூ’ செய்ய தண்ணீர் ஊற்று” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்ததை வர்ணித்தார்கள்.
(பின்னர்) உள்ளங்கைகளை மூன்று முறை கழுவினார்கள். மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். ஒரு முறை வாய்க் கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தி மூக்கை சிந்தி சுத்தம் செய்தார்கள். இரு கைகளையும் மும்மூன்று தடவை கழுவினார்கள்.
தலையை இரண்டு முறை தடவி மஸஹ் செய்தார்கள். (முதலில்) பின்னாலிருந்து முன்னோக்கியும் பின்பு முன்னாலிருந்து பின்னோக்கியும் தடவினார்கள். இரு காதுகளின் உட்பகுதியையும் வெளிப்பகுதியையும் தடவினார்கள். இரு கால்களையும் மும்மூன்று தடவை கழுவினார்கள்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
முஸத்தத் (ரஹ்) அவர்களின் கருத்தைதான் அறிவித்து இருக்கிறேன். (அவரின் வார்த்தைகளை முழுமையாக மனனம் செய்யவில்லை).
(அபூதாவூத்: 126)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ، قَالَتْ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْتِينَا فَحَدَّثَتْنَا أَنَّهُ قَالَ: «اسْكُبِي لِي وَضُوءًا»، فَذَكَرَتْ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ فِيهِ: فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، وَوَضَّأَ وَجْهَهُ ثَلَاثًا، وَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مَرَّةً، وَوَضَّأَ يَدَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ بِمُؤَخَّرِ رَأْسِهِ، ثُمَّ بِمُقَدَّمِهِ وَبِأُذُنَيْهِ كِلْتَيْهِمَا ظُهُورِهِمَا وَبُطُونِهِمَا، وَوَضَّأَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا
قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا مَعْنَى حَدِيثِ مُسَدَّدٍ
Abu-Dawood-Tamil-108.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-126.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-108.
- இந்தச் செய்தி சுருக்கமாகவும் வந்துள்ளது. விரிவாகவும் வந்துள்ளது.
இதில் தலைக்கு மஸஹ் செய்வது இரண்டு முறை என்று வந்துள்ளது.
- இதன் கருத்து, தலையின் பின்பாகத்திலிருந்து முன்பாகமும், முன்பாகத்திலிருந்து பின்பாகமும் மஸஹ் செய்ததைத்தான் இரண்டுதடவை என்று கூறப்பட்டுள்ளது என்றும் பொருள்கொள்ளலாம்.
- இதை இரண்டு தடவைகள் செய்தார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25811-அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் அவர்கள் நல்ல மனிதர்; சிறப்புக்குரியவர் தான் என்றாலும் ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர், இவர் சுமாரனவர் என்றும்; சிலர் பலவீனமானவர் என்றும்; சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும்; சிலர் இவர் மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.
- இப்னு உயைனா அவர்கள், குறைஷிகளில் நான்கு பேரின் ஹதீஸ்களை விட்டுவிடவேண்டும் என்று கூறிவிட்டு அவர்களில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் ஒருவர் என்று கூறினார். இவரின் நினைவாற்றல் சரியில்லை என்று இப்னு உயைனா அவர்கள் கூறியதாக அபூமஃமர், ஹுமைதீ ஆகியோர் அறிவித்துள்ளனர்.
- இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். - இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
திர்மிதீ, ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர். - யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் இவரின் செய்தியில் அதிகம் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார். - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல. இவரின் ஹதீஸ்களை (தனி) ஆதாரமாக ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளார். - அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர், என்றாலும் இவரின் ஹதீஸில் பலவீனம் உள்ளது என்று தக்ரீபில் கூறியுள்ளார். இவர் நினைவாற்றல் சரியில்லாதவர்; இவரின் செய்திகளை மற்றவர்களின் செய்தியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இவர் பிறருக்கு மாற்றமாக அறிவித்தால் ஏற்கக்கூடாது. மாற்றமில்லாமல் அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தரம் என்று தனது தல்கீஸில் கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/424, தக்ரீபுத் தஹ்தீப்-1/542…)
- உளூ பற்றி இவர் வழியாக வரும் பல அறிவிப்பாளர்தொடர்களில், கருத்து குளறுபடியாக உள்ளது என்றும், வார்த்தைகள் மாறி வந்துள்ளது என்றும், சிலவை மற்ற பலமான அறிவிப்பாளர்களின் செய்திகளுக்கு மாற்றமாக உள்ளது என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் செய்தியில் கூறப்படும் விமர்சனம்:
1 . முகத்தை கழுவியபின், வாய் கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்துதல் ஆகியவற்றை செய்ததாக கூறியுள்ளார்.
2 . வாய் கொப்பளித்தல், நாசிக்கு நீர் செலுத்தியது ஒரு தடவை என்று கூறியுள்ளார்.
3 . தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்ததாக கூறியுள்ளார்.
4 . தலைக்கு மஸஹ் செய்யும் போது கையை பின்னாலிருந்து முன்னால் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இவரிடமிருந்து அறிவித்தவர்கள்:
சரியான அறிவிப்பாளர்தொடர்கள்.
1 . கைஸ் பின் ரபீஃ
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1729 , அல்முஃஜமுல் கபீர்-693 ,
…தலைக்கு புதிய தண்ணீர் (இப்னு மாஜா-390 , குப்ரா பைஹகீ-1125 )
2 . மஃமர் பின் ராஷித்
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-11 , 35 , 65 , 119 , அல்அவ்வலு மின் கிதாபிஸ் ஸலாஹ்-, முஸ்னத் இஸ்ஹாக்-2264 ,
3 . ஸுஃப்யான் பின் உயைனா
பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-345 , அஹ்மத்-27015 , அபூதாவூத்-127 ,
- முஸ்னத் ஹுமைதீ-345.
مسند الحميدي (1/ 337)
345 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا سُفْيَانُ قَالَ: ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: أَرْسَلَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ إِلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ؛ أَسْأَلُهَا عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ يَتَوَضَّأُ عِنْدَهَا فَأَتَيْتُهَافَأَخْرَجَتْ إِلِيَّ إِنَاءً يَكُونُ مُدًّا أَوْ مُدَّا وَرُبْعًا بِمُدِّ بَنِي هَاشِمٍ فَقَالَتْ «بِهَذَا كُنْتُ أُخْرِجُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَضُوءَ فَيَبْدَأُ فَيَغْسِلُ يَدَيْهِ ثَلَاثًا قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا الْإِنَاءَ، ثُمَّ يَتَمَضْمَضُ وَيَسْتَنْثِرُ ثَلَاثًا ثَلَاثًا، وَيَغْسِلُ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ يَغْسِلُ يَدَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ يَمْسَحُ بِرَأْسِهِ مُقْبِلًا وَمُدْبِرًا، وَيَغْسِلُ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا»
قَالَتْ: وَقَدْ جَاءَنِي ابْنُ عَمَّتِكَ فَسَأَلَنِي عَنْهُ فَأَخْبَرْتُهُ فَقَالَ: مَا عَلِمْنَا فِي كِتَابِ اللَّهِ إِلَّا غُسْلَيْنِ وَمَسْحَتَيْنِ يَعْنِي ابْنَ عَبَّاسٍ
قَالَ أَبُو بَكْرٍ: وَوَصَفَ لَنَا سُفْيَانُ الْمَسْحَ فَوَضَعَ يَدَيْهِ عَلَى قَرْنَيْهِ ثُمَّ مَسَحَ بِهِمَا إِلَى جَبْهَتِهِ، ثُمَّ رَفَعَهُمَا وَوَضَعَهُمَا عَلَى قَرْنَيْهِ مِنْ وَسَطِ رَأْسِهِ، ثُمَّ مَسَحَ إِلَى قَفَاهُ قَالَ سُفْيَانُ: وَكَانَ ابْنُ عَجْلَانَ حَدَّثَنَاهُ أَوَّلًا عَنِ ابْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ فَزَادَ فِي الْمَسْحِ قَالَ: ثُمَّ مَسَحَ مِنْ قَرْنَيْهِ عَلَى عَارِضَيْهِ حَتَّى بَلَغَ طَرَفَ لِحْيَتِهِ، فَلَمَّا سَأَلْنَا ابْنَ عَقِيلٍ عَنْهُ، لَمْ يَصِفْ لَنَا فِي الْمَسْحِ الْعَارِضَيْنِ، وَكَانَ فِي حِفْظِهِ شَيْءٌ فَكَرِهْتُ أَنْ أَلْقَنَهُ
…
4 . ஸுஃப்யான் ஸவ்ரீ
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-59 , 145 , 153 , 198 , 211 , முஸ்னத் இஸ்ஹாக்-2263 , அஹ்மத்-27016 , 27018 , இப்னு மாஜா-418 , 438 , அபூதாவூத்-130 ,
4 . பிஷ்ர் பின் முஃபள்ளல்
பார்க்க: அபூதாவூத்-126, திர்மிதீ-33 ,
5 . ஹஸன் பின் ஸாலிஹ்
பார்க்க: அஹ்மத்-27019 , இப்னு மாஜா-441 , அபூதாவூத்-131 ,
6 . இப்னு அஜ்லான்
பார்க்க: அஹ்மத்-26398, 26402, அபூதாவூத்-128 , 129 , திர்மிதீ-34 ,
7 . ரவ்ஹ் பின் காஸிம்
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-199 , கிராஅதுன் நபீ-35, இப்னு மாஜா-458 ,
8 . உபைதுல்லாஹ் பின் அம்ர்
பார்க்க: தாரிமீ-717 ,
9 . ஷரீக் பின் அப்துல்லாஹ்..
பார்க்க: இப்னு மாஜா-390 , 440 ,
இந்தக் கருத்தில் இவர் வழியாக வரும் செய்திகள் பற்றிய சுருக்கம்:
1 . சில அறிவிப்பாளர் தொடரில், முதலில் வாய்கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தி பிறகு முகம் கழுவியதாக அறிவித்துள்ளார்.
(பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-119 , முஸ்னத் இஸ்ஹாக்-2264 , முஸ்னத் ஹுமைதீ-345 , அஹ்மத்-27016 ,
சிலவற்றில் இதற்கு நேர்மாற்றமாக முதலில் முகம் கழுவிவிட்டு பிறகு வாய்கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தியதாக அறிவித்துள்ளார்.
(பார்க்க: அபூதாவூத்-126,
2 . வாய்கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தியதை ஒரு தடவை என்று அறிவித்துள்ளார்.
(பார்க்க: அஹ்மத்-27016 , அபூதாவூத்-126,
வாய்கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தியதை மூன்று தடவை என்று அறிவித்துள்ளார்.
(பார்க்க: அஹ்மத்-27015 ,
3 . தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்ததாக அறிவித்துள்ளார்.
…?
சில சமயம் தலைக்கு மஸஹ் செய்தார்கள் என்று மட்டுமே அறிவித்துள்ளார். சில சமயம் இரு தடவை மஸஹ் செய்ததாக அறிவித்துள்ளார்.
(பார்க்க: அஹ்மத்-27015 ,
தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்ததாக அறிவித்துள்ளார்.
(பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-11 , …
4 . தலைக்கு மஸஹ் செய்வதற்கு தனியாக தண்ணீரை எடுத்ததாக அறிவித்துள்ளார்.
(பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1729 ,
கையை முழங்கைவரை கழுவிய பின், கையில் உள்ள தண்ணீரைக் கொண்டே தலைக்கு மஸஹ் செய்ததாக அறிவித்துள்ளார்.
(பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-211 , அஹ்மத்-27016 , அபூதாவூத்-130 ,
5 . தலைக்கு மஸஹ் செய்யும் போது தலையின் பின்பாகத்திலிருந்து முன்பாகமாக செய்ய வேண்டும் என்று ஒரு செய்தியில் அறிவித்துள்ளார்.
(பார்க்க: திர்மிதீ-33 ,
மற்றொன்றில் முன்பாகத்திலிருந்து பின்பாகமாக செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
(பார்க்க: திர்மிதீ-34 ,
மஸஹ் செய்த முறையைக் கூறும் வார்த்தைகளை மாற்றி அறிவித்துள்ளார்.
(பார்க்க: அஹ்மத்-27024 , 27028 , அபூதாவூத்-128 ,
6 . பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ருபய்யிஃ அவர்களிடம் வந்தபோது இந்த உளூ முறையை அவர்கள், இப்னு அப்பாஸ் அவர்களிடம் கூறியபோது அவர், அல்லாஹ்வின் வேதத்தில் இரு உறுப்புகளை கழுவவேண்டும், இரு உறுப்புகளை மஸஹ் செய்யவேண்டும் என்றே நாம் காண்கிறோம் என்று கூறியதாக அறிவித்துள்ளார். (இது இப்னு உயைனா அவர்களின் அறிவிப்பு).
(பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-345,
இந்த உளூ முறையை ருபய்யிஃ அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறியபோது அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூவின் உறுப்புகள் அனைத்தையும் மக்கள் கழுவ வேண்டும் என்று கருதுகின்றனர். நாம், அல்லாஹ்வின் வேதத்தில் இருகால்களுக்கு மஸஹ் செய்யவேண்டும் என்று இருப்பதாக காண்கிறோம் என்று கூறியதாக அறிவித்துள்ளார். (இது மஃமர் அவர்களின் அறிவிப்பு).
(பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-65 , 119 ,
இந்த இரண்டு கருத்தும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புகாரி-140 இல் அறிவித்துள்ள செய்திக்கு மாற்றமாக உள்ளது.
இந்தச் செய்தி பற்றி அறிஞர்களின் விமர்சனம்:
1 . இப்னு அப்துல்பர்.
وهو حديث مختلف في ألفاظه، وهو يدور على عبد الله بن محمد بن عقيل عن الربيع،. . .، وعبد الله بن محمد بن عقيل: ليس بالحافظ عندهم، وقد اختلف عنه في هذا
2 . அப்பாஸ் பின் யஸீத்.
وقال العباس بن يزيد -راوي هذا الحديث عن ابن عيينة-: “هذه المرأة حدثت عن النبي صلى الله عليه وسلم أنه بدأ بالوجه قبل المضمضة والاستنشاق، وقد حدث أهل بدر، منهم: عثمان وعلي رضي الله عنهما: أنه بدأ بالمضمضة والاستنشاق قبل الوجه، والناس عليه
3 . இப்னு உயைனா.
قال سفيان: وكان ابن عجلان حدثناه أولا، عن ابن عقيل، عن الربيع، فزاد في المسح، قال: ثم مسح من قرنيه إلى عارضيه حتى بلغ طرف لحيته، فلما سألنا ابن عقيل عنه، لم يصف لنا في المسح العارضين وكان في حفظه شيء فكرهت أن ألقنه
4 . நவவீ.
أنه ضعيف؛ فإن راويه عبد الله بن محمد: ضعيف عند الأكثرين، وإذا كان ضعيفا لم يحتج بروايته ولو لم يخالفه غيره، ولأن هذا الحديث مضطرب عن عبد الله بن محمد
…
(இவரிடமிருந்து அறிவித்தவர்கள்: பலவீனமான அறிவிப்பாளர்தொடர்கள். ஜவாமிஉல் கலிம் எண்கள்
1 . அப்பாத் பின் கஸீர். (முன்தகா ஹதீஸு அபூஅப்தில்லாஹ்-146, தாரீகு பஃக்தாத்-1827)
2 . முஹம்மத் பின் ஸைத் பின் அலீ (அக்பாரு அஸ்பஹான்-2618)
3 . ஸயீத் பின் அபூஅரூபா பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
(அல்முஃஜமுல் அவ்ஸத்-959)
4 . இப்னு அஜ்லான் (அஹ்மத்-27022 , ஷரஹ்மஆனில் ஆஸார்-99, ஹதீஸு அபூஅலீ-39, முஃஜமுஷ் ஷுயூகுல் கபீர்-752, முஃஜமுல் கபீர்-20191, 20179, அஷரு மினல் மஷாஇக்-25, அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-369, 324, அல்முஃஜமுல் அவ்ஸத்-6266, அல்முஃஜமுஸ் ஸஃகீர்-1165, தாரீகு பஃக்தாத்-1989, தாரீகு திமிஷ்க்-32444, ஸப்யிய்யாத்-45, ….)
…
5 . இந்தக் கருத்தில் ருபய்யிஃ பின்த் முஅவ்வித் பின் அஃப்ராஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் —> ருபய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, ஹுமைதீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-, அபூதாவூத்-126 , 129 , 130 , 131 , திர்மிதீ-33 , 34 , …
- அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் —> ருபய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலி) —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, இப்னு மாஜா-458 ,
- லைஸ் பின் அபூஸுலைம் —> நுஃமான் பின் ஸாலிம் —> ருபய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,
மேலும் பார்க்க: புகாரி-186 .
சமீப விமர்சனங்கள்