தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-150

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

150. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். தமது கால் பாகத்தில் மஸஹ் செய்தார்கள். பிறகு, தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தார்கள். 

அறிவிப்பவர் : (ரலி)

இந்த ஹதீஸை முஃதமர் என்பார் அறிவிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு காலுறைகள் மீதும் தன் தலையின் முன் பாகத்திலும் தலைப்பாகையின் மீதும் மஸஹ் செய்தார்கள் என்று அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

முகீரா (ரலி)

المغيرة بن شعبة

இறப்பு: ஹிஜ்ரி 50, கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அல்முகீரா பின் ஷுஃபா பின் அபீ ஆமிர் பின் மஸ்ஊத் பின் முஃதப் பின் மாலிக் பின் கஅப் பின் அம்ர் பின் ஸஃத் பின் அவ்ஃப்

தந்தை பெயர்: ஷுஃபா பின் அபீ ஆமிர்

வம்சம்: ஸகீஃப்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அபூ ஈஸா, அபூ முஹம்மத், மூகீரா அர்ரஃயீ

ஊர் பெயர்: தாயிஃப்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, பஸரா, கூஃபா

பிறப்பு: தாயிஃப்

இறப்பு: ஹிஜ்ரி 50, கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

முகீரா பின் ஷுஃபா ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். அவர் தைரியத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் பெயர் பெற்றவர். யர்மூக் அல்லது காதிஸிய்யா போரில் தனது ஒரு கண்ணை இழந்தார்.

பஸரா மற்றும் கூஃபா நகரங்களுக்கு ஆளுநராகப் பணியாற்றினார். ஹிஜ்ரி 50 ஆம் ஆண்டு கூஃபாவில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): உர்வா பின் அல்முகீரா பின் ஷுஃபா, ஹம்ஸா பின் அல்முகீரா பின் ஷுஃபா, அக்கார் பின் அல்முகீரா பின் ஷுஃபா, வர்ராத் அஸ்ஸகஃபீ அபூ ஸயீத், ஜுபைர் பின் ஹய்யா அஸ்ஸகஃபீ, அல்மிஸ்வர் பின் மக்ரமா பின் நவ்ஃபல், கைஸ் பின் அபீ ஹாஸிம், மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ, நாஃபிஃ பின் ஜுபைர் பின் முத்இம், ஆமிர் அஷ்ஷஅபீ, உர்வா பின் அஸ்ஸுபைர், அம்ர் பின் வஹ்ப் அஸ்ஸகஃபீ

வேறு பெயர்கள்: மூகீரா அஸ்ஸகஃபீ, மூகீரா அர்ரஃயீ, இப்னு அபீ ஆமிர்


ஆதாரம்: muslimscholars.info (166) · Should verify


حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنِ التَّيْمِيِّ، حَدَّثَنَا بَكْرٌ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ وَمَسَحَ نَاصِيَتَهُ – وَذَكَرَ – فَوْقَ الْعِمَامَةِ»، قَالَ: عَنِ الْمُعْتَمِرِ، سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ، وَعَلَى نَاصِيَتِهِ وَعَلَى عِمَامَتِهِ»، قَالَ بَكْرٌ: وَقَدْ سَمِعْتُهُ مِنَ ابْنِ الْمُغِيرَةِ


AbuDawood-Tamil-150.
AbuDawood-Shamila-150.
AbuDawood-JawamiulKalim-.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.