தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-281

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அஸ்மா (ரலி) அவர்களிடம் “எனக்கு இரத்தப்போக்கு அதிகமாக உள்ளது, என்ன செய் வது என்பதைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச்சொல்” என்று கோரினேன். (அவ்வாறே அஸ்மா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள்)
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மாதவிடாயில் வழக்கமாக எத்தனை நாள்கள் அமர்வாயோ அதே அளவு நாள்கள் உட்கார்ந்துவிடு. பிறகு குளித்து(விட்டுத் தொழுது)விடு” என்று பதிலளித்தார்கள்.

இந்த நபிமொழி எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:

“உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், பி அவரிடம் “(வழக்கமான) மாதவிடாய் நாள்களில் தொழுகையைத் தவிர்த்து விட்டு (வழக்கமான நாள்கள் முடிந்ததும்) குளித்துவிட்டுத் தொழுது கொள்” என்று கட்டளையிட்டார்கள் என உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இரத்தப்போக்கு அதிகமாகும் நிலைக்குள்ளானார்கள். இது குறித்து, நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அதற்கு அவர்கள், (வழக்கமான) மாதவிடாய் நாள் களில் தொழுகையைத் தவிர்க்கும் படி கட்டளையிட்டார்கள் என்று இப்னு உயய்னா (ரஹ்) அவர்கள் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் மூலம் ஆயிஷா (ரலி) கூறியதாக

அறிவிக்கிறார்கள்.

அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:

இப்னு உயய்னாவின் இந்தக் கூடுதல் தகவல் அவரின் தவறான எண்ணமாகும். (சில சமயம் குறிப் பிடுகிறார், சில சமயம் குறிப்பிடுவ தில்லை). ஸுஹ்ரீயின் மாணவர் களில் யாரும் இந்தக் கூடுதல் விஷயத்தைக் கூறவில்லை. ஸுஹ்ரீயின் மாணவர் சுஹைல் பின் அபீ ஸாலிஹ் மட்டும் கூடுதல் விஷயத்தைக் குறிப்பிடுகிறார். இப்னு உயய்னா வழியாக ஹுமைதீயும் அறிவிக்கிறார். அதிலும் இந்தக் கூடுதல் விஷயம் இடம்பெறவில்லை. மஸ்ருகின் மனைவி கமீர் பின்த் அம்ர் அறிவிப்பில், “அதிக இரத்தப் போக்குள்ளவள் (வழக்கமான) மாதவிடாய் நாள்களில் தொழுகையைத் தவிர்த்துவிடுவாள். பின்னர் குளித்துவிட்டுத் தொழுவாள்” என்று உள்ளது. மூன்றாம் அறிவிப்பில், “உம்மு ஹபீபா (ரலி) அவர்களை வழக்கமான மாதவிடாயின் நாள்களில் தொழுகையைத் தவிர்க்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று உள்ளது.

நான்காம் அறிவிப்பில், “உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள், அதிக இரத்தப் போக்கு (இஸ் திஹாளா) நிலைக்குள்ளாக்கப்பட் டார்கள். முந்தைய அறிவிப்பில் கூறப்பட்டது போன்றே நபி (ஸல்) சொன்னார்கள்” என்று உள்ளது.

ஐந்தாம் அறிவிப்பில், அதிக இரத்தப் போக்குடையவள் (வழக்க மான) மாதவிடாய் நாள்களில் தொழுகையைத் தவிர்த்துவிட்டு பிறகு குளித்துவிட்டுத் தொழுவாள் என்று உள்ளது.

ஆறாம் அறிவிப்பில், ஸவ்தா (ரலி) அவர்களுக்கு அதிக இரத்தப் போக்கு (இஸ்திஹாளா) ஏற் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மாதவிடாய் ஏற்படும் நாள்கள் கடந்தபின் குளித்துவிட்டுத் தொழ வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்று உள்ளது.

….

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் அஸ்மாவிடம் அல்லது அஸ்மா, பாத்திமா பின் அபீஹுபைஷிடம் (இரத்தப்போக்கு தொடர்பாக) நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு வேண்டியிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்கனவே வழக்கமாக மாதவிடாய் நாட்களில் (வணங்கு வதைவிட்டு ஒதுங்கி)யிருப்பது போல் (இந்நோய் ஏற்பட்டபின்) விலகியிருந்து பின் குளித்துக் கொள்வாராக! என்று பதிலளித்தார்கள். இவ்வாறு உர்வா பின் ஜுபைர் அறிவிக்கின்றார்.

ஜைனப் பின்த் உம்மு ஸலமாவிடமிருந்து உர்வா பின் ஜுபைர் வழியாக கதாதா அறிவிக்கும் போது அவரது (வழக்கமான) மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டுவிட்டு பிறகு குளித்து தொழும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு கட்டளையிட்டதாக தெரிவிக்கின்றார். கதாதா உர்வாவிடமிருந்து எதையுமே செவியுறவில்லை என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள். 

உம்மு ஹபீபா உதிரப்போக்குள்ளவராகி நபி (ஸல்) அவர்களிடம் வினவிய போது அவரது வழக்கமான மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டு விடும்படி அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள் என ஆயிஷா (ரலி) அறிவித்ததாக – இம்ரா – ஜுஹிரி மூலம் வரும் ஹதீஸில் இப்னு உஐனா கூடுதலாக அறிவிக்கின்றார்கள்.

மனனம் செய்த மாணவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களில் மேலே இடம்பெற்ற ஸுஹைல் பின் அபூசாலிஹ் அறிவித்த ஹதீஸை தவிர வேறெந்த ஹதீஸும் வராததால் இது இப்னு உஐனா கற்பனை கூற்றாகும்.

இப்னுஉஐனாவிடமிருந்துஇந்தஹதீஸைஹுமைத்அறிவிக்கையில்மாதவிடாய்நாட்களில்தொழுகையைவிட்டுவிடுஎன்றகருத்தைகுறிப்பிடவில்லை.

உதிரப்போக்குள்ளவள் தன் மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டுவிட்டு பிறகு குளிப்பாளாக என ஆயிஷா (ரலி) அறிவித்ததாக கமீர் அறிவிக்கின்றார்.

தன் (வழமையான) மாதவிடாய் கால அளவுக்கு உதிரப்போக்குள்ளவள் தொழுகையை விட்டு விடுமாறு உதிரப்போக்குள்ள பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். தன் தந்தை வழியாக அப்துர் ரஹ்மான் பின் காசிம் அறிவிக்கின்றார்.

உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது என நபி (ஸல்) கூறியதாக இக்ரிமா வழியாக அபூபஷ்ர் ஜஃபர் அறிவிக்கையில் மேலுள்ள ஹதீஸை போன்றே அறிவிக்கின்றார்.

தன் பாட்டனார் தன் தந்தை வழியாக அறிவிக்கும் அதிய்யி பின் சாபித்திடமிருந்து அபூயக்ளான் மூலம் ஷரீக் அறிவிக்கையில் உதிரப்போக்குள்ளவள் தன் வழமையான மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டு பிறகு குளித்து தொழுவாராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவிக்கின்றார்.

சவ்தாவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அவரது (வழமையான) நாட்கள் கழிந்ததும் குளித்து விட்டு தொழுவாராக! என்று கட்டளையிட்டார்கள் என அபூஜஃபர் வழியாக ஹக்கம் மூலம் அலா பின் முஸய்யப் அறிவிக்கின்றார்.

உதிரப்போக்குள்ள பெண் தன் (வழமையான) மாதவிடாய்நாட்கள்அளவுக்கு (வணக்கத்தை) விட்டு ஒதுங்கி இருப்பாராக என அலி (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வாயிலாக சயீத் பின் ஜுபைர் அறிவிக்கின்றார்.

இவ்வாறே இப்னு அப்பாஸ் வாயிலாக அம்மார், தல்க் ஆகியோர் அறிவிக்கின்றனர். இவ்வாறே அலி (ரலி)யிடமிருந்து மஃகல் அல்கஸ்அமீ அறிவிக்கின்றார். 

இவ்வாறே ஆயிஷா (ரலி) யிடமிருந்து மஸ்ரூக்கின் மனைவி கமீர் வழியாக ஷுஃபி அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

உதிரப்போக்குள்ளவள் தனது (வழமையான) மாதவிடாய் நாட்கள் அளவுக்கு தொழுகையை விட்டுக் கொள்ள வேண்டும் என்பது ஹசன் சயீத் பின் அல்முஸய்யிப், அதா, மக்ஹுல் இப்றாகீம், சாலிம் காஸிம் ஆகியோரின் கருத்தாகும்.

அடிக்குறிப்பு : (வழமையான) மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டு விட்டு என்று வருகிற அறிவிப்புக்கும் (வழமையான) மாதவிடாய் நாட்களில் (தொழுகையை) விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்று வருகிற அறிவிப்புக்கும் கருத்து அடிப்படையில் வார்த்தை வித்தியாசத்தைத் தவிர எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அறிவிப்பாளர்கள் வார்த்தையில் மாற்றமில்லாமல் அறிவிப்பதை பேணுதலாக கருதுகின்றார்கள் என்பதை இமாம் அபூதாவூதின் இந்த குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.

(அபூதாவூத்: 281)

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ يَعْنِي ابْنَ أَبِي صَالِحٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، حَدَّثَتْنِي فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ

أَنَّهَا أَمَرَتْ أَسْمَاءَ أَوْ أَسْمَاءُ حَدَّثَتْنِي أَنَّهَا أَمَرَتْهَا فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ، أَنْ تَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَمَرَهَا أَنْ تَقْعُدَ الْأَيَّامَ الَّتِي كَانَتْ تَقْعُدُ، ثُمَّ تَغْتَسِلُ»

قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ قَتَادَةُ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ اسْتُحِيضَتْ، ” فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْ تَدَعَ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلَ وَتُصَلِّيَ ” قَالَ أَبُو دَاوُدَ: لَمْ يَسْمَعْ قَتَادَةُ مِنْ عُرْوَةَ شَيْئًا وَزَادَ ابْنُ عُيَيْنَةَ، فِي حَدِيثِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ كَانَتْ تُسْتَحَاضُ، فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَمَرَهَا أَنْ تَدَعَ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا» قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا وَهْمٌ مِنْ ابْنِ عُيَيْنَةَ لَيْسَ هَذَا فِي حَدِيثِ الْحِفَاظِ عَنِ الزُّهْرِيِّ، إِلَّا مَا ذَكَر سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ وَقَدْ رَوَى الْحُمَيْدِيُّ هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ عُيَيْنَةَ لَمْ يَذْكُرْ فِيهِ: «تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا» وَرَوَتْ قَمِيرُ بِنْتُ عَمْرٍو زَوْجُ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ «الْمُسْتَحَاضَةُ تَتْرُكُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ» وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَهَا أَنْ تَتْرُكَ الصَّلَاةَ قَدْرَ أَقْرَائِهَا» وَرَوَى أَبُو بِشْرٍ جَعْفَرُ بْنُ أَبِي وَحْشِيَّةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ اسْتُحِيضَتْ، فَذَكَرَ مِثْلَهُ. وَرَوَى شَرِيكٌ، عَنْ أَبِي الْيَقْظَانِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «الْمُسْتَحَاضَةُ تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ وَتُصَلِّي» وَرَوَى الْعَلَاءُ بْنُ الْمُسَيِّبِ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي جَعْفَرٍ، أَنَّ سَوْدَةَ اسْتُحِيضَتْ، «فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَضَتْ أَيَّامُهَا اغْتَسَلَتْ وَصَلَّتْ» وَرَوَى سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنْ عَلِيٍّ، وَابْنِ عَبَّاسٍ «الْمُسْتَحَاضَةُ تَجْلِسُ أَيَّامَ قُرْئِهَا» وَكَذَلِكَ رَوَاهُ عَمَّارٌ مَوْلَى بَنِي هَاشِمٍ، وَطَلْقُ بْنُ حَبِيبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَكَذَلِكَ رَوَاهُ مَعْقِلٌ الْخَثْعَمِيُّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَذَلِكَ رَوَى الشَّعْبِيُّ، عَنْ قَمِيرَ امْرَأَة مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا. قَالَ أَبُو دَاوُدَ: وَهُوَ قَوْل الْحَسَنِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَعَطَاءٍ، وَمَكْحُولٍ، وَإِبْرَاهِيمَ، وَسَالِمٍ، وَالْقَاسِمِ، «أَنَّ الْمُسْتَحَاضَةَ تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا» قَالَ أَبُو دَاوُدَ: «لَمْ يَسْمَع قَتَادَة مِن عُرْوَة شَيْئًا»


Abu-Dawood-Tamil-243.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-281.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.