தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5081

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

ஒருவர் காலையிலும் மாலையிலும், “ஹஸ்பியல்லாஹ், லாஇலாஹ இல்லா ஹுவ, அலைஹி தவக்கல்து, வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்” (பொருள்: எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்) என்று ஏழு தடவை கூறினால் அவரின் (அனைத்து) பிரச்சனைகளுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருப்பான்.

(இவ்வாறு அவர் கூறுவதில்) அவர் உண்மையாளராக இருந்தாலும் சரி! அல்லது அவர் பொய்யராக இருந்தாலும் சரி! என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்முத்தர்தா (ரலி)

(அபூதாவூத்: 5081)

حَدَّثَنَا يَزِيدُ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ بْنُ مُسْلِمٍ الدِّمَشْقِيُّ، وَكَانَ مِنْ ثِقَاتِ الْمُسْلِمِينَ مِنَ الْمُتَعَبِّدِينَ، قَالَ: حَدَّثَنَا مُدْرِكُ بْنُ سَعْدٍ، قَالَ: يَزِيدُ شَيْخٌ ثِقَةٌ عَنْ يُونُسَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

«مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى، حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، سَبْعَ مَرَّاتٍ، كَفَاهُ اللَّهُ مَا أَهَمَّهُ صَادِقًا كَانَ بِهَا أَوْ كَاذِبًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5081.
Abu-Dawood-Alamiah-4418.
Abu-Dawood-JawamiulKalim-4420.




ஆய்வின் சுருக்கம்:


  • இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியின் கருத்து சரியில்லை என்பதால் இதை சிலர் விமர்சித்துள்ளனர்.
  • வேறு சிலர், இதற்கு கீழ்க்கண்டவாறு பொருள் கூறியுள்ளனர்:

(இவ்வாறு அவர் கூறுவதில்) அவர் உண்மையாளராக-உள்ளத்தில் உறுதியுள்ளவராக இருந்தாலும் சரி! அல்லது அவர் பொய்யராக-உள்ளத்தில் உறுதியற்றவராக இருந்தாலும் சரி! என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


விரிவான தகவல்:

  • இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
    இறப்பு ஹிஜ்ரி 774
    வயது: 74
    அவர்கள் இதை நபியின் சொல்லாக வந்துள்ளதையும், மேற்கண்ட செய்தியின் இரண்டாவது பகுதியையும் முன்கர் என்று கூறியுள்ளார். அவர் அதற்கான காரணத்தை தெளிவாக கூறவில்லை.

تفسير ابن كثير – ت السلامة (4/ 244):
وقد روى أبو داود، عن يزيد بن محمد، عن عبد الرزاق بن عمر -وقال: كان من ثقات المسلمين من المتعبدين، عن مدرك بن سعد -قال يزيد: شيخ ثقة -عن يونس بن ميسرة، عن أم الدرداء، عن أبي الدرداء قال: من قال إذا أصبح وإذا أمسى: ‌حسبي ‌الله لا إله إلا هو، عليه توكلت، وهو رب العرش العظيم، ‌سبع مرات، إلا كفاه الله ما أهمه.


وقد رواه ابن عساكر في ترجمة “عبد الرزاق بن عمر” هذا، من رواية أبى زُرْعَة الدمشقي، عنه، عن أبي سعد مُدْرِك بن أبي سعد الفزاري، عن يونس بن ميسرة بن حليس، عن أم الدرداء، سمعت أبا الدرداء يقول: ما من عبد يقول: ‌حسبي ‌الله، لا إله إلا هو، عليه توكلت، وهو رب العرش العظيم، ‌سبع مرات، صادقا كان بها أو كاذبا، إلا كفاه الله ما هَمَّه.
وهذه زيادة غريبة. ثم رواه في ترجمة عبد الرزاق أبي محمد، عن أحمد بن عبد الله بن عبد الرزاق، عن جده عبد الرزاق بن عمر، يسنده فرفعه فذكر مثله بالزيادة. وهذا منكر، والله أعلم.

இதற்கான காரணங்கள் கீழ்கண்டவைகளாக இருக்கலாம்:

1 . அவருக்கு கிடைத்த அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நூலின் பிரதியில் இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதி இல்லை என்றுத் தெரிகிறது.

2 . இப்னுஸ் ஸன்னீ அவர்கள், இந்த கூடுதல் வார்த்தை இல்லாமல் அறிவித்துள்ளார். (என்றாலும் இதை நபியின் சொல்லாக பதிவு செய்துள்ளார்)

3 . நபியின் சொல்லாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஸ்ஸாக்
என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். மற்ற 3 பேர் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

(நூல்: தஃப்ஸீரு இப்னு கஸீர்-4/244)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இதை முன்கர் என்றே குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்துல்லாஹ்
    என்பவரின் நிலை தெரியவில்லை என்பதாலும், மற்ற 3 பேர் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்பதாலும் ஆகும். சில குறிப்புகளில் இதை மவ்ளூஃ என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் கூறியதாக உள்ளது. (ஆனால் இதற்கு சரியான காரணம் கூறப்படவில்லை.)

(நூல்: அள்ளயீஃபா-5286)

ஆனால் இவரை தம்மாம் பின் முஹம்மத் அவர்களும், இப்னு அஸாகிரும் பலமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இவர் விசயத்தில் பிரச்சனை இல்லை.


  • இந்தச் செய்தி பலவீனமானது என்பதற்கு யாஸிர் ஃபத்ஹீ என்ற அறிஞர் கூறும் முக்கிய காரணங்கள்:

1 . முத்ரிக் பின் ஸஃதிடமிருந்து அறிவிக்கும் ஹிஷாம் பின் அம்மார் இதை முர்ஸலாக அறிவித்துள்ளார். அப்துர்ரஸ்ஸாகை விட ஹிஷாம் பின் அம்மார் முத்ரிக் பின் ஸஃதுடன் நீண்ட கால தொடர்புடையவர். எனவே ஹிஷாம் பின் அம்மாரின் செய்தியே முன்னுரிமை பெற்றதாகும்.

(ஆனால் ஹிஷாம் பின் அம்மார் கடைசிக் காலத்தில் மூளைக் குழம்பியவர் என்ற விமர்சனத்திற்குரியவர் என்பதால் இதை நாம் ஏற்கமுடியாது.)

2 . இதில் வரும் ராவீ-44002-முத்ரிக் பின் ஸஃத் பற்றி அபூமுஸ்ஹிர் அவர்கள் சுமாரானவர் என்றும், இவரிடமிருந்து அறியப்பட்ட செய்திகளை ஆதாரமாக ஏற்கலாம் என்றும் கூறியுள்ளார். அறியப்பட்ட செய்தி என்றால் இவரைப் போன்று மற்றவர்களும் அறிவித்திருக்க வேண்டும் என்பதாகும். யூனுஸ் பின் மைஸராவிடமிருந்து முத்ரிக் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார் என்பதால் இது அறியப்பட்ட செய்தி அல்ல.


  • முன்திரீ இமாம் இந்தச் செய்தி நபித்தோழரின் சொல் என்பதே உண்மை என்பதை குறிப்பிட்டுவிட்டு இதை நபித்தோழர் சுயமாக கூறியிருக்கமாட்டார் என்பதால் இதுவும் மர்ஃபூவான செய்தி என்றும், அறிவிப்பாளர்தொடர் சரியானது என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அத்தர்ஃகீபு வத்தர்ஹீப்-1/306)


  • ஸாதுல் மஆதின் செய்திகளுக்கு தக்ரீஜ் கூறிய ஷுஐப் அல்அர்னாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அப்துல்காதிர் அல்அர்னாவூத் ஆகியோர் இப்னுஸ் ஸன்னியின் அறிவிப்பாளர்தொடரை மட்டும் சரியான அறிவிப்பாளர்தொடர் என்றும், அபூதாவூதில் கூறப்பட்டுள்ள 2 வது பகுதியை (இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
    இறப்பு ஹிஜ்ரி 774
    வயது: 74
    அவர்கள் கூறியதின்படி) முன்கர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: ஸாதுல் மஆத்-2/342)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . யஸீத் பின் முஹம்மத்

3 . அப்துர்ரஸ்ஸாக் பின் உமர் பின் முஸ்லிம்

4 . முத்ரிக் பின் ஸஃத்

5 . யூனுஸ் பின் மைஸரா

6 . உம்முத்தர்தா (ரலி)

7 . அபுத்தர்தா (ரலி)


1 . இந்தச் செய்தியை அப்துர்ரஸ்ஸாக் பின் உமர் பின் முஸ்லிம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஸீத் பின் முஹம்மத், அபூஸுர்ஆ திமிஷ்கீ, இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் ஆகிய 3 பேர் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

2 . இந்தச் செய்தியை அப்துர்ரஸ்ஸாக் பின் உமர் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் பேரன் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஸ்ஸாக்
என்பவர் மட்டும் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

இவற்றில் யஸீத் பின் முஹம்மத் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரைத் தவிர மற்ற அனைத்திலும் விமர்சனம் உள்ளது.


1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

நபித்தோழரின் சொல்லாக வந்துள்ளவை:

  • யஸீத் பின் முஹம்மத், அபூஸுர்ஆ, இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் —> அப்துர்ரஸ்ஸாக் பின் உமர் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —>
    முத்ரிக் பின் ஸஃத் —> யூனுஸ் பின் மைஸரா —> உம்முத்தர்தா (ரலி) —> அபுத்தர்தா (ரலி) 

பார்க்க: அபூதாவூத்-5081, தாரீகு திமிஷ்க்-36/149, 36/150,


  • தாரீகு திமிஷ்க்-36/149.

تاريخ دمشق لابن عساكر (36/ 149):
أخبرنا أبو الحسن الفرضي نا عبد العزيز الصوفي أنا أبو محمد بن أبي نصر أنا أبو الميمون نا أبو زرعة حدثني عبد الرزاق بن عمر بن مسلم نا مدرك بن أبي سعد عن يونس بن ميسرة بن حلبس عن أم الدرداء عن أبي الدرداء قال ما من عبد يقول حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم سبع مرات صادقا كان بها أو كاذبا إلا كفاه الله ما همه

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபுல்காஸிம்-இப்னு அஸாகிர்

2 . அபுல்ஹஸன் அல்ஃபர்ளீ

3 . அப்துல்அஸீஸ் அஸ்ஸூஃபீ

4 . அபூமுஹம்மத் பின் அபூநஸ்ர்

5 . அபுல்மைமூன்

6 . அபூஸுர்ஆ

7 . அப்துர்ரஸ்ஸாக் பின் உமர் பின் முஸ்லிம்

8 . முத்ரிக் பின் ஸஃத்

9 . யூனுஸ் பின் மைஸரா

10 . உம்முத்தர்தா (ரலி)

11 . அபுத்தர்தா (ரலி)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் சிலரின் நிலை … அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


  • தாரீகு திமிஷ்க்-36/149, 150.

أخبرنا أبو الحسن أيضا نا عبد العزيز أنا تمام بن محمد أخبرني أبو زرعة وأبو بكر ابنا عبيد الله بن أبي دجانة قالا نا محمود بن أبي زرعة نا إبراهيم بن عبد الله بن صفوان نا عبد الرزاق بن عمر نا أبو سعد مدرك بن أبي سعد الفزاري عن يونس بن ميسرة بن حلبس عن أم الدرداء قال سمعت أبا الدرداء يقول من قال حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم سبع مرات كفاه الله ما أهمه كان به صادقا أو كاذبا وسيأتي له حديث مسند في ترجمة عبد الرزاق غير منسوب.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபுல்காஸிம்-இப்னு அஸாகிர்

2 . அபுல்ஹஸன் அல்ஃபர்ளீ

3 . அப்துல்அஸீஸ் அஸ்ஸூஃபீ

4 . தம்மாம் பின் முஹம்மத்

5 . அபூஸுர்ஆ பின் உபைதுல்லாஹ், 6 . அபூபக்ர் பின் உபைதுல்லாஹ்,

7 . மஹ்மூத் பின் அபூஸுர்ஆ

8 . இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான்

9 . அப்துர்ரஸ்ஸாக் பின் உமர் பின் முஸ்லிம்

10 . முத்ரிக் பின் ஸஃத்

11 . யூனுஸ் பின் மைஸரா

12 . உம்முத்தர்தா (ரலி)

13 . அபுத்தர்தா (ரலி)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் சிலரின் … நிலை அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


நபியின் சொல்லாக வந்துள்ளவை:

  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்துல்லாஹ் —> அப்துர்ரஸ்ஸாக் பின் உமர் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —>
    முத்ரிக் பின் ஸஃத் —> யூனுஸ் பின் மைஸரா —> உம்முத்தர்தா (ரலி) —> அபுத்தர்தா (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அமலுல் யவ்மி வல்லைலா-71, தாரீகு திமிஷ்க்-36/193,


  • அமலுல் யவ்மி வல்லைலா-71.

عمل اليوم والليلة لابن السني (ص: 67)

71 – حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ الْجَرْمِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّزَّاقِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنِي جَدِّي عَبْدُ الرَّزَّاقِ بْنُ مُسْلِمٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مُدْرِكُ بْنُ سَعْدٍ أَبُو سَعْدٍ، قَالَ: سَمِعْتُ يُونُسَ بْنَ حَلْبَسٍ، يَقُولُ: سَمِعْتُ أُمَّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ فِي كُلِّ يَوْمٍ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، سَبْعَ مَرَّاتٍ، كَفَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّهُ مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ “

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத்-இப்னுஸ் ஸன்னீ

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸுலைமான் அல்ஜர்மீ

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஸ்ஸாக்

4 . அப்துர்ரஸ்ஸாக் பின் உமர் பின் முஸ்லிம்

5 . முத்ரிக் பின் ஸஃத்

5 . யூனுஸ் பின் மைஸரா பின் ஹல்பஸ்

6 . உம்முத்தர்தா (ரலி)

7 . அபுத்தர்தா (ரலி)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-3987-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸுலைமான் அல்ஜர்மீ
என்பவரின் நிலை அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


  • தாரீகு திமிஷ்க்-36/193.

تاريخ دمشق لابن عساكر (36/ 193):
4040 -‌‌ عبد الرزاق أبو محمد روى عن أحمد بن عبد الله بن عبد الرزاق روى عنه أبو العباس بن السمسار أخبرنا أبو نصر غالب بن أحمد بن المسلم أنا أبو الحسن علي بن الحسن بن عبد السلام بن أبي الحزور الأزدي أنا أبو الحسن محمد بن عوف بن أحمد المزني نا محمد بن موسى نا أبو محمد عبد الرزاق نا أحمد بن عبد الله بن عبد الرزاق المقرئ نا جدي عبد الرزاق بن عمر نا مدرك بن أبي سعد عن يونس بن ميسرة عن أم الدرداء عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال من قال كل يوم حين يصبح وحين يمسي لا إله إلا الله عليه توكلت وهو رب العرش العظيم كفاه الله ما أهمه من أمر الدنيا وأمر الآخرة صادقا كان بها أو كاذبا. كذا في الأصل عبد الرزاق غير منسوب 

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

….

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஸ்ஸாக்

4 . அப்துர்ரஸ்ஸாக் பின் உமர் பின் முஸ்லிம்

5 . முத்ரிக் பின் ஸஃத்

5 . யூனுஸ் பின் மைஸரா பின் ஹல்பஸ்

6 . உம்முத்தர்தா (ரலி)

7 . அபுத்தர்தா (ரலி)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33129-அபூநஸ்ர்-ஃகாலிப் பின் அஹ்மத் என்பவரிடமிருந்து இப்னு அஸாகிர் அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும், இவர் ஹதீஸ் உடையவர் அல்ல என்று இப்னு அஸாகிர் அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதில் வரும் சிலரின் நிலை அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


2 . யூனுஸ் பின் மைஸரா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அத்துஆ-தப்ரானீ-1038.

الدعاء للطبراني (ص: 316)
1038 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَيُّوبَ بْنِ حَذْلَمِ الدِّمَشْقِيُّ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا مُدْرِكُ بْنُ أَبِي سَعْدٍ الْفَزَارِيُّ، عَنْ يُونُسَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ: حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَأَكْفِيَنَّ عَبْدِي صَادِقًا كَانَ أَوْ كَاذِبًا “

இது முர்ஸலான செய்தி.


அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
பிரதிகள் பற்றிய விளக்கம்:

அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் ஹதீஸைத் தொகுத்து அதை பிறருக்கு அறிவித்தும் உள்ளார்கள். தன் நூலிலிருந்து மற்றவர்கள் பிரதி எடுத்து அதை அறிவிப்பதற்கும் அனுமதி கொடுத்துள்ளார்கள். ஹதீஸ்களை சிறிது சிறிதாக அவர்கள் தொகுத்துவந்ததால் சிலர் குறைந்த ஹதீஸ்களையே அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாமிடம் கேட்டிருப்பார்கள். அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் ஆரம்பத்தில் சேர்த்த சில செய்திகளை பிறகு நீக்கியிருப்பார்கள். அதை அறிவித்திருக்கமாட்டார்கள்.

இதனால் தான் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாமிடமிருந்து ஹதீஸை எழுதிக் கொண்டவர்களின் ஹதீஸ்வரிசைகள் மாறுபட்டிருக்கும். இவ்வாறே ஹதீஸின் எண்ணிக்கையில் கூடுதல் குறைவு இருக்கும்.

6 பிரதிகள் பற்றி சுருக்கமான விவரம்:

1 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் எழுதி வைத்திருந்த பிரதி. இது 327 பக்கங்கள் கொண்டது.

இதில் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாமிடமிருந்து அறிவித்த 5 அறிவிப்பாளர்கள் வரை அறிவிப்பாளர்தொடர் உள்ளது. இந்த பிரதியின் அஸல் துருக்கியின் கோப்ருலு நூலகத்தில் உள்ளது. இதைக் குறிப்பிட (أ) இந்த அடையாளம் கூறப்படும்.

2 . மதீனாவின் மக்தபதுல் மர்கஸிய்யா எனும் நூலகத்தில் உள்ள பிரதி. இதைக் குறிப்பிட (ب) இந்த அடையாளம் கூறப்படும்.

3 . திமிஷ்கின் மக்தபதுள் ளாஹிரிய்யா எனும் நூலகத்தில் உள்ள பிரதி. இதைக் குறிப்பிட (ج) இந்த அடையாளம் கூறப்படும்.

4 . பாரீஸ் நகரத்தின் மக்தபதுல் வதனிய்யா எனும் நூலகத்தில் உள்ள பிரதி. இதைக் குறிப்பிட (د) இந்த அடையாளம் கூறப்படும்.

5 . அமெரிக்காவின் பிரின்ஸ்டன் எனும் நூலகத்தில் உள்ள பிரதி. இதைக் குறிப்பிட (هـ) இந்த அடையாளம் கூறப்படும்.

6 . மதீனாவின் மக்தபதுல் மஹ்மூதிய்யா எனும் நூலகத்தில் உள்ள பிரதி. இதைக் குறிப்பிட (و) இந்த அடையாளம் கூறப்படும்.


மேற்கண்ட செய்தி அமெரிக்காவின் பிரின்ஸ்டன் எனும் நூலகத்தில் உள்ள பிரதியில் (هـ) உள்ள செய்தியாகும். மேலும் இது அபூபக்ர் பின் தாஸா அவர்களின் அறிவிப்பில் உள்ளது என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: நஜாஇஜுல் அஃப்கார்-2/400)

இப்னு தாஸா அவர்கள் இதை அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாமிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறாமல் தஃலீக்காக கூறியுள்ளார் என்ற தகவலை ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.