தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-345

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஒருவர் ஜும்ஆ நாளன்று (தலையைக்) கழுவி, குளித்து முதல் நேரத்திலேயே புறப்பட்டு சென்று ஆரம்ப சொற்பொழிவையும் பெற்று விடுகின்றார். வாகனத்தில் செல்லாமல் நடந்தே செல்கின்றார். இமாமுக்கு அருகில் சென்று சொற்பொழிவை வீணாக்காமல் செவிமடுக்கின்றார் என்றால் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு வருடம் நோன்பு நோற்ற, நின்று தொழுத வணக்கத்தின் கூலி கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் அஸ்ஸகபீ (ரலி)

(அபூதாவூத்: 345)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْجَرْجَرَائِيُّ حُبِّي، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الْأَوْزَاعِيِّ، حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ، حَدَّثَنِي أَبُو الْأَشْعَثِ الصَّنْعَانِيُّ، حَدَّثَنِي أَوْسُ بْنُ أَوْسٍ الثَّقَفِيُّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ، ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ، وَمَشَى وَلَمْ يَرْكَبْ، وَدَنَا مِنَ الْإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-345.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-292.




(குறிப்பு: ஹதீஸின் கருத்து:

غَسَّلَ , وَاغْتَسَلَ என்ற இரண்டு வார்த்தைகள் குறித்து பலரும் பல பொருள்களைக் கூறியிருந்தாலும் மற்ற சான்றுகளின்படி ஒரு பொருளே சரியானதாகும்.

1 . غسل வில் உள்ள ஸீன் எழுத்துக்கு ஷத் செய்யாமல் ஃகஸல என்று மொழிவதின்படி தலையைக் கழுவி என்றும், اغتسل என்பதற்கு குளித்தல் என்றும் சில அறிவிப்பாளர்கள் விளக்கம் கூறியுள்ளனர். ஹதீஸ் அறிவிப்பாளர்களே இவ்வாறு கூறிவிட்டதால் மற்றவர்கள் மொழி அடிப்படையில் கூறும் விளக்கத்தை பார்க்கத் தேவையில்லை. இதற்கு வேறு சில செய்திகளையும் ஆதாரமாகக் காட்டமுடியும்.

2 . வேறு சிலர் ஒரே பொருள் கொண்ட வார்த்தைகளை இரு தடவை கூறுவது உறுதி கட்டாயம் என்ற கருத்தைத் தரும் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கு அடுத்துள்ள வார்த்தைகளை கவனிக்கும்போதும் இதைப் புரிந்துக் கொள்ளலாம். நடந்தார்; வாகனத்தில் செல்லவில்லை, ஜுமுஆ உரையைக் செவிமடுத்தார்; வாய்மூடி இருந்தார்…வீணான காரியத்தில் ஈடுபடவில்லை…இதுபோன்ற வார்த்தை அமைப்புகளை பயன்படுத்துவதும் அரபியர்களிடம் உள்ள ஒரு வழக்கமாகும்.

3 . மனைவியுடன் சேர்ந்து, பிறகு மனைவியை குளிக்க வைத்தல் என்று சிலர் பொருள் கூறியுள்ளனர். இதற்கு ஹதீஸில் எந்தச் சான்றும் இல்லை.


بكر ابتكر என்பதற்கு அதிகாலையில் செல்லுதல், செய்தல் என்ற பொருள் இருந்தாலும் ஒரு செயலை ஆரம்பத்தில் செய்வதற்கும் இவ்வாறு கூறப்படும். எனவே பகர என்பதற்கு ஜுமுஆவின் ஆரம்ப நேரத்தில் செல்வதைக் குறிக்கும் என்றும், ابتكر என்பதற்கு ஜுமுஆ உரையை முதலிலிருந்தே செவியேற்பதைக் குறிக்கும் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.)


3 . இந்தக் கருத்தில் அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபுல்அஷ்அஸ் —> அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, அபூதாவூத்-345 , திர்மிதீ-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, இப்னு குஸைமா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,  ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,

  • உபாதா பின் நுஸைய்—> …முஹம்மத் பின் ஸயீத்… —> அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-346 , அல்முஃஜமுல் கபீர்-,

  • அபுல்அஷ்அஸ் —> அம்ர் பின் மர்ஸத் —> அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,

  • ஸாலிஹ் —> ஹஸன் பஸரீ —> அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,


  • உஸ்மான் அஷ்ஷாமீ —> அபுல்அஷ்அஸ் —> அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி) —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


 

 

 

மேலும் பார்க்க: புகாரி-883 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.