பாடம் : 201
ஜமாஅத்துடன் தொழுதவர் இன்னொரு ஜமாஅத் நடக்கும் இடத்திற்கு சென்றால் திரும்ப தொழவேண்டுமா ?
“பலாத்’ என்ற இடத்தில் மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது நீங்கள் அவர்களுடன் சேர்ந்து தொழவில்லையா? என்று கேட்டதற்கு, நான் தொழுதுவிட்டேன். ஒரு தொழுகையை ஒரே நாளில் இரண்டு தடவைகள் நீங்கள் தொழ வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று இப்னுஉமர் (ரலி) பதிலளித்தார் என மைமூனாவின் விடுதலை பெற்ற அடிமை தெரிவிக்கின்றார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீயில் இடம் பெறுகின்றது.
(அபூதாவூத்: 579)201- بَابٌ إِذَا صَلَّى فِي جَمَاعَةٍ ثُمَّ أَدْرَكَ جَمَاعَةً أَيُعِيدُ
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ يَعْنِي مَوْلَى مَيْمُونَةَ، قَالَ
أَتَيْتُ ابْنَ عُمَرَ عَلَى الْبَلَاطِ وَهُمْ يُصَلُّونَ، فَقُلْتُ: أَلَا تُصَلِّي مَعَهُمْ، قَالَ: قَدْ صَلَّيْتُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا تُصَلُّوا صَلَاةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ»
AbuDawood-Tamil-579.
AbuDawood-Shamila-579.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்