மதீனாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை சவாரி செய்த போது குதிரை அவர்களை பேரீத்த மரத்திற்கு அடியில் தள்ளிவிட்டது. இதனால் அவர்களுடைய கால் பிசகி விட்டது. அவர்கள் நாங்கள் உடல் நலம் விசாரிக்க வந்தோம். அப்போது அவர்களை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரிய அறையில் உட்கார்ந்து தொழக் கண்டோம். நாங்களும் அவர்களுக்குப் பின் நின்று தொழுதோம். அவர்கள் எங்களிடம் (ஆட்சேபம் தெரிவிக்காமல்) அமைதியாக இருந்து விட்டார்கள். பிறகு மீண்டும் ஒருமுறை அவர்களிடம் நாங்கள் உடல் நலம் விசாரிக்க வந்தோம். அப்போது கடமையான தொழுகையை அவர்கள் தொழுதார்கள். நாங்கள் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதோம். அப்போது அவர்கள் எங்களிடம் சமிக்ஞை செய்ததும் நாங்கள் உட்கார்ந்து விட்டோம். தொழுகையை முடித்ததும் இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள். அவர்கள் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். பாரசீக மக்கள் தாங்கள் தலைவர்களிடம் நடந்து கொள்வது கோல் நீங்கள் நடந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னார்கள் என ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்.
குறிப்பு : சுருக்கமாக இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவாகியுள்ளது.
(அபூதாவூத்: 602)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، وَوَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ
رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا بِالْمَدِينَةِ فَصَرَعَهُ عَلَى جِذْمِ نَخْلَةٍ فَانْفَكَّتْ قَدَمُهُ، فَأَتَيْنَاهُ نَعُودُهُ، فَوَجَدْنَاهُ فِي مَشْرُبَةٍ لِعَائِشَةَ يُسَبِّحُ جَالِسًا، قَالَ: فَقُمْنَا خَلْفَهُ فَسَكَتَ عَنَّا، ثُمَّ أَتَيْنَاهُ مَرَّةً أُخْرَى، نَعُودُهُ فَصَلَّى الْمَكْتُوبَةَ جَالِسًا، فَقُمْنَا خَلْفَهُ فَأَشَارَ إِلَيْنَا، فَقَعَدْنَا، قَالَ: فَلَمَّا قَضَى الصَّلَاةَ، قَالَ: «إِذَا صَلَّى الْإِمَامُ جَالِسًا فَصَلُّوا جُلُوسًا، وَإِذَا صَلَّى الْإِمَامُ قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَلَا تَفْعَلُوا كَمَا يَفْعَلُ أَهْلُ فَارِسَ بِعُظَمَائِهَا»
AbuDawood-Tamil-602.
AbuDawood-Shamila-602.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்