நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது?. வெயில் காலத்தில் மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 4208)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَا لِي، وَلِلدُّنْيَا، إِنَّمَا مَثَلِي وَمَثَلُ الدُّنْيَا كَمَثَلِ رَاكِبٍ، قَالَ فِي ظِلِّ شَجَرَةٍ فِي يَوْمٍ صَائِفٍ، ثُمَّ رَاحَ وَتَرَكَهَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-3991.
Musnad-Ahmad-Shamila-4208.
Musnad-Ahmad-Alamiah-3991.
Musnad-Ahmad-JawamiulKalim-4065.
إسناده حسن رجاله ثقات عدا عبد الرحمن بن عبد الله المسعودي وهو صدوق اختلط قبل موته وضابطه أن من سمع منه ببغداد فبعد الاختلاط ، رجاله رجال البخاري (الجوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அல்மஸ்வூதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் கொள்ளுப் பேரன்) கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-47693-வகீஉ பின் ஜர்ராஹ் இவர் மூளைக் குழம்புவதற்கு முன் செவியேற்றவர் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார். (நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/282)
எனவே இது சரியான செய்தியாகும்…
மேலும் பார்க்க: திர்மிதீ-2377 .
சமீப விமர்சனங்கள்